மேலும் அறிய

கோவையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று..!

கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று தினசரி கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்துள்ளன.

கடந்த சில மாதங்களாக மற்ற மாவட்டங்களை காட்டிலும், கோவையில் கூடுதலாக தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. அவ்வப்போது கொரோனா பாதிப்புகளில் சென்னை முதலிடம் பிடிப்பதும், மீண்டும் கோவை முதலிடம் பிடிப்பதுமாக உள்ளது. கோவையில் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா தொற்று பாதிப்புகள் ஏறுவதும், இறங்குவதுமாக உள்ள நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கோவையில் நேற்றைய தினத்தை விட இன்று 17 பேருக்கு கூடுதலாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கோவையில் இன்று 235 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 40 ஆயிரத்து 915 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 2165 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை மீண்டும் குறைந்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 237 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால்  குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 36 ஆயிரத்து 430 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இன்று ஒருவர் உயிரிழந்தனர். கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2320 ஆக அதிகரித்துள்ளது.

ஈரோடுதிருப்பூர், நீலகிரி நிலவரம்

ஈரோட்டில் இன்று 130 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 18 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது. 134 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்னர். மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 1385 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் இன்று இரண்டு பேர் உயிரிழந்தனர். ஈரோடு மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்புகள் 101046 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 98993 ஆகவும், மொத்த உயிரிழப்புகள் 668 ஆக அதிகரித்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 101 பேருக்கு இன்று கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று 16 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது. 71 பேர் குணமடைந்துள்ள நிலையில், 937 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை. திருப்பூரின் மொத்த கொரோனா பாதிப்புகள் 92307 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 90420 ஆகவும் அதிகரித்துள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை 950 ஆக உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் இன்று 35 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினத்தை விட இன்று ஒருவருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது. 45 பேர் குணமடைந்துள்ள நிலையில், 346 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை. நீலகிரி மாவட்டத்தின் மொத்த பாதிப்புகள் 32461 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 31919 ஆகவும் உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 196 ஆக உள்ளது.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TTV Dhinakaran: ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதியை டிக் செய்த டிடிவி தினகரன்.. உற்சாகத்தில் அமமுக!
TTV Dhinakaran: ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதியை டிக் செய்த டிடிவி தினகரன்.. உற்சாகத்தில் அமமுக!
உங்க பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லையா? 75,000 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்!
Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
ABP Premium

வீடியோ

இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!
மூர்த்தியுடன் ரகசிய DEAL? தவெக மா.செ மீது புகார்! சொந்த கட்சியினரே போர்க்கொடி
Sleeping Man falls from 10th Floor|10 வது மாடியில் இருந்துதவறி விழுந்த முதியவர் | Surat
DMDK DMK Alliance | திமுக கொடுத்த OFFER!ரூட்டை மாற்றும் பிரேமலதா! தேமுதிக கூட்டணி ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TTV Dhinakaran: ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதியை டிக் செய்த டிடிவி தினகரன்.. உற்சாகத்தில் அமமுக!
TTV Dhinakaran: ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதியை டிக் செய்த டிடிவி தினகரன்.. உற்சாகத்தில் அமமுக!
உங்க பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லையா? 75,000 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்!
Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
Tomato And Onion Price: நீயா.? நானா.? போட்டி போடும் தக்காளி, வெங்காயம் விலை - ஒரு கிலோ இவ்வளவா.?
நீயா.? நானா.? போட்டி போடும் தக்காளி, வெங்காயம் விலை - ஒரு கிலோ இவ்வளவா.?
Rs 1000 Incentive For Rural School Girls: 3 முதல் 5ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ.500.! 6 ஆம் வகுப்புக்கு ரூ.1000 ஊக்கத்தொகை - அசத்தல் அறிவிப்பு
3 முதல் 5ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ.500.! 6 ஆம் வகுப்புக்கு ரூ.1000 ஊக்கத்தொகை - அசத்தல் அறிவிப்பு
Ration Shop: ரேஷன் கடையில் உணவு பொருட்கள்.! புதிய நடைமுறை அறிவிப்பு- ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு
ரேஷன் கடையில் உணவு பொருட்கள்.! புதிய நடைமுறை அறிவிப்பு- ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு
Syria Mosque Blast 8 Dead: சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
Embed widget