மேலும் அறிய

1,200 கலைஞர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட கும்மியாட்டம்... தமிழ் பாரம்பரியத்தை மீட்கும் ஈஷா கிராமோத்சவம்!

ஈஷா யோகா மையம் நடத்திய ஈஷா கிராமோத்சவம் நிகழ்ச்சியில் 1200 கலைஞர்கள் ஒரே நேரத்தில் கூடி கும்மியாட்டம் ஆடினர்.

ஈஷா யோக மையம், யோக கலையை வளர்த்தெடுக்கும் மையமாக மட்டுமின்றி நம் தமிழ் பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் மையமாகவும் விளங்குகிறது.

ஈஷா கிராமோத்சவம்: 

கொங்கு மண்ணின் பாரம்பரிய கலைகளில் ஒன்றாக விளங்கும்  கும்மியாட்டம் 2,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. தொல்காப்பியம், அகநானுறு, குறுந்தொகை போன்ற தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த நடனம் தற்போது அழிந்து வரும் நிலையில் உள்ளது. இந்நிலையில், இதை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈஷா கிராமோத்சவம் ஈடுபட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

1,200 கலைஞர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட கும்மியாட்டம்... தமிழ் பாரம்பரியத்தை மீட்கும் ஈஷா கிராமோத்சவம்!

கிராமப்புற மக்கள் ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் வாழ விளையாட்டும், பாரம்பரிய கலைகளும் மிகவும் அவசியமாகும். இதை உணர்ந்த சத்குரு விளையாட்டையும், கலைகளையும் ஊக்குவிக்கும் விதமாக ‘ஈஷா கிராமோத்சவம்’ என்னும் கிராமிய விளையாட்டு திருவிழாவை 2004-ம் ஆண்டு தொடங்கி வைத்தார்.

1200 கலைஞர்களின் கும்மியாட்டம்:

அந்த வகையில், 15-வது ஈஷா கிராமோத்சவ திருவிழா ஈஷாவில் உள்ள ஆதியோகி முன்பு சமீபத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது. பரிசு அளிப்பு விழாவின் போது, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த 1,200 கலைஞர்கள் ஒரே இடத்தில் திரண்டு பிரம்மாண்டமாக வள்ளி கும்மியாட்டம் ஆடினர். சிறுவர், சிறுமியர் தொடங்கி குடும்ப தலைவிகள், விவசாய வேலைக்கு செல்வர்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் என பல தரப்பினர் வாய் பாட்டிற்கு ஏற்ப ஒய்யாரமாக ஒத்திசைவுடன் நடனம் ஆடி கலக்கினர்.

தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகப் பெருமானையும் அவரின் தந்தையான வெள்ளியங்கிரியில் வீற்றிருக்கும் சிவ பெருமானையும் போற்றி பாடிய பாடல்களுக்கு கூடியிருந்த பார்வையாளர்கள் கை தட்டி உற்சாகப்படுத்தினர். நேரில் கண்டு ரசித்த சத்குருவும் கை தட்டி வாழ்த்து கூறினார். 

சத்குரு பாராட்டு:

பரிசளிப்பு விழா மேடையில் சத்குரு பேசும் போது ஒரு சிறுமியின் நடனத்தையும் அக்குழந்தையின் ஈடுபாட்டையும் பாராட்டி பேசினார். “இங்க கிட்டத்தட்ட 1,200 பேர் ஒண்ணு கூடி கும்மி ஆடுனாங்க. அதுல ஒரு சின்ன பொண்ண நான் கவனிச்சு பார்த்தேன். அந்த குழந்தை சுத்தி இருக்குற யாரையும் பார்க்காம பாட்டுக்கு ஏத்த மாதிரி ஒரு ஸ்டெப் கூட தப்பா ஆடாம சூப்பரா ஆடுனாங்க. இந்த ஈடுபாடும், ஆர்வமும் தான் கிராம மக்களுக்கு தேவை. 

1,200 கலைஞர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட கும்மியாட்டம்... தமிழ் பாரம்பரியத்தை மீட்கும் ஈஷா கிராமோத்சவம்!

