Stalin Wishes PM Modi: நீண்ட ஆயுளுடன் நல்ல உடல்நலத்துடன்... பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று தன்னுடைய 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருடைய பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் பிரதமர் மோடிக்கு பரிசாக வந்த பொருட்களை ஏலம் விடும் பணிகள் இன்று தொடங்குகின்றன. பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய வாழ்த்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடனும் நல்ல உடல் நிலையுடனும் வாழ வேண்டும்” எனக் கூறி தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார்.
Birthday Greetings to Hon'ble Prime Minister Thiru @NarendraModi.
— M.K.Stalin (@mkstalin) September 17, 2022
Wishing you a long and healthy life.
குடியரசுத் தலைவர் த்ரௌபதி முர்மு, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் பிரதமர் மோடிக்கு தங்களுடைய வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
தலைவர்களின் வாழ்த்து:
— O Panneerselvam (@OfficeOfOPS) September 16, 2022
Heartfelt greetings to the Dynamic & Visionary Hon. Prime Minister
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) September 17, 2022
Thiru @narendramodi Avl on his birthday
May your vision&mission for our Nation to lead the world shape into reality.
I pray the almighty for a long,healthy life of duty&service.@PMOIndia @AIADMKOfficial pic.twitter.com/MRTrTW1S8E
Wishing PM Narendra Modi a happy birthday.
— Rahul Gandhi (@RahulGandhi) September 17, 2022
கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை ஆளும், நம் பாரதத்தை வலிமை மிக்க தேசமாக கட்டமைத்த. நம் பாரத தலைமகன் திரு.@narendramodi ஜி அவர்களின் பிறந்த நாளில் ஆரோக்கியம், மகிழ்ச்சி நிறைந்து, லட்சியத்தில் வெற்றி பெற்று பல ஆண்டுகள் தேசப்பணி சிறப்புடன் செய்திட இறைவனை வேண்டுகிறேன். pic.twitter.com/FVEMpZ6C7P
— Dr.L.Murugan (@Murugan_MoS) September 16, 2022
இவ்வாறு பலரும் தங்களுடைய வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: மோடிக்கு மணற்சிற்பம்… பிறந்தநாள் வாழ்த்தாக 1,212 டீ கப்கள் பயன்படுத்தி உருவாக்கிய சுதர்சன் பட்நாயக்!