53 வயதில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சியடைந்த தாய்.. மகன் பதிவிட்ட நெகிழ்ச்சி போஸ்ட்..
மும்பையைச் சேர்ந்த 53 வயது பெண் ஒருவர் தனது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு எழுதி தேர்ச்சியடைந்துள்ளார். அவரது மகன் அதுகுறித்து செய்துள்ள பதிவு வைரலாகி வருகிறது.

கனவுகளைப் பின்தொடர வேண்டும். குறிப்பாக கல்வி பற்றிய கனவைப் பின்தொடர வேண்டும். மும்பையைச் சேர்ந்த 53 வயது பெண் ஒருவர் தனது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு எழுதி தேர்ச்சியடைந்துள்ளார். அவரது மகன் அதுகுறித்து செய்துள்ள பதிவு வைரலாகி வருகிறது.
LinkedIn தளத்தின் பயனாளர் பிரசாத் ஜாம்பலே தன்னுடைய பதிவில் தன் தாய் அவரின் 53வது வயதில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சியடைந்ததைப் பகிர்ந்துள்ளார்.
தற்போது அயர்லாந்தில் தங்கி பணிபுரிந்து வரும் பிரசாத் ஜாம்பலே தன் தாய் தன்னிடம் இருந்து நீண்ட நாள்களாக மறைத்து வைத்திருந்த ரகசியத்தைத் தனது திருமண நாள் பொதுத் தேர்வுகளுக்கு முன்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட போது வெளிப்படுத்தியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் தன் மகனின் திருமணத்திற்காக அனைத்து தயாரிப்புகளையும் மேற்கொண்ட அவர் மார்ச் மாதம் தன் தேர்வுகளுக்காகத் தயாராகியுள்ளார். இத்தனை பணிகளுக்கு இடையிலும், அவர் சுமார் 79.6 சதவிகிதம் மதிப்பெண்கள் எடுத்து அவரது மகன் மட்டுமின்றி அனைவரையும் ஆச்சரியப்படுத்துள்ளார்.
இதுகுறித்து தனது பதிவில் பிரசாத் ஜாம்பலே , `என் தாய் 16 வயதாக இருந்த போது, அவரது தந்தை உயிரிழந்தார். அப்போது பொருளாதார நிலை காரணமாக தன் சகோதரர்கள் கல்வி பெற என் தாய் வேலை செய்ய தொடங்கினார்’ எனக் கூறியுள்ளார்.
கல்வியைப் பாதியில் கைவிட்டவர்களுக்காக மாநில அரசு அறிவித்த திட்டம் குறித்து கடந்த ஆண்டு அறிந்துகொண்ட பிரசாத் ஜாம்பலேவின் தாய் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இரவுப்பள்ளிக்குச் செல்ல தொடங்கியுள்ளார். இதுகுறித்து பிரகாஷ் ஜாம்பலேவுக்கும், மும்பையில் வசிக்கும் அவரது தந்தை, சகோதரர் ஆகிய யாருக்குமே தெரியாமல் தனது தாய் ரகசியமாக கல்வி பயின்று வந்துள்ளார்.
தன் பதிவில் பிரசாத் ஜாம்பலே தன் தாயுடன் வகுப்பில் படித்து கல்விபெற்றவர்களின் படங்களையும் பதிவிட்டுள்ளார். தன் தாய்க்கு இதே வாய்ப்பு சிறுவயதில் கிடைத்திருந்தால் சாதனை படைத்திருப்பார் எனக் கூறியுள்ள அவர், `எதைப் பற்றியும் கவலைப்படாமல் நான் இன்று அடைந்திருக்கும் இடத்தைப் பெறும் அளவுக்கு எனக்கு சலுகைகள் இருந்ததாக உணர்கிறேன்.. என் தாய் இன்னும் சாதனை படைத்திருக்கலாம்.. யாருக்குத் தெரியும்?’ எனக் கேட்டுள்ளார்.
இந்தப் பதிவைப் பலரும் பாராட்டியுள்ளதோடு, இது தற்போது LinkedIn தளத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

