மேலும் அறிய

ஆயிரம் விஜய் வந்தாலும் தமிழகத்தை மாற்ற முடியாது - நடிகர் ரஞ்சித்

ஒரு விஜய் அல்ல ஓர் ஆயிரம் விஜய் வந்தாலும் தமிழகத்தை மாற்ற முடியாது. இதுவரை வாக்குறுதி கொடுத்தவர்கள் தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று எந்த நீதிமன்றமும் அவர்களை தண்டிக்கவில்லை.

கோவை காந்திபுரம் பகுதியில் சாய் பிரசாத் எனும் புதிய ஸ்டுடியோ சிறப்பு விழாவில் பங்கேற்ற நடிகர் ரஞ்சித் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நடிகை திரிஷா விவகாரத்தில் யாரையும் தனிப்பட்ட முறையில் தெரியாது. நாகரீகம் என்பது எல்லோருக்கும் அடங்கிய ஒரு விஷயம். எல்லாரும் செய்யும் வேலை போன்று நடிப்பு என்பதும் ஒரு வேலையே. மானம் மரியாதை என்பது அனைவருக்கும் ஒரு உயர்ந்த பண்பு என இருக்கும் நிலையில் வைரல் கன்டென்ட் என்பதற்காக கூவத்தூர் விவகாரத்தை பேசியது அருவருக்கத்தக்க விஷயம். பொதுவாகவே கூத்தாடிகள் என்ற கண்ணோட்டம் மக்களுக்கு இருக்கிறது. நிஜ வாழ்க்கையில் நடிக்காத ஆள் இல்லை. இப்படி மனதை காயப்படுத்தும்படி அவர் பேசி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது போன்ற பேச்சு அரசியல் மீது ஒரு அருவருக்கத்தக்க எண்ணத்தை கொண்டு வருகிறது. இது போன்ற பேச்சுக்களை அரசியல்வாதிகள் தவிர்க்க வேண்டும். இந்த விவகாரத்தில் தனது முழு ஆதரவும் திரிஷாவிற்கு உள்ளது.

தமிழ்நாட்டில் நூற்றுக்கு 90 சதவிகிதம் மதுதான் இருக்கிறது. தமிழகத்தில் அரிசி விவசாயம் போய் மது விவசாயம் தான் தற்போது உள்ளது. ஒவ்வொரு முறையும் தமிழக அரசாங்கம் அமைக்கும் போதும் மதுவை படிப்படியாக குறைபோம் என்று கூறிவிட்டு, கடைகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு பதிலாக கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றனர். தமிழ்நாட்டில் தேர்தல் ஆரம்பித்தது முதல் மதுவை ஒழிப்போம், புகையிலை ஒழிப்போம் என்றார்கள். ஒழித்தார்களா? கல்வியை இலவசம், மருத்துவம் இலவசம் என்று கூறினார்கள். ஓட்டுக்கு பத்தாயிரம் ரூபாய், 12000 ரூபாய் என பணம் வாங்கிக் கொண்டு கேவலமாக திருடர்களுக்கு வாய்ப்பை கொடுக்காதீர்கள். தேர்தல் நேரத்தில் பதவிகளுக்காகவும், பணத்திற்காகவும் சிலர் கட்சி மாறுவது உண்டு. விஜயதாரணி பாரதிய ஜனதாவிற்கு மாறியது என்ன காரணத்திற்கு என்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் ஒரு நல்லாட்சி அமைய வேண்டும். நல்ல மாற்றம் வர வேண்டும் என்று மக்களோடு மக்களாக எனக்கும் ஒரு சிந்தனை உண்டு.

ஏற்கனவே திருடியவர்கள் மட்டுமே திருடிக் கொண்டிருக்க வேண்டும். புதிதாக யாரும் அரசியலுக்கு வரக்கூடாது என்று புதிதாக அரசியலுக்கு வருபவர்களை தூற்றுகின்றனர். ஒரு விஜய் அல்ல ஓர் ஆயிரம் விஜய் வந்தாலும் தமிழகத்தை மாற்ற முடியாது. இதுவரை வாக்குறுதி கொடுத்தவர்கள் தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று எந்த நீதிமன்றமும் அவர்களை தண்டிக்கவில்லை. மக்களிடம் தவறான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்தவர்கள் யாரும் தவறான வாக்குறுதிகளை கொடுத்து விட்டோம் என்று நினைக்கவில்லை. உடல்நிலை மட்டும் ஒத்துப் போயிருந்தால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தற்போது வரை போராடிக் கொண்டுதான் இருந்திருப்பார். அரசியல் மிகப்பெரிய வியாபாரம். அனைத்து தரப்பு மக்களுமே கடன் பெற்று அதனை அடைத்து வரும் நிலையில் எம்எல்ஏ மந்திரி போன்றோர் சைக்கிளில் வந்து வாக்கு கேட்டு இன்று பல லட்சம் கோடிகளை வைத்துள்ளார்கள்.

