மேலும் அறிய

LPG Cylinder Shortage: என்னது, இன்னைல இருந்து ஹோட்டல்கள் இயங்காதா.?! சிலிண்டர் தட்டுப்பாடால் உரிமையாளர்கள் அதிரடி.!

Bengaluru Hotel Strike: வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, பெங்களூருவில் இன்று முதல் ஹோட்டல்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ள சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுப்படைகள் மற்றும் ஈரான் இடையே போர் நடைபெற்று வரும் சூழலில், கச்சா எண்ணெய் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சமையல் கேஸ் சிலிண்டர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பெங்களூருவில் வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டதால், இன்று முதல் ஹோட்டல்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அமெரிக்கா இஸ்ரேல் - ஈரான் போரால் பாதிக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய் வரத்து

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா - ஈரான் இடையே பிரச்னை இருந்துவந்த நிலையில், கடந்த மாத இறுதியில் இரு நாடுகளுக்கும் இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற மறுதினமே, இஸ்ரேலுடன் இணைந்து ஈரானை தாக்கத் தொடங்கியது அமெரிக்கா.

இதற்கு ஈரானும் பதிலடி கொடுக்கத் தொடங்கியதால் பெரும் போர் வெடித்தது. அதன் ஒரு பகுதியாக, தங்களை தாக்குவதற்கு ஏதுவாக, அமெரிக்கா இஸ்ரேலுக்கு ராணுவ தளங்களை வழங்கிய அரபு நாடுகளை தாக்கத் தொடங்கியது ஈரான்.

அது மட்டுமின்றி, சர்வதேச அளவில் 20 சதவீத எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் மிக முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியது ஈரான். அவ்வழியாக வரும் எண்ணெய் கப்பல்கள் தாக்கப்படும் என அறிவித்தது. இதனால், உலக அளவில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அதோடு, கச்சா எண்ணெய் போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டதால்,  இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பெட்ரேல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்திலும் பிரச்னை எழுந்துள்ளது.

“இன்று முதல் பெங்களூருவில் ஹோட்டல்கள் இயங்காது“

இப்படிப்பட்ட சூழலில், அரபு நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் வரத்து தடைபட்டுள்ளது. இதையடுத்து, பெங்களூருவில் வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் மற்றும் சமையல் கேஸ் சிலிண்டர் விநியோகம் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், கர்நாடகா மாநிலம் பெங்களூரு மாநகரில் உள்ள ஹோட்டல்கள் இன்று முதல் வேலை நிறுத்தத்தை தொடங்குவதாக, பெங்களூரு மாநகர ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

சென்னை ஹோட்டல்கள் சங்கம் பிரதமருக்கு கடிதம்

இந்த நிலையில், வணிக ரீதியான எல்பிஜி (LPG) சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால், உணவுத் தொழில் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, பிரதமர் மோடிக்கு சென்னை ஹோட்டல்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

மருத்துவமனைகள், விடுதிகள் மற்றும் பயணிகளுக்கு உணவு  கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால், எரிவாயுவை 'அத்தியாவசியப் பண்டமாக' கருதி, தடையின்றி விநியோகிக்க நடவடிக்கை வேண்டும் என பிரதமரிடம் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

 

 

தலைப்பு செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget