மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் மரணம்.. காங்கிரஸுக்கு ஐடி நோட்டீஸ்.. இன்றைய ஹெட்லைன்ஸ்!
7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு:
- தேர்தலில் போட்டியிட்டால் நிர்மலா சீதாராமனுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
- டெல்லியில் பாஜக பெரிய கட்சியாக இருக்கலாம்; தமிழகத்தில் பாஜக சின்ன கட்சிதான் - அதிமுக.
- மோடி அரசின் ஜிஎஸ்டி வரியால் சிறு, குறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது - பிரேமலதா.
- சென்னையில் தேர்தல் பணிக்கு வராத 1, 500 அரசு ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்.
- நிதிப் பகிர்வில் மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக அமைச்சர் உதயநிதி குற்றச்சாட்டு.
- 4-9 வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல், சமூக அறிவியல் தேர்வு தேதி மாற்றம் - பள்ளிக்கல்வித்துறை.
- மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியீடு.
- தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து கொள்வதாக அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு.
- தேர்தலில் நிற்காமல் நான் தியாகம் செய்யவில்லை; வியூகம் செய்துள்ளேன் - கமல்ஹாசன்.
- தமிழில் பிரபல வில்லன் கதாபாத்திரங்களில் நடித்த நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் காலமானார்.
- சமூக நீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்?- முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி
- நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கிய மைக் சின்னத்தை ஆபாசமாக வடிவமைத்து சமூகவலைதளங்களில் பரப்பியதாக திமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு.
- தமிழ்மாநில காங்கிரஸ் கட்சிக்கும் அமமுகவிற்கும் என்ன தகுதி உள்ளது என காட்டமாக அமைச்சர் பொன்முடி விமர்சித்துள்ளார்.
இந்தியா:
- டெல்லி ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடத்த இந்தியா கூட்டணிக்கு காவல்துறையினர் அனுமதி.
- 5 நிதி ஆண்டுகளில் ரூ. 1, 823 கோடி காங்கிரஸ் கட்சி வரி செலுத்தவில்லை எனக்கூறி ஐடி நோட்டீஸ்.
- இந்திய கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ் வரி செலுத்தவில்லை என்றும் வருமானவரித்துறை நோட்டீஸ்.
- அதானி மின் உற்பத்தி நிறுவனத்தில் 26% பங்குகளை வாங்குகிறார் தொழிலதிபர் முகேஷ் அம்பானி.
- டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் மைக்ரோ சாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்.
- பீகாரில் இந்தியா கூட்டணி தொகுதி உடன்பாடு - 40ல் ஆர்.ஜேடி., காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டி.
- முன்னாள் அமைச்சர் பிரபுல் படேலுக்கு எதிரான ரூ.850 கோடி முறைகேடு வழக்கு முடித்து வைப்பு.
- இந்தியாவில் அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் பாதுக்காக்கப்பட வேண்டும் - ஐநா சபை.
- ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து - 10 பேர் உயிரிழப்பு.
- பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரின் புகைப்படம் வெளியீடு
உலகம்:
- தென்னாப்பிரிக்கா: மலைப்பள்ளத்தாக்கில் பேருந்து விழுந்து தீப்பிடித்ததில் 45 பயணிகள் உயிரிழப்பு.
- நோட்டோ கூட்டமைப்பு நாடுகளில் எல்லையை நோக்கி ரஷ்யா நகரவில்லை - அதிபர் புதின்
- இந்தியா - சீனா இடையே எல்லை பிரச்சனை தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தை நிறைவு.
- ரஷ்ய கேளிக்கை அரங்கில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக தஜிகிஸ்தானில் 9 பேர் உயிரிழப்பு
- காஸாவில் போர் நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தையை தொடங்க தயார் - இஸ்ரேல் பிரதமர்
விளையாட்டு:
- ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் இன்று பலப்பரீட்சை.
- ஐபிஎல் 2024: பெங்களூருவை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்தது கொல்கத்தா.
- விராட் கோலி பெங்களூரு அணிக்காக அதிக சிக்ஸர்கள் (241) அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
திரை விமர்சனம்
அரசியல்
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion