கோவையில் பிளேபாயாக வலம் வந்த கல்லூரி மாணவர்! பாடம் கற்பித்த இரண்டு காதலிகள்!
மாணவிகள் ஸ்ரீதர்சனிடம் கேள்வி எழுப்பிய போது, அவர்களை மிரட்டியதுடன் பாலியல் ரீதியாக எடுத்து வைத்துள்ள வீடியோ மற்றும் புகைப்படங்களை ஆகியவற்றை வெளியிட்டு விடுவதாக கூறி மிரட்டியுளார்.
கோவை குனியமுத்தூர் பகுதியில் பிரபல கல்விக் குழுமத்தின் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றது. இந்த வளாகத்தில் பொறியியல் கல்லூரி மற்றும் கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்தக் கலைக் கல்லூரியில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள வாத்தியார் வில்லை பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர்ஷன் என்பவர், எம்.ஏ இரண்டாம் ஆண்டு ஆங்கிலம் பாடப்பிரிவில் படித்து வருகின்றார். இவர் அந்தக் கல்லூரியில் தன்னுடன் படித்த 21 வயதான மாணவியை காதலித்து உள்ளார். அவருக்கு தெரியாமல் அதே கல்லூரியில் பி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வந்த மற்றொரு மாணவியையும் காதலித்து வந்துள்ளார். இரு மாணவிகளையும் பாலியல் ரீதியாக பயன்படுத்தி துன்புறுத்தல் செய்ததுடன் அவற்றை வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளார்.
இந்நிலையில் அதே கல்லூரியில் படிக்கும் மற்றும் ஒரு மாணவியை காதலித்த நிலையில், இது மற்ற இரு மாணவிகளுக்கும் தெரியவந்தது. இது குறித்து மாணவிகள் ஸ்ரீதர்சனிடம் கேள்வி எழுப்பிய போது, அவர்களை மிரட்டியதுடன் பாலியல் ரீதியாக எடுத்து வைத்துள்ள வீடியோ மற்றும் புகைப்படங்களை ஆகியவற்றை வெளியிட்டு விடுவதாக கூறி மிரட்டியுளார். இதனையடுத்து 21 வயதான கோவையை சேர்ந்த மாணவி கொடுத்த புகாரின் பேரில், ஸ்ரீ தர்ஷன் மீது குனியமுத்தூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதே போல அதே கல்லூரியில் பி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வரும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவியும் மாணவர் தர்ஷன் மீது புகார் அளித்தார்.
இரண்டு மாணவிகளும் கொடுத்த புகாரின் பேரில் மாணவர் தர்ஷன் மீது குனியமுத்தூர் காவல் துறையினர் இரு தனித்தனி வழக்குகளாக 5 பிரிவுகளில் பதிவு செய்தனர். மேலும் மாணவர் ஸ்ரீதர்ஷனை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட மாணவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். கல்லூரியில் ப்ளே பாயாக வலம் வந்த தர்ஷன், மாணவிகளை காதலித்து ஏமாற்றியதுடன், அவர்களை வீடியோ எடுத்து வைத்து மிரட்டிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.