மேலும் அறிய

Special Bus: பொங்கல் சிறப்பு பேருந்துகள்! கோவையில் எந்தெந்த பேருந்துகள் எங்கிருந்து கிளம்பும்?

தொழில் மற்றும் கல்விக்காக வெளியூரில் இருந்து கோவையில் வந்து தங்கியுள்ளவர்கள், பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்படும் நிலையில், சென்னை, கோவை உட்பட வெளியூர்களில் பணியாற்றுவோர் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். வெளியூர்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதையொட்டி 12ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதன்படி, சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 4,706 சிறப்புப் பேருந்துகள் என 3 நாட்களுக்கு மொத்தம் 11,006 பேருந்துகளும், திருச்சி, கோவை உள்ளிட்ட பிற ஊர்களில் இருந்து 8,478 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

சிறப்பு பேருந்துகள்:

இதன் ஒரு பகுதியாக தொழில் மற்றும் கல்விக்காக வெளியூரில் இருந்து கோவையில் வந்து தங்கியுள்ளவர்கள், பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் கூட்ட நெரிசலை சமாளிக்க பேருந்து நிலைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சூலூர் பேருந்து நிலையத்தில் இருந்து கரூர், திருச்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதேபோல காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சேலம், ஈரோடு, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சாய்பாபா காலனி பகுதியில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஊட்டி,கூடலூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கோவை - மதுரை இடையே 200 பேருந்துகள், கோவை - திருச்சி இடையே 200 பேருந்துகள், கோவை - தேனி இடையே 100 பேருந்துகள், கோவை - சேலம் இடையே 240 பேருந்துகள் என மொத்தம் 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பொதுமக்கள் இந்த பேருந்து வசதிகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இறைச்சி விற்பனைக்கு தடை:

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளின் ஒரு நிகழ்வாக தை மாதத்தின் இரண்டாவது நாளான மாட்டுப் பொங்கல் திருநாளன்று, திருவள்ளுவர் நாளாக கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினத்தன்று இறைச்சி கடைகள் செயல்பட தடை விதிக்கப்படுவது வழக்கம். வருகின்ற ஜனவரி 16 ம் தேதி திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. அதேபோல வருகின்ற 25 ம் தேதி வள்ளலார் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தமிழக அரசால் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதும், இறைச்சிகளை விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே, கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி கடைகளை மூடும்படி மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அன்றைய தினம் கோயம்புத்தூர் மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்டு வரும் உக்கடம், சக்தி ரோடு, போத்தனூர், அறுவைமனைகள், மற்றும் துடியலூர் மாநகராட்சி இறைச்சி கடைகள் செயல்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி செயல்படுவோர் மீது மாநகராட்சி அதிகாரிகளால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

Budget: மோடி அரசின் கடைசி பட்ஜெட்.. பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் இடைக்கால நிதிநிலை அறிக்கை

 

தலைப்பு செய்திகள்

கோவை மக்களுக்கு குட் நியூஸ்! சிங்கநல்லூரில் ரூ.170 கோடியில் மேம்பாலம் – அடுத்த மாதம் தொடங்கும் பணிகள்?
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! சிங்கநல்லூரில் ரூ.170 கோடியில் மேம்பாலம் – தொடங்கும் பணிகள்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
coimbatore power cut: கோவையில் நாளை (13-10-2026) எங்கெல்லாம் கரண் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (13-10-2026) எங்கெல்லாம் கரண் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (12-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (12-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
TN Weather News: 34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
மஹிந்திராவின் முதல் CNG கார்.. எந்தெந்த வேரியண்டில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு?
மஹிந்திராவின் முதல் CNG கார்.. எந்தெந்த வேரியண்டில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு?
TN Govt: ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
Jailer 2 Collection: அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
Kia Sonet: ஹைப்ரிட்டில் வரும் சுள்ளான்..! டெஸ்டிங்கை தொடங்கிய தென்கொரிய SUV - பட்ஜெட்டில் தரமான சம்பவம்
ஹைப்ரிட்டில் வரும் சுள்ளான்..! டெஸ்டிங்கை தொடங்கிய தென்கொரிய SUV - பட்ஜெட்டில் தரமான சம்பவம்
Embed widget