கோவிட் 19 - அமெரிக்காவில் 5 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை.!
ஆனால் நாட்கள் செல்ல செல்ல இணையத்தில் சீனாவின் பல பகுதிகள் ராணுவ கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக வீடியோக்கள் வெளியானது

கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுஹான் நகரில் உள்ள ஒரு இறைச்சிக்கடையில் இருந்து ஒரு வைரஸ் பரவுவதாக தகவல்வெளியானது. ஆனால் அன்றைய தேதியில் பெரிய அளவில் பிற நாடுகள் அந்த வைரஸை பற்றி கவலைகொள்ளவில்லை. ஆனால் நாட்கள் செல்ல செல்ல இணையத்தில் சீனாவின் பல பகுதிகள் ராணுவ கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக வீடியோக்கள் வெளியானது.
அந்த வைரஸ் குறித்து முன்பே கண்டறிந்த சில மருத்துவர்கள் தீடீர் என்று மாயமானதாக சில செவிவழிச்செய்திகளும் வெளியானது. இறுதியில் அந்த வைரஸ் ஆபத்தானது என்று கூறி 2019ம் ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் உலக சுகாதார மையம், உலக சுகாதாரத்திற்கே அவசரநிலையை பிரகடனப்படுத்தியது.
நொடிப்பொழுதில் நிலைமை மாறியது, சுமார் 8 மாதங்கள் எந்தவித அசைவுமின்றி உலக நாடுகள் ஸ்தம்பித்தது. வான் வழி, தரைவழி, கப்பல் போக்குவரத்து என்று உலக அளவில் போக்குவரத்துக்கு, வியாபாரம், கல்வி, தொழில் என்று அனைத்துமே செயல்பாடுகள் இன்றி நின்றது.
இன்றளவும் இந்த பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களின் எண்னிக்கை அதிகரித்துக்கொண்டே தான் இருக்கின்றது. இந்நிலையில் ஓராண்டை கடந்து தடுப்பூசி கண்டறியப்பட்ட நிலையிலும் கொரோனா தொடர்ச்சியாக பரவிக்கொண்டே வருகின்றது. அமெரிக்காவை பொறுத்தவரை அங்கு பலி எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது.
ரஷ்யாவில் 90 ஆயிரத்தை கடந்துள்ளது பலி எண்ணிக்கை. இந்தியாவிலும் பல மாதங்கள் கழித்து மீண்டும் கொரோனா அச்சம் மீண்டும் தலைதூக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.





















