மேலும் அறிய
காஞ்சிபுரத்தில் நெசவாளர்கள் வீட்டில் கருப்பு கொடி ஏற்ற முடிவு - ஏன் இந்தப் போராட்டம்..?
ஆகஸ்ட் 7ஆம் தேதி தேசிய கைத்தறி தினம்,நெசவாளர்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்ற முடிவு .
![காஞ்சிபுரத்தில் நெசவாளர்கள் வீட்டில் கருப்பு கொடி ஏற்ற முடிவு - ஏன் இந்தப் போராட்டம்..? kanchipuram National Handloom Day been passed in the weavers' association to hoist the black flag at weavers' houses across Tamil Nadu TNN காஞ்சிபுரத்தில் நெசவாளர்கள் வீட்டில் கருப்பு கொடி ஏற்ற முடிவு - ஏன் இந்தப் போராட்டம்..?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/04/0104bedae791466d654ef45d6fa1e88d1691140068177113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
காஞ்சிபுரம் பட்டு சேலை
தேசிய கைத்தறி தினம் வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி கொண்டாடப்படும் நாளில் தமிழகம் முழுவதும் நெசவாளர்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்ற முடிவு செய்து நெசவுத் தொழிலாளர்கள் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் கைத்தறி நெசவாளர்கள்
காஞ்சிபுரம் ( Kanchipuram News ) : காஞ்சிபுரத்திற்கு முக்கிய அடையாளமாக காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள் இருந்து வருகிறது. கைத்தடியால் செய்யப்படும் காஞ்சிபுரம் பட்டு இருக்கும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது . காஞ்சிபுரம் காந்தி சாலையில் தேரடி அருகில் பட்டு மற்றும் பருத்தி கைத்தறி நெசவுத் தொழிலாளர் சங்க அலுவலகம் உள்ளது. இச்சங்க கூட்டம் மாவட்ட தலைவர் ஜி.எஸ்.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. சங்க மாவட்ட பொருளாளர் எஸ்.பழனி முன்னிலை வகித்தார். சங்க மாவட்ட செயலாளர் வி.சிவப்பிரகாசம் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் கூறியது.
விசைத்தறி எங்களுக்கு வேண்டாம்
கைத்தறி ரகங்களை விசைத்தறியில், உற்பத்தி செய்வதை தடை செய்யக் கோரி கைத்தறி நெசவாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் அரசு அதை தடுப்பதற்கான முயற்சிகளை முறையாக மேற்கொள்ளவில்லை. இதன் அடுத்த கட்ட முயற்சியாக வரும் 7 தேசிய கைத்தறி தினத்தன்று தமிழகத்தில் உள்ள அனைத்து கைத்தறி நெசவாளர்கள் வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றுவது என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதே நாளில் காலையில் காஞ்சிபுரத்தில் சங்க அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். மேலும் இந்தப் போராட்டம் குறித்து நெசவாளர்கள் வசிக்கும் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று சங்கம் சார்பில் , அனைவரும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என சங்க நிர்வாகிகள் வேண்டுகோள் எடுத்து வருகின்றனர். தேசிய கைத்தறி தினம் அன்று நெசவாளர்கள் போராட்டம் அறிவித்திருப்பது குறிப்பிடுத்தக்கது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion