மேலும் அறிய

Headlines Today, 4 Dec: தமிழகத்தில் ஒமிக்ரான் பரவவில்லை.. தேர்வுகளில் தமிழ் கட்டாயம்...செல்போனில் அதிக பண பரிவர்த்தனை..இன்னும் பல..!

கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

* ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டுக்குள் இன்னும் பரவவில்லை என்றும், சென்னை, திருச்சியில் இந்த தொற்று உறுதியானதாக சமூகவலைதளங்களில் பரப்பப்படும் தகவல் தவறு எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

* தமிழ்நாடு அரசின் அனைத்து பணியிடங்களிலும், 100% தமிழக இளைஞர்களையே நியமிக்கும் பொருட்டு, அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கட்டாயத் தமிழ்த் தாளை அறிமுகப்படுத்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

* தமிழ்நாட்டு பள்ளிகளில் ஓமைக்ரான் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

* தமிழ்நாட்டில் நேற்று 711 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 759 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 9 பேர் உயிரிழந்தனர்.

* அதிமுக நிர்வாகிகள் தேர்தல் நடத்த தடை இல்லை  - ஓபிஎஸ், இபிஎஸ் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியா:

* மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு மத்திய அரசு எப்போது இழப்பீடு தரும் என நாடாளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயல் தலைவருமான ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.     

* கடந்த ஆண்டில் ஏடிஎம்மில் எடுத்ததை விட செல்போனில் அதிக பண பரிவர்த்தனை நடந்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.

* விக்கி கெளஷல் - கேத்ரினா கைப் ஜோடியின் திருமணத்திற்கு கொரோனா தடுப்பூசி 2 டோஸ்களும் செலுத்திக்கொண்டவர்கள் 120 பேருக்கு மட்டுமே அனுமதி என்று ராஜஸ்தான் மாநிலம் மதோபூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

* புதுச்சேரிக்கு மத்திய அரசிடமிருந்து விரைவில் நிவாரண உதவி - அமைச்சர் நமச்சிவாயம் தகவல்

* பெங்களூருவில் ஒமிக்ரான் தொற்று பாதித்த நபர் தமிழக-கர்நாடக எல்லையான ஜூஜூவாடி பகுதிக்கு அருகில் வசித்து வந்த நபர் என்பது தெரியவந்துள்ளது.

உலகம்:

* ஆஸ்திரியா நாட்டில் காயமடைந்த காலுக்கு பதிலாக தவறுதலாக நல்ல காலை ஆபரேஷன் செய்து அகற்றிய மருத்துவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. 

* மத நிந்தனை என்ற பெயரில் இலங்கையைச் சேர்ந்த பிரியந்த தியவதன என்பவர் பாகிஸ்தான் நாட்டில் எரித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. 

விளையாட்டு:

* நியூசிலாந்துக்கு எதிரான மும்பை டெஸ்டில் இந்திய அணியின் முதல் இன்னிங்சில் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் சதமடித்த அசத்தியுள்ளார்.

* நியூசிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் நாளான நேற்று இந்திய அணி ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்தது. மயங்க் அகர்வாலின் 120 ரன்களுடன், விருத்திமான் சஹா 25 ரன்களுடன் களத்தில் உள்ளனர். 

மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொட

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்?  டாப் 10 செய்திகள்
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்? டாப் 10 செய்திகள்
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Seeman meets Rajini : ரஜினி வீட்டுக்கே போன சீமான் 1 மணி நேரம் பேசியது என்ன?விஜய்க்கு வைக்கும் செக்!DMK MP Meeting : அதானி To வக்பு வாரியம் நெருங்கும் குளிர்கால கூட்டத்தொடர் SCENE-க்கு வந்த ஸ்டாலின்”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்?  டாப் 10 செய்திகள்
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்? டாப் 10 செய்திகள்
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
Anna University: அண்ணா பல்கலை. பேராசிரியர்களை குத்தகைக்கு வாங்குவதா? தற்கொலைக்கு சமமான முடிவு; எழும் கண்டனங்கள்!
Anna University: அண்ணா பல்கலை. பேராசிரியர்களை குத்தகைக்கு வாங்குவதா? தற்கொலைக்கு சமமான முடிவு; எழும் கண்டனங்கள்!
அதானியின் ஒப்பந்தங்கள் கேன்சல்..! கென்ய அதிபர் அதிரடி..!
அதானியின் ஒப்பந்தங்கள் கேன்சல்..! கென்ய அதிபர் அதிரடி..!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Embed widget