Assam Violence: ஆக்கிரமிப்பாளர்கள் மீது போலீஸ் கொடூர தாக்குதல்... போர் களமான அசாம்!
போலீசாரை நோக்கி கட்டையால் அடிக்க வரும் ஒருவர் துப்பாக்கியால் சுடப்படுகிறார். பின்னர், அனைவரும் சேர்ந்து அடிக்கின்றனர். இதில் அவர் மயக்கமடைந்து ரத்த வெள்ளத்தில் படுத்துக் கிடக்கிறார்.
அசாம் மாநிலம் தர்ரங் மாவட்டம் தோல்பூர் பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் இன்று அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அந்த மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியதோடு மட்டுமல்லாமல் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், போலீசாரை நோக்கி கட்டையால் அடிக்க வரும் ஒருவர் துப்பாக்கியால் சுடப்படுகிறார். பின்னர், அனைவரும் சேர்ந்து அடிக்கின்றனர். இதில் அவர் மயக்கமடைந்து ரத்த வெள்ளத்தில் படுத்துகிடக்கிறார். அவர் மீது கேமராவுடன் இருக்கும் நபர் ஒருவர் இரண்டு முறை எகிறிகுதித்து செல்கிறார். இந்த தாக்குதலால் அவர் இறந்துவிட்டாரா என்று தெரியவில்லை. இதுதொடர்பாக பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
What protocol orders firing to the chest of a lone man coming running with a stick @DGPAssamPolice @assampolice ? Who is the man in civil clothes with a camera who repeatedly jumps with bloodthirsty hate on the body of the fallen (probably dead) man? pic.twitter.com/gqt9pMbXDq
— Kavita Krishnan (@kavita_krishnan) September 23, 2021
தோல்பூரில் நடந்த வெளியேற்ற நடவடிக்கையில் ஒன்பது போலீசார் மற்றும் இரண்டு பொதுமக்கள் காயமடைந்ததாக போலீசார் கூறுகின்றனர். தர்ராங் காவல்துறை கண்காணிப்பாளர் சுஷாந்தா பிஸ்வா சர்மாகூறுகையில், “உள்ளூர்வாசிகள் வெளியேற்றும் நடவடிக்கையை எதிர்த்தனர். கற்களை வீசத் தொடங்கினர். இந்த கலவரத்தால் ஒன்பது போலீஸ்காரர்கள் காயமடைந்தனர். இரண்டு பொதுமக்களும் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இப்போது நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது” என்று கூறினார்.
உள்ளூர்வாசி சுடப்பட்டு பின்னர் அடித்த காட்சிகளைப் பற்றி கேட்டபோது, "அந்த பகுதி பெரியது. நான் இன்னொரு பக்கத்தில் இருந்தேன். நான் நிலைமையை கண்டுபிடித்து அதுகுறித்து விசாரணை செய்வேன்” என்று கூறினார்.
Continuing our drive against illegal encroachments, I am happy and compliment district administration of Darrang and @assampolice for having cleared about 4500 bigha, by evicting 800 households, demolishing 4 illegal religious structures and a private instn at Sipajhar, Darrang. pic.twitter.com/eXG6XBNH6j
— Himanta Biswa Sarma (@himantabiswa) September 20, 2021
800 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டதால் திங்கள்கிழமை முதல் இப்பகுதியில் பதற்றம் நிலவியது. முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா திங்களன்று வெளியேற்றப்பட்ட பிறகு ட்வீட் செய்துள்ளார். அந்தப் பதிவில், "800 வீடுகளை வெளியேற்றுவதன் மூலம் சுமார் 4500 பிகாவை அழித்ததற்காக தர்ராங் மற்றும் அசாம் காவல்துறையின் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையால் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறியுள்ளார்.
Democracy being crushed by the protector themselves in Assam, firing upon protesting villagers and killing them. Also, the so-called journalist joining the police force and kicking the man lying unconscious. No amount of justification can justify the action of @assampolice. pic.twitter.com/NI08krFnFQ
— Dr Hafiz Rafiqul Islam (@HafizRafiqulMLA) September 23, 2021
Thousands of displaced people who were evicted on Monday in Assam's Dholpur area in Darrang staged protest today. #SipajharEviction pic.twitter.com/2o1OrYsVHQ
— Rokibuz Zaman (@ROKIBUZZAMAN2) September 23, 2021
இன்றைய முக்கியச் செய்திகள் இதோ:
வேலூர் மாவட்டத்தில் வெற்றி பெறப்போவது யார்?
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது தடியடி
அழகுக்கு அப்பாலும் ஜொலித்தவர் சில்க்!
மாலையில் சஸ்பெண்ட்... இரவில் ரத்து... ஆசிரியை மகாலட்சுமிக்கு நடந்தது என்ன?