மேலும் அறிய

நகராட்சி பணி நியமன வழக்கு: அதிமுகவுக்கு ‘அவசரம் ஏன்? -உயர்நீதிமன்றம் கேள்வி !

வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டு இரண்டு, மூன்று நாட்கள் தான் ஆகிறது. அதற்குள் நாங்கள் என்ன செய்ய முடியும்? நீதிபதி கேள்வி

சென்னை: தமிழக நகராட்சி நிர்வாகத்துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் பணி நியமன முறைகேடு தொடர்பான வழக்கில், அதிமுக தரப்பு காட்டும் அவசரத்தைக் கண்டு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

நகராட்சி பணி நியமன வழக்கு: அதிமுகவுக்கு ‘அவசரம் ஏன்? - உயர்நீதிமன்றம் கேள்வி

நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமன முறைகேடு புகார் தொடர்பாக வழக்கப்பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் இவ்வளவு அவசரம் காட்டுவது ஏன்? என அதிமுக எம்.பி.இன்பதுரை தரப்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு கடிந்துகொண்டுள்ளது.  

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நியமனங்களுக்கு லஞ்சமாக பெறப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யும்படிம் தமிழக டி.ஜி.பிக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது.

இந்த கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக எம்.பி. இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.  

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, அமலாக்கத் துறை அனுப்பிய தகவல்களில் ஆதாரங்கள் உள்ளதாகக் கூறி, அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யும்படி, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இன்று தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு முன்பு இன்பதுரை தரப்பு வழக்கறிஞர் ஆஜரானார். அப்போது, நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமன முறைகேடு தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், லஞ்ச ஒழிப்புத்துறை இதுவரை வழக்குப் பதிவு செய்யவில்லை என முறையிட்டார். 

இதனை கேட்ட நீதிபதிகள், வழக்குப் பதியும்படி உத்தரவு பிறப்பித்து, இரண்டு, மூன்று நாட்கள் தானே ஆகிறது. அதற்குள் நாங்கள் என்ன செய்ய முடியும்?என்றும, எதற்காக அவசரப்படுகிறீர்கள் என்ற கோணத்திலும் இன்பதுரை வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், இது தொடர்பாக ஏதேனும் மனுத்தாக்கல் செய்யப்பட்டால் வழக்கமான முறையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Kanchipuram Ashok Leyland Factory : காஞ்சிபுரம் மக்களுக்கு ரூ.500 கோடியில் அசத்தலான திட்டம்.! அசோக் லேலண்ட் புதிய தொழிற்சாலை - அசத்திய தமிழக அரசு
காஞ்சிபுரம் மக்களுக்கு ரூ.500 கோடியில் அசத்தலான திட்டம்.! அசோக் லேலண்ட் புதிய தொழிற்சாலை - அசத்திய தமிழக அரசு
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
Plant Nursery Training Course : செடிகள் வளர்க்க, விற்க ஆர்வமா.!! ஒரு மாத கால இலவச பயிற்சி- உடனே விண்ணப்பிக்க- ஆட்சியர் அழைப்பு
கொட்டும் பணம்... செடிகள் வளர்க்க, விற்க ஆர்வமா.!! ஒரு மாத கால இலவச பயிற்சி- உடனே விண்ணப்பிக்க அழைப்பு
விழுப்புரம் அருகே வரலாற்றுப் பொக்கிஷம்: 1300 ஆண்டுகள் பழமைவாய்ந்த பல்லவர் கால 'கொற்றவை' சிலை கண்டுபிடிப்பு!
விழுப்புரம் அருகே வரலாற்றுப் பொக்கிஷம்: 1300 ஆண்டுகள் பழமைவாய்ந்த பல்லவர் கால 'கொற்றவை' சிலை கண்டுபிடிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
தினக்கூலி மகன்; மாற்றுத்திறன் - தமிழ்வழியில் படித்து முதல் முறையே UPSC தேர்ச்சி பெற்ற கோவை அப்துல்லா!
தினக்கூலி மகன்; மாற்றுத்திறன் - தமிழ்வழியில் படித்து முதல் முறையே UPSC தேர்ச்சி பெற்ற கோவை அப்துல்லா!
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
Hormuz Trump New Warning: “ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
“ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
Hyundai Verna Facelift Vs Old Verna: அட்டகாசமான ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்டுக்கும் பழைய வெர்னாவுக்கு என்ன வித்தியாசம் தெரியுமா.?
அட்டகாசமான ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்டுக்கும் பழைய வெர்னாவுக்கு என்ன வித்தியாசம் தெரியுமா.?
Trump Thank Reliance: ரிலையன்ஸால் அமெரிக்காவிற்கு ஜாக்பாட்; முதல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பு; ட்ரம்ப் நன்றி
ரிலையன்ஸால் அமெரிக்காவிற்கு ஜாக்பாட்; முதல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பு; ட்ரம்ப் நன்றி
சத்துணவா? விஷ உணவா? கோவை அரசுப்பள்ளி மாணவர்கள் 44 பேர் வாந்தி, மயக்கம்- அன்புமணி கண்டனம்!
சத்துணவா? விஷ உணவா? கோவை அரசுப்பள்ளி மாணவர்கள் 44 பேர் வாந்தி, மயக்கம்- அன்புமணி கண்டனம்!
Embed widget