Crime : பள்ளி சென்றபோது பாலியல் தொல்லை..! ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்த மாணவி..!
சென்னையில் ஓடும் ஆட்டோவில் பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதால் பள்ளி மாணவி கீழே குதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி வழக்கமாக அந்த வழியே செல்லும் ஷேர் ஆட்டோவில் பள்ளி சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில், நேற்றும் வழக்கம்போல அந்த வழியே சென்ற ஷேர் ஆட்டோவில் ஏறிச் சென்றுள்ளார்.
அப்போது, ஷேர் ஆட்டோவில் வாலிபர்கள் இருவரும் பயணித்து வந்துள்ளனர். அவர்கள் இருவருக்கும் சுமார் 25 வயது இருக்கும். இந்த நிலையில், ஆட்டோ புதுவண்ணாரப்பேட்டையை நெருங்கியபோது அந்த வாலிபர்கள் இருவரும் திடீரென மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.
இதனால், அதிர்ச்சியடைந்த அந்த மாணவி பயத்தில் ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்துள்ளார். மாணவி திடீரென ஆட்டோவில் இருந்து கீழே குதித்ததை கண்டு அதிர்ச்சியடைந்த ஆட்டோ டிரைவர் ஆட்டோவை நிறுத்தியுள்ளார். மாணவி கீழே குதித்ததை கண்டு அதிர்ச்சியடைந்த வாலிபர்கள் இருவரும் ஆட்டோவில் இருந்து குதித்து தப்பி ஓடினர்.
மேலும் படிக்க : Crime : 'என்ன எப்படியாச்சு மீட்டு எடுங்க’ : பதைபதைக்கும் நிமிடங்கள்.. கம்போடியா நாட்டில் தவிக்கும் நெல்லை வாலிபர்.. (வீடியோ)
பின்னர், ஆட்டோ டிரைவர் கீழே குதித்த மாணவியை மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்த மாணவிக்கு மூக்கு, தாடை, இரண்டு கைகள் உள்பட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
தகவலறிந்த போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து மாணவியிடம் விசாரணை நடத்தினர். மேலும், ஆட்டோ டிரைவர் சார்லஸ் ( 49) என்பவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் விசாரணையில் மாணவிக்கு தொல்லை தந்த வாலிபர்கள் டோல்கேட்டில் இருந்து தங்கச்சாலைக்கு செல்வதற்காக ஆட்டோவில் பயணித்து வந்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஆட்டோ டிரைவர் சார்லசுக்கு தொடர்பு இருக்கிறதா? என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதுமட்டுமின்றி, 9ம் வகுப்பு மாணவிக்கு ஆட்டோவில் பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதா? அல்லது மாணவியை கடத்த முயற்சித்தனரா? என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். பள்ளி சென்ற மாணவி பாலியல் தொல்லையால் ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க : Crime : சொந்த வீட்டிலேயே 550 சவரன் திருட்டு! கள்ளக்காதலிக்கு கிஃப்ட்.. விசாரணையில் சிக்கிய தொழிலதிபர்!
மேலும் படிக்க : Crime: போதை மருந்துகளுடன் தாறுமாறாக பாய்ந்துசென்ற கார்.. பதறவைத்த சேஸிங் காட்சிகள்.. மடக்கிய காவல்துறை
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்