Barley Grass : பார்லி தெரியும்.. பார்லி புல் தெரியுமா? இது இவ்வளவு முக்கியமானதா? இது தெரியாமப்போச்சே
Barley Grass : காயவைக்கப்பட்ட இதன் பழங்கள் மற்றும் இலைகள், இவற்றை உள்வாங்கிய சுடுநீர் என்று இவை அனைத்தும் சளியில் தொடங்கி சில கிட்னி செயல்பாட்டு பிரச்சனைகளுக்கான சிகிச்சை வரை பயன்படுத்தப்படுகின்றன.
Barley Grass : பார்லி குறித்து பலருக்கும் தெரியும். அரிசி, கோதுமை, சோளத்துக்கு அடுத்தபடியாக உலகம் முழுவதும் அதிகம் உற்பத்தி செய்யப்படும் தானியம் இது. கிட்டத்தட்ட அனைத்து பருவ சூழ்நிலைகளிலும் வளரக் கூடிய தாவரம் இது. பார்லி புல் என்று கூறப்படும் அதன் இலைகளும் பல அற்புத பலன்களைக் கொண்டவை. அதன் சத்துகள், பயன்பாடு குறித்து பார்க்கலாம்.
ஆயுர்வேதத்தில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த இது அதிகம் பயன்படுகிறது, இரத்தத்தின் சக்கரை அளவையும், கொழுப்பு அளவையும் சமப்படுத்துவதில் இதன் பங்கு அரியது.
பசியையும் இது கட்டுப்படுத்தும். ஏனெனில், இதனின் சீரண நேரம் அதிகம். உடலுக்குத் தேவையான சத்துகளை வழங்குவதுடன் எதிர்ப்பு சக்தியையும் வலுப்படுத்தும்.
சோடியம் சத்து இதனிடம் உள்ளது, அதனால் வயிறின் சுரப்பிகளுக்கு ஊக்குவிப்பு வழங்கும் சக்தியும் இதனிடம் இருக்கிறது.
இலைகளில் இயல்பாகவே பச்சையம் இருப்பதால், உடலில் தங்கியிருக்கும் நச்சுப்பொருட்களை சுத்தப்படுத்தும் பண்பு இதனிடம் உள்ளது.
இதையும் படிங்க..
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
மேலும் ஈரல் புற்றுநோயை ஆற்றுப்படுத்தும் சக்தியும் இதனிடம் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக, மூளையில் ஏற்படும் நினைவு இழப்பை சரிகட்டும் சிகிச்சையிலும் பயன்படுத்தப்படுகிறது.
இதன் இலைகள் மட்டுமல்லாமல், காயவைக்கப்பட்ட இதன் பழங்கள் மற்றும் இலைகள், இவற்றை உள்வாங்கிய சுடுநீர் என்று இவை அனைத்தும் சளியில் தொடங்கி சில கிட்னி செயல்பாட்டு பிரச்சனைகளுக்கான சிகிச்சை வரை பயன்படுத்தப்படுகின்றன.
இப்படியான மருத்துவக் குணங்கள் கொண்ட பார்லி புல்லில் வேறேதும் இடர்பாடுகள் இருக்குமா? இருக்கின்றன. இதனிடம் மிகுந்து இருக்கும் வைட்டமின் கே ரத்தம் உறைய வைக்கும் மருந்துகளின் ஆற்றலை மட்டுப்படுத்தலாம். சிலருக்கு அலர்ஜி ஏற்படுத்தலாம். மன உளைச்சல், இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இதனை பயன்படுத்தக் கொடுக்கும்முன் சில சிகிச்சைகளையும், சோதனைகளையும் மேற்கொள்வது அவசியம்.
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்