கோவையில் குறையும் கொரோனா பாதிப்பு; அதிகரிக்கும் குணமடைவோர் எண்ணிக்கை!

இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 43 ஆயிரத்து 771 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் பல நாட்களுக்கு பிறகு கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையை விட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கோவையில் கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்து வருவதுடன், பாதிப்புகளை விட குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று இரண்டாவது அலை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழ்நாட்டில் தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதலிடத்தில் நீடித்து வருகிறது. இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நகரப் பகுதிகளில் அதிகளவில் இருந்த கொரோனா தொற்றுப் பரவல், கிராமப்புறங்கள் மற்றும் மலைக் கிராமங்களிலும் பரவி வருகிறது.கோவையில் குறையும் கொரோனா பாதிப்பு; அதிகரிக்கும் குணமடைவோர் எண்ணிக்கை!

கடந்த மே மாதத்தில் மட்டும் மாதத்தில் 90 ஆயிரத்து 566 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கடந்த ஒராண்டில் ஏற்பட்ட பாதிப்புகளை விட, மே மாதத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் அதிகம். இதேபோல மே மாதத்தில் 552 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து உச்சத்தை தொட்டு வந்த கோவையின் கொரோனா தொற்று பாதிப்புகள், கடந்த 27 ம் தேதி இதுவரை இல்லாத வகையில் 4734 ஆக பதிவானது. அதன் பிறகு தொற்று பாதிப்புகள் குறையத் துவங்கியது. 28 ம் தேதி 3992 ஆகவும், 29 ம் தேதி 3692 ஆகவும், 30 ம் தேதி 3537 ஆகவும் குறைந்தது. பின்னர் ஜீன் ஒன்றாம் தேதி 3332 ஆகவும், இரண்டாம் தேதி 3061 ஆகவும் குறைந்துள்ளது.

குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நேற்றைய நிலவரப்படி 3061 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதிச்செய்யப்பட்டது இதனால் கோவை மாவட்டத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 76 ஆயிரத்து 551 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 4488 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 43 ஆயிரத்து 771 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் பல நாட்களுக்கு பிறகு கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையை விட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஒன்றாம் தேதி 1007 ஆக இருந்த கட்டுப்பாட்டு பகுதிகள், நேற்றைய தினம் 932 ஆக குறைந்துள்ளது.கோவையில் குறையும் கொரோனா பாதிப்பு; அதிகரிக்கும் குணமடைவோர் எண்ணிக்கை!

கொரோனா பாதிப்பால் நேற்று 38 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1345 ஆக உயர்ந்துள்ளது. வீட்டுத் தனிமையில் 29 ஆயிரத்து 982 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனை மற்றும் சிகிச்சை மையங்களில் கோவை மாவட்டத்தை சேர்ந்த 28 ஆயிரத்து 649 பேர், பிற மாவட்டத்தை சேர்ந்த 12 ஆயிரத்து 211 பேர் என மொத்தம் 40 ஆயிரத்து 860 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவை மாநகராட்சி பகுதி தொற்று பாதிப்பில் முதலிடத்தில் நீடித்து வருகிறது. கடந்த 7 நாட்கள் பாதிப்பில் 56.74 சதவீதம் பேர் மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்களாக உள்ளனர். அதேசமயம் மருத்துவமனைகளில் குறைந்த அளவிலான ஆக்சிஜன் படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளன. இதுவரை கரும்புஞ்சை தொற்றால் 81 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 24 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தடுப்பூசிகள் வரத்து காரணமாக 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் இன்று முதல் மீண்டும் துவங்கியுள்ளது.

Tags: corono treatment Coimbatore corporation Hospitals decreasing

தொடர்புடைய செய்திகள்

கோவை : 2000-க்கு கீழ் குறைந்த கொரோனா தொற்று! துளிர்க்கும் நம்பிக்கையில் மக்கள்!

கோவை : 2000-க்கு கீழ் குறைந்த கொரோனா தொற்று! துளிர்க்கும் நம்பிக்கையில் மக்கள்!

டெல்டா பாசனத்திற்கு இன்று நீர் திறப்பு; மேட்டூர் அணையை திறக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

டெல்டா பாசனத்திற்கு இன்று நீர் திறப்பு; மேட்டூர் அணையை திறக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

கோவையில் 2 இலட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்புகள்

கோவையில் 2 இலட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்புகள்

Tasmac shop : 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைதிறக்க தமிழக அரசு அனுமதி!

Tasmac shop : 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைதிறக்க தமிழக அரசு அனுமதி!

கொரோனாவுடன் போராடும் கோவைக்கு ஆணையராக நியமனம் : யார் இந்த ராஜகோபால் சுங்கரா?

கொரோனாவுடன் போராடும் கோவைக்கு ஆணையராக நியமனம் : யார் இந்த ராஜகோபால் சுங்கரா?

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News :தமிழ்நாட்டில் இன்று 15,108 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News :தமிழ்நாட்டில் இன்று 15,108 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு

சென்னை : நீலாங்கரையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு, விற்க முயன்ற 3 இளைஞர்கள் கைது!

சென்னை : நீலாங்கரையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு, விற்க முயன்ற 3 இளைஞர்கள் கைது!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

புதிய வேலையில் களமிறங்கிய பிக்பாஸ் நிஷா : வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரீஸ்..!

புதிய வேலையில் களமிறங்கிய பிக்பாஸ் நிஷா : வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரீஸ்..!