மேலும் அறிய

அரசு சுகாதார நிலையம் குடியிருப்பா.? - செவிலியர் சஸ்பெண்ட்

கோவையில் சுகாதார நிலையத்தை ஆக்கிரமித்து வீடாக மாற்றிய செவிலியர் கனிதா பணியிடை நீக்கம்  மாவட்ட சுகாதார துறை அதிகாரி நடவடிக்கை  

கோவை, வடவள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தை செவிலியரின் கணவரும் திமுக பிரமுகரும்  குடியிருப்பாக  பயன்படுத்தி வருவதாக சமூகவலை தளங்களில் வீடியோ வைரலானது. இதுகுறித்து பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் துணை சுகாதார நிலையமாக செயல்பட்டு வந்த கட்டிடத்தில் பணி புரிந்து வந்த கனிதா  என்ற நகர்ப்புற சுகாதார செவிலியர், அங்கேயே குடியிருக்க அனுமதி வழங்கப்பட்டு இருப்பதும் , நான்கு அறைகளைக் கொண்ட அந்த கட்டிடத்தில் இரண்டு அறைகள் குடியிருப்பிற்கும்,  இரண்டு அறைகள் ஆரம்ப சுகாதார நிலையமாக பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. 

ஆனால் அனுமதிக்கப்பட்டதை விட கூடுதலாக ஒரு அறையை குடியிருப்பிற்காக கனிதா பயன்படுத்தி வருவதும் தெரிய வந்தது. மேலும் கனிதாவின் கணவர் தி.மு.க வில் பொறுப்பாளராக இருப்பதால் இந்த துணிச்சல் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்பாக பயன்படுத்துவதாக எழுந்த புகாருக்கு, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை சார்பில்  விளக்கம் அளிக்கப்பட்டது.  அதில்  வடவள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கடந்த பிப்ரவரி மாதம் 14 ம் தேதி திறக்கப்பட்டது., ஏற்கனவே, வடவள்ளியில் இருந்த 4 அறைகள் கொண்ட பழைய ஆரம்ப சுகாதார அலுவலகம், துணை சுகாதார நிலையமாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

அரசு கட்டிடத்தில் குடியிருந்த சர்ச்சை

அதில், நகர்புற சுகாதார செவிலியர்  கனிகா அங்கு பணியமர்த்தபட்டு கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை, குழந்தைகளுக்கு தடுப்பூசி, சிறு உபாதைகளுக்கான சிகிச்சை அளித்து வந்துள்ளார்.  இந்நிலையில், சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்ட பகுதிகளில் கனிதா மற்றும் அவரது கணவர் ஷியாம் சுந்தர் வீட்டு உபயோக பொருட்களை வைத்து இருந்தது தொடர்பாக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்திரவிடப்பட்டுள்ளதாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை தெரிவித்துள்ளது.

மேலும் இதை கவனிக்க தவறிய மாநகர சுகாதார அலுவலரிடம்  விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது எனவும், துணை சுகாதார நிலைய கட்டிடத்தில் உள்ள 4 அறைகளில் 2 அறைகளை பொது மக்கள் சிகிச்சைக்கு பயன்படுத்தவும், 2 அறைகளை மட்டும் தங்கிக் கொள்ள பயன்படுத்தவும் அறிவுறுத்தபட்டு உள்ளது எனவும், இரு சிகிச்சை அறைகளுக்கும்,  இரு குடியிருப்பு அறைகளுக்கும் இடையில் சுவர் எழுப்பவும், குடியிருப்பு பகுதிக்கு என  தனிவாசல் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க உத்திரவிடப்பட்டுள்ளதாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை விளக்கம் அளித்து உள்ளது. இந்நிலையில் தங்கிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டதை விட கூடுதலான அறையை பயன்படுத்தியது தொடர்பாக, வடவள்ளி  துணை சுகாதார நிலைய செவிலியர் கனிதாவை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரி பாலுசாமி உத்தரவிட்டார்..

தலைப்பு செய்திகள்

பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget