Chennai Corona Update : மண்டல வாரியாக சென்னையில் கொரோனா பாதிப்பு.. இன்றைய நிலவரம்!
சென்னை மாநகராட்சி கொரோனா பாதிப்பை தினசரி வெளியிட்டு வருகிறது.
இன்றைய நிலவரப்படி, திருவொற்றியூர் மண்டலத்தில் 14 ஆயிரத்து 672 நபர்கள் குணம் அடைந்துள்ளனர். 250 பேர் அந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ள சூழலில், 66 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மணலி மண்டலத்தில் 7 ஆயிரத்து 873 நபர்கள் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை குணம் அடைந்துள்ளனர். அந்த மண்டலத்தில் 76 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 33 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாதவரம் மண்டலத்தில் 19 ஆயிரத்து 879 நபர்கள் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 245 நபர்கள் அங்கு உயிரிழந்துள்ள நிலையில் 67 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். தண்டையார்பேடடை மண்டலத்தில் 34 ஆயிரத்து 892 நபர்கள் குணம் அடைந்துள்ளனர். 540 பேர் அங்கு உயிரிழந்துள்ள நிலையில், 127 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். ராயபுரம் மண்டலத்தில் 37 ஆயிரத்து 305 நபர்கள் குணம் அடைந்துள்ளனர். 836 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 155 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திரு.வி.க. நகர் மண்டலத்தில் 40 ஆயிரத்து 579 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 836 பேர் அங்கு கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 155 பேர் அங்கு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்பத்தூர் மண்டலத்தில் 42 ஆயிரத்து 128 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 659 பேர் அங்கு உயிரிழந்துள்ள சூழலில், 108 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அண்ணாநகர் மண்டலத்தில் 54 ஆயிரத்து 763 பேர் சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளனர். 956 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர். 162 பேர் தற்போது அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோடம்பாக்கம் மண்டலத்தில் 51 ஆயிரத்து 731 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 932 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர். 139 பேர் தற்போது அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். வளசரவாக்கம் மண்டலத்தில் 35 ஆயிரத்து 73 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 452 பேர் அந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ளனர். 116 பேர் தற்போது அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆலந்தூர் மண்டலத்தில் 24 ஆயிரத்து 213பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 367 பேர் அந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ள நிலையில், 75 பேர் தற்போது அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அடையாறு மண்டலத்தில் 44 ஆயிரத்து 73 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். அந்த மண்டலத்தில் 664 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 161 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெருங்குடி மண்டலத்தில் 25 ஆயிரத்து 25 நபர்கள் குணம் அடைந்துள்ளனர். 339 பேர் அந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ளனர். 103 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 16 ஆயிரத்து 144 பேர் குணம் அடைந்துள்ளனர். 136 பேர் அங்கு கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். 44 பேர் அங்கு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு சுமார் 2 ஆயிரத்து 700 ஆக பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.