Cheetah vs Leopard : சிவிங்கிப்புலிக்கும், சிறுத்தைக்கும் என்ன வித்தியாசம்..? எப்படி கண்டுபிடிப்பது..? இது தெரியுமா?
மத்திய பிரதேசத்தின் வனப்பகுதியில் நமீபியாவில் இருந்து கொண்டு வந்து விடப்பட்டுள்ள சிவிங்கிப்புலிகளால் 70 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியாவில் சிவிங்கப்புலிகளின் அத்தியாயம் தொடங்கியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் வனப்பகுதியில் 8 சிவிங்கிப்புலிகளை பிரதமர் மோடி விடுவித்து, இந்தியாவில் 70 ஆண்டுகளுக்கு பிறகு சிவிங்கப்புலிகளின் அத்தியாயத்தை மீண்டும் தொடங்கி வைத்துள்ளார்.
மத்திய பிரதேசத்தின் வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது சிவிங்கிப்புலியா? சிறுத்தையா? என பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்டு மத்திய பிரதேசத்தின் வனப்பகுதியில் விடப்பட்டது சிவிங்கப்புலிகள் ஆகும். சிறுத்தையும், சிவிங்கப்புலிகளும் பொதுவாக பார்க்கும்போது ஒரே மாதிரி தோற்றத்தை கொண்டவைகள் ஆகும். ஆனால், சற்று உன்னிப்பாக கவனித்தால் இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகளை எளிதில் காணலாம்.
- சிறுத்தைகள் மஞ்சள் நிறத் தோலை கொண்டவையாக இருக்கும். ஆனால், சிவிங்கப்புலிகள் மஞ்சள் நிற பழுப்புத் தோலைக் கொண்டிருக்கும்.
- சிறுத்தைகளின் உடலில் கருப்பு நிற வளையங்கள் இருக்கம். ஆனால், இந்த வளையங்கள் உள்ளே பழுப்பு நிறத்தில் காட்சி அளிக்கும். ஆனால், சிவிங்கப்புலிகள் உடலில் உள்ள வளையங்கள் முழுவதும் கருப்பு நிறுத்தில் இருக்கும்.
- சிறுத்தைகள் முகம் உறுதியாகவும், படர்ந்தும் காணப்படும். ஆனால், சிவிங்கப்புலிகள் வட்டமாக முகம் கொண்டிருக்கும். இவற்றின் கண்களில் இருந்து வாய்ப்பகுதி வரை கருப்புக்கோடு இருக்கும்.
- சிறுத்தைகளின் பாதங்கள் பூனைகளின் பாதங்களைப் போல அமைந்திருக்கும். அவற்றின் பாதங்கள் உள்ளிழுக்கும் அமைப்பு கொண்டவை. அதனால்தான் சிறுத்தைகள் எளிதாக மரம் ஏற முடிகிறது. ஆனால், சிவிங்கப் புலிகளின் பாதம் உள்ளிழுக்கும் அமைப்பு அற்றது. இதனால், சிவிங்கப்புலிகளால் மரத்தில் ஏற முடியாது.
- சிறுத்தைகள் இரவில்தான் வேட்டையாடும். சிறுத்தைகள் தங்கள் வேட்டையாடிய இரையை மரத்தின் உச்சிக்கு கொண்டு சென்று சாப்பிடும். ஆனால், சிவிங்கப்புலிகள் பகலில்தான் வேட்டையாடும்.
- சிறுத்தைகள் மான், பெரிய எருது போன்ற பெரிய விலங்குகள் வரை வேட்டையாடி உண்ணும். ஆனால், சிவிங்கப்புலிகள் சிறு மான், ஆப்பிரிக்க சிறு மான்களையே வேட்டையாடி உயிர் வாழ்ந்து பழக்கப்பட்டவை. மேலும், குழுவாக வேட்டையாடினால் பெரிய வரிக்குதிரையை வேட்டையாடும்.
- சிறுத்தைகள் 12 முதல் 17 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியவை. ஆனால், சிவிங்கப்புலிகள் 8 முதல் 10 வருடங்கள் வரை உயிர் வாழும்.
- சிறுத்தைகளின் குட்டிகள் 2 ஆண்டுகள் வரை தாய் சிறுத்தையிடம் வளரும். ஆனால், சிவிங்கப்புலிகளின் குட்டிகள் 3 மாதங்கள் மட்டுமே தாய் சிவிங்கப்புலியிடம் வளரும்.
சிவிங்கப்புலிக்கும், சிறுத்தைக்கும் இடையே இதுபோன்ற வித்தியாசங்கள் காணப்படுகிறது.
மேலும் படிக்க : PM Modi releases Cheetahs: பிறந்த நாளில் சிவிங்கிப் புலிகளை நாட்டில் மீண்டும் அறிமுகம் செய்த பிரதமர் மோடி!
மேலும் படிக்க : Stalin Wishes PM Modi: நீண்ட ஆயுளுடன் நல்ல உடல்நலத்துடன்... பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்