தூக்கத்தில் பெண்களுக்கு உச்சகட்ட நிலை ஏற்படுமா? ஆய்வுகள் கூறுவது என்ன?
ஆண்களை போல் பெண்களுக்கும் தூக்கத்தில் உச்ச கட்டத்தை அடைய முடியுமா?

ஆண்கள் இரவுநேரங்களில் கனவுகளின் மூலம் உச்சக்கட்டம் அடைவார்கள் என்ற விஷயம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதேபோன்று பெண்களுக்கு தூக்கத்திலேயே உச்சக்கட்டம் அடைய முடியும் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். அது எப்படி பெண்கள் தூக்கத்தில் ஆண்களை போல் உச்சக்கட்டத்தை அடைய முடியும். இதை இரவுநேர உச்சக்கட்டம், வெட் ட்ரீம்ஸ் என்று பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறது.
பெண்களுக்கு பிறப்பு உறுப்பு பகுதியிலுள்ள பெல்விக் பகுதியில் ரத்த ஓட்டம் அதிகமாகும் போது, அங்குள்ள நுண் நரம்புத் பகுதிகளில் மெல்லிய கிளர்ச்சி ஏற்படும். பொதுவாக உடலுறவின்போது இப்படி நிகழும். அந்த சமயத்தில் தான் பெண்கள் உறவில் உச்சத்தை எட்டுகிறார்கள். அதேபோல தூக்கத்திலும் நிகழ வாய்ப்பு உள்ளது என்பது நிதர்சனமான உண்மையாகும்.
பெண்கள் பொதுவாக தூங்கும்போது பெல்விக் பகுதியில் ரத்த ஓட்டம் அதிகமாகும்போது நரம்புகள் கிளர்ச்சி நிலையை அடைகின்றனர். அப்போது தூக்கத்தில் பெண்கள் உச்சநிலையை எட்டுகிறார்கள் இதை மருத்துவர்கள் psychogenic arousal என்று குறிப்பிடுகின்றனர். தூக்கத்தில் பெண்களுக்கு ஏற்படும உச்சக்கட்டம் ஆண்களுக்கு மாதிரி நிஜமானது என்று சில ஆய்வுகளும் தெரிவிக்கின்றன. இது அடிப்படையில் காமம் சார்ந்த கனவுகள் தூங்கும் போது வரும் போது அதிகமாக கிளார்ச்சி ஏற்பட்டு உச்சக்கட்டம் நிகழ்கிறது.

பெரும்பாலும் இத்தகைய கனவுகள் மற்ற வழக்கமான கனவுகளைப் போல அல்லாமல் பெண்கள் தூங்கி எழுந்தபின்னும் அவர்களுக்கு நன்றாக நினைவில் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆண்களுக்கு தூக்கத்தில் உச்சக்கட்டம் நிகழும்போது எப்படி விந்து வெளியேறுகிறதோ அதைப்போல பெண்களுக்கு இந்த கனவுகளும் அதனால் ஏற்படும் கிளர்ச்சியும் நன்றாக நியாபகத்தில் இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. கிளர்ச்சி அடைவதற்கு நாம் தூங்கும்போது படுக்கும் பொசிஷன்கள் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அதன்படி சில குறிப்பிட்ட பொசிஷன்களில் தூங்கும்போது இயல்பாகவே பிறப்புகளில் ரத்த ஓட்டம் அதிகரித்து கிளர்ச்சி நிலையை அடையச் செய்கிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
நாம் தூங்கும் பொசிஷன்களில் படுக்கையின் மேல் திரும்பி வயிற்றுப் பகுதியை அழுத்தியபடி துங்கும்போது கிளர்ச்சி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் அப்போது உடலும் பிறப்புறுப்பு பகுதிகளும் நேரடியாக படுக்கையில் உரசிக் கொண்டிருக்கும். அந்த பொசிஷனில் தூங்கும்போது கிளர்ச்சியும் உச்சக்கட்டமும் எளிதாகவும் வேகமாகவும் உண்டாவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