புதிதாக நல்லவர்கள் யாராவது வந்தால் ஒன்று தங்கள் கூட்டணியில் இணைத்து விடுவார்கள் அல்லது அவர் மீது சாக்கடையை வீசி தனிமனித வன்மத்தை கூறி அவர்களை அழித்து விடுவார்கள். கலாச்சாரம் பண்பாடு போன்றவற்றை பாதுகாக்க வேண்டும். மக்களைப் பற்றியும் மண்ணைப் பற்றியும் நேசிப்பவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாட்களாக தனக்கு இருக்கிறது. நடிகர் என்ற அடிப்படையில் பல கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைக்கின்றனர். ஏற்கனவே சில அரசியல் கட்சிகளில் இருந்து அனுபவங்கள் உள்ளதால் கொள்ளையடித்த எவனுக்கும் என் வாழ்க்கையில் மைக் பிடித்து பேச மாட்டேன். எத்தனை கோடி கொடுத்தாலும் எனது மனது நேர்மையானவர்களுக்கு மட்டுமே பிரச்சாரம் செய்ய வேண்டும் என எண்ணும். வாக்குக்காக இஸ்லாமியர் நோன்பு நிகழ்ச்சிகளில் குல்லா அணிந்து அமர்வதும், கிறிஸ்தவ நிகழ்ச்சிகளில் தேவாலயத்தில் சென்று அமர்ந்து கொள்வதும் ஒரு நாடகம் தான். இதனை ஒரு காமெடியாக பார்க்கிறேன். 

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது. அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் அந்த வாய்ப்பு கிடைத்தால் தான் அண்ணாமலை யார் என்பதை நிரூபிக்க. எந்த விஷயத்திலும் துணிச்சலாக செயல்படக் கூடியவர். அப்படிப்பட்ட ஒரு அதிகாரி பதவியை துறந்து மக்களுக்காக பொது வாழ்க்கைக்கு வருகிறார் என்றால். அது ஒரு சிறந்த அடிப்படை தான். பாமக தலைவர் அன்புமணியை தனக்கு மிகவும் பிடிக்கும். 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் வெளிநாடுகளிலும் பெயர் பெற்றவர். திறம்பட நிர்வாகம் செய்தவர், மதுவுக்கும் கலாச்சார சீரழிவுக்கும் எதிராக இருப்பவர். சமூக சிந்தனையுள்ள அறிவான தலைவர்” எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
ABP Premium

வீடியோ

Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்
Voter shouts at Hema malini | ”நீ மட்டும் வந்ததும் VOTE போடுவியா” சண்டை போட்ட முதியவர்! முகம் மாறிய ஹேமமாலினி
TTV Dhinakaran ADMK Alliance | ஒரே ஒரு பேனர்... அதிமுக கூட்டணியில் TTV? ஓரங்கட்டப்பட்டாரா OPS?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
ஏ.ஆர்.ரஹ்மான் பாரபட்சமும், வெறுப்பும் கொண்ட மனிதர்.. கங்கனா ரணாவத் பகீர் குற்றச்சாட்டு!
ஏ.ஆர்.ரஹ்மான் பாரபட்சமும், வெறுப்பும் கொண்ட மனிதர்.. கங்கனா ரணாவத் பகீர் குற்றச்சாட்டு!
IND vs NZ: கோப்பை யாருக்கு? நாளை மல்லுகட்டும் இந்தியா - நியூசிலாந்து! ரோகித் - கோலி காம்போ கலக்குமா?
IND vs NZ: கோப்பை யாருக்கு? நாளை மல்லுகட்டும் இந்தியா - நியூசிலாந்து! ரோகித் - கோலி காம்போ கலக்குமா?
Honda Activa vs Yamaha Fascino 125..! இரண்டு ஸ்கூட்டரில் எது பெஸ்ட்? விலை, மைலேஜ் எவ்வளவு?
Honda Activa vs Yamaha Fascino 125..! இரண்டு ஸ்கூட்டரில் எது பெஸ்ட்? விலை, மைலேஜ் எவ்வளவு?
Hero Splendor on EMI: ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்க லோன்ல வாங்குற திட்டம் இருக்கா.? முன்பணம், EMI எவ்வளவு வரும்.? பாருங்க
ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்க லோன்ல வாங்குற திட்டம் இருக்கா.? முன்பணம், EMI எவ்வளவு வரும்.? பாருங்க
Embed widget