Essential Oil Sleep : நல்ல தூக்கம் இல்லையா? இந்த 5 நறுமண எண்ணெயும் இவ்வளவு யூஸ் ஆகுமா?
தளர்வை ஊக்குவிக்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும், ஒரு நல்ல இரவு தூக்கத்தை பெறவும் பல அத்தியாவசிய எண்ணெய்கள் பயன்படுத்தப்படுகின்றன.
![Essential Oil Sleep : நல்ல தூக்கம் இல்லையா? இந்த 5 நறுமண எண்ணெயும் இவ்வளவு யூஸ் ஆகுமா? Struggling For A Good Night’s Sleep? Try These 5 Soothing Essential Oils Essential Oil Sleep : நல்ல தூக்கம் இல்லையா? இந்த 5 நறுமண எண்ணெயும் இவ்வளவு யூஸ் ஆகுமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/13/d37ec2782febd4ffce1b461bdf463a7e1676289363999557_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இயற்கை எண்ணெய்கள் பல நூற்றாண்டுகளாக தூக்கம் சார்ந்த பிரச்னைகளுக்குத் தீர்வாக பயன்படுத்தப்படுகின்றன. ஒட்டுமொத்த நல்வாழ்வு மற்றும் வாழ்க்கைத் தரத்திற்கு ஒரு நல்ல தூக்கம் அவசியம், ஆனால் நமது நவீன வாழ்க்கை முறை மற்றும் அன்றாட வாழ்க்கையின் மன அழுத்தத்துடன், நிதானமான இரவு தூக்கத்தைப் பெறுவது பலருக்கு சவாலானது. நீங்கள் தூக்கமின்மை, அல்லது பதட்டத்துடன் போராடுகிறீர்கள் என்றால், அல்லது உங்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த விரும்பினாலும், இந்த இயற்கை எண்ணெய்களை உங்கள் அன்றாட வழக்கத்தில் கொண்டுவருவது மிகவும் பயனுள்ள தீர்வாக இருக்கும். தளர்வை ஊக்குவிக்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும், ஒரு நல்ல இரவு தூக்கத்தை பெறவும் பல அத்தியாவசிய எண்ணெய்கள் பயன்படுத்தப்படுகின்றன.
சிறந்த தூக்கத்திற்கு சில இயற்கை எண்ணெய்கள் இங்கே:
1. லாவெண்டர் எண்ணெய்
லாவெண்டர் எண்ணெய் என்பது நன்கு அறியப்பட்ட இயற்கை எண்ணெய், இது கவலையைத் தணிக்கும் என நம்பப்படுகிறது. இது பதட்டத்தை நிர்வகிக்க உதவுவது மட்டுமல்லாமல், தூக்கப் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க உதவும் வகையிலான விளைவையும் கொண்டுள்ளது. 2012 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், லாவெண்டர் எண்ணெயை உபயோகிப்பது மூளையின் ஒரு பகுதியான லிம்பிக் அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.அது தூக்கத்தை தருகிறது.
எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது: சூடான குளியல் நீரில் சில துளிகள் லாவெண்டர் எண்ணெயைச் சேர்க்கலாம் அல்லது ஜோஜோபா, பாதாம் எண்ணெய் போன்ற எண்ணெயுடன் கலந்து தடவி பின்னர் குளிக்கலாம்.
2. பெர்கமோட் எண்ணெய்
இந்த இயற்கை எண்ணெய் பலவகையிலான தீர்வாகும். இது தூக்கமின்மையால் பாதிக்கப்படுபவர்கள் உட்பட பல எண்ணிக்கையிலான மக்களுக்கு இந்த எண்ணெய் பயனளிக்கும். அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளுடன் கூடிய இந்த பெர்கமோட் எண்ணெய் வீக்கத்தைக் குறைக்கவும் உடலைத் தாக்கும் பாக்டீரியாவை எதிர்த்துப் போராடவும் உதவும். கூடுதலாக, இது இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பையும் குறைக்கிறது, தளர்வை ஊக்குவித்து மற்றும் உடலை ஓய்வுக்கு தயார்படுத்துகிறது. லாவெண்டர் எண்ணெயைப் போலவே, பெர்கமோட் எண்ணெய் தூக்கத்தைத் தூண்ட உதவும். இது தவிர மேலும், மன அழுத்த உணர்வை மட்டுப்படுத்த இது பெரிதும் உதவுகிறது.
3. ரோஜா எண்ணெய்
ரோஜா இதழ்களிலிருந்து பெறப்பட்ட இந்த எண்ணெய் ரோஜாக்களின் அதே உற்சாகமூட்டும் வாசனையைக் கொண்டது. கடந்தகால ஆய்வுகளின்படி, அடிவயிற்றில் ரோஜா எண்ணெயை லேசாக மசாஜ் செய்து அடிக்கடிப் பயன்படுத்துவதன் விளைவாக மாதவிடாய் அசௌகரியம் குறைந்து பதட்டத்தை தனித்து இனிமையானதொரு உணர்வை ந்மக்குத் தருகிறது.
எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது: வெதுவெதுப்பான நீரில் ஐந்து சொட்டு ரோஜா எண்ணெய் சேர்த்து குளிப்பது உடல் இளகச் செய்து புத்துணர்வானதொரு நிலையைக் நமக்கு அளிக்கிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)