நம்ம கிராமங்கள்ல நாத்து நடும் போது, களை பறிக்கும் போது, அறுவடை செய்யும் போதுனு எல்லா நேரத்துலயும் ஒரு ஆட்டம், பாட்டம் இருந்துச்சு. ஆனா, இப்போ அது காணாம போயிட்டு வருது. இப்படி கொண்டாட்டமே இல்லாம வாழ்க்கை நடந்தா அந்த வாழ்க்கையில சந்தோஷம் இருக்காது. வாழ்க்கையில் விளையாட்டு தன்மையும் ரொம்ப அவசியம். அது இல்லனா வாழ்க்கை ரொம்ப சுமையா மாறிரும். அதுனால, எல்லாரும் விளையாட்டு தன்மையோட வாழணும். பாரம்பரிய கலைகள அழியாம காப்பத்தி வச்சுக்கணும்” என்றார்.

ஈஷா கிராமோத்சவம் திருவிழாவில் வள்ளி கும்மியாட்டம் மட்டுமின்றி, கரக்காட்டம், ஒயிலாட்டம், பொய் கால் குதிரையாட்டம், பறையாட்டம், படுகா நடனம், மயிலாட்டம் என பல தமிழ் பாரம்பரிய கலைகளும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

India vs Canada: இந்தியா - கனடா போட்டி.. ஒரு பந்து கூட வீசாமல் ரத்தான ஆட்டம்!
India vs Canada: இந்தியா - கனடா போட்டி.. ஒரு பந்து கூட வீசாமல் ரத்தான ஆட்டம்!
Breaking News LIVE: 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதற்கு மு.க.ஸ்டாலினின் வியூகமே காரணம் - திருமாவளவன் எம்.பி.
Breaking News LIVE: 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதற்கு மு.க.ஸ்டாலினின் வியூகமே காரணம் - திருமாவளவன் எம்.பி.
"மோடியின் பிம்பத்தை ஸ்வீட் பாக்ஸ் மூலம் Close செய்தவர் ராகுல் காந்தி" முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
"பாஜக கால் ஊன்ற முடியாத மண் தமிழ்நாடுதான்" முப்பெரும் விழாவில் திருமாவளவன் பேச்சு!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Vikravandi PMK Candidate | விக்கிரவாண்டியில் அன்புமணி போட்டி!பரபரக்கும் தேர்தல் களம்Modi Meloni | மீண்டும் #MELODI! மெலோனியுடன் மோடி! வைரல் PHOTOSSuriya Political Entry | அரசியலில் குதிக்க ரெடி விஜயுடன் மோதும் சூர்யா?உள்ளாட்சி தேர்தலில் போட்டியா?Anti Caste Marriage | சாதி மறுப்பு திருமணம் சூறையாடப்பட்ட CPIM OFFICE நெல்லையில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
India vs Canada: இந்தியா - கனடா போட்டி.. ஒரு பந்து கூட வீசாமல் ரத்தான ஆட்டம்!
India vs Canada: இந்தியா - கனடா போட்டி.. ஒரு பந்து கூட வீசாமல் ரத்தான ஆட்டம்!
Breaking News LIVE: 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதற்கு மு.க.ஸ்டாலினின் வியூகமே காரணம் - திருமாவளவன் எம்.பி.
Breaking News LIVE: 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதற்கு மு.க.ஸ்டாலினின் வியூகமே காரணம் - திருமாவளவன் எம்.பி.
"மோடியின் பிம்பத்தை ஸ்வீட் பாக்ஸ் மூலம் Close செய்தவர் ராகுல் காந்தி" முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
"பாஜக கால் ஊன்ற முடியாத மண் தமிழ்நாடுதான்" முப்பெரும் விழாவில் திருமாவளவன் பேச்சு!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக புறக்கணிப்பு.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் தொண்டர்கள் அதிர்ச்சி!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக புறக்கணிப்பு.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் தொண்டர்கள் அதிர்ச்சி!
Petrol Diesel Price Hike: பேரதிர்ச்சி! பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு - மக்களுக்கு ஷாக் தந்த மாநில அரசு
பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு - மக்களுக்கு ஷாக் தந்த மாநில அரசு
Factcheck : கச்சத்தீவு மீட்பு ஆலோசனை குழுவின் தலைவராக அண்ணாமலையை நியமித்தாரா பிரதமர் மோடி?
Factcheck : கச்சத்தீவு மீட்பு ஆலோசனை குழுவின் தலைவராக அண்ணாமலையை நியமித்தாரா பிரதமர் மோடி?
Vijay Sethupathi :  நான் என்னை தான் ரொம்ப மிஸ் பண்றேன்.. வைரலாகும் விஜய் சேதுபதி பேச்சு
நான் என்னை தான் ரொம்ப மிஸ் பண்றேன்.. வைரலாகும் விஜய் சேதுபதி பேச்சு
Embed widget