PM Modi releases Cheetahs: பிறந்த நாளில் சிவிங்கிப் புலிகளை நாட்டில் மீண்டும் அறிமுகம் செய்த பிரதமர் மோடி!
70 ஆண்டுகளுக்குப் பிறகு ’ப்ராஜக்ட் சீட்டா’ எனும் சிவிங்கிப் புலிகள் மறுஅறிமுகத் திட்டத்தின் மூலம் நமீபியாவைச் சேர்ந்த 8 சிவிங்கிப் புலிகள் இந்தியா கொண்டுவரப்பட்டு காடுகளில் விடப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி இன்று (செப்.17) தனது 72ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அதன் ஒரு பகுதியாக நாட்டில் அழிந்துபோனதாக அறிவிக்கப்பட்ட சிவிங்கிப் புலிகளை பிரதமர் மோடி முன்னதாக மத்தியப் பிரதேச வனப் பகுதிகளில் திறந்துவிட்டார்.
நாட்டில் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட சிவிங்கிப் புலிகளை (சீட்டாக்கள்) இந்தியாவில் மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் ’ப்ராஜக்ட் சீட்டா’
PM Modi releases 8 cheetahs in MP's Kuno National Park
— ANI Digital (@ani_digital) September 17, 2022
Read @ANI Story | https://t.co/NVlXzeiKWp#CheetahIsBack #Cheetahs #NarendraModi #PMModi pic.twitter.com/vmUMwm4yHm
இந்தியாவில் கடந்த 1952ஆம் ஆண்டு நாட்டில் சிவிங்கிப் புலிகள் அழிந்து விட்டதாக அதிராப்பூர்வமான அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 70 ஆண்டுகளுக்குப் பிறகு ’ப்ராஜக்ட் சீட்டா’ எனும் சிவிங்கிப் புலிகள் மறுஅறிமுகத் திட்டத்தின் மூலம் நமீபியாவைச் சேர்ந்த 8 சிவிங்கிப் புலிகள் இந்தியா கொண்டுவரப்பட்டு காடுகளில் விடப்பட்டுள்ளன.
Prime Minister Narendra Modi released the cheetahs brought from Namibia, to their new home Kuno National Park in Madhya Pradesh. pic.twitter.com/8CgHmH8NF6
— ANI (@ANI) September 17, 2022
அதன்படி, மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசியப் பூங்காவில் உள்ள அடைப்புகளில் முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி சிவிங்கிப் புலிகளை விடுவித்தார்.
நேற்று (செப்.16) இந்த சிவிங்கிப் புலிகள் ஹெலிகாப்டரில் மத்திய பிரதேசத்தின் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டன.
#WATCH | Prime Minister Narendra Modi releases the cheetahs that were brought from Namibia this morning, at their new home Kuno National Park in Madhya Pradesh.
— ANI (@ANI) September 17, 2022
(Source: DD) pic.twitter.com/CigiwoSV3v
இந்த சிவிங்கிப் புலிகள் அனைத்தும் ரேடியோ காலர் பொருத்தப்பட்டு செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்கப்படும். மேலும் ஒவ்வொரு சிறுத்தைக்கு பின்னாலும் ஒரு பிரத்யேக கண்காணிப்பு குழு இருக்கும், அவர்கள் 24 மணி நேரமும் இந்த சிவிங்கிப் புலிகளின் நடவடிக்கைகளை உற்று கண்காணிப்பர் என முன்னதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.