Vitamin D: வைட்டமின் D அதிகம் உள்ள சாப்பாடுகள் என்னென்ன..? இதோ லிஸ்ட்..!
வைட்டமின் டி அதிகமுள்ள உணவுகளையும் அவற்றின் பயன்களைப் பற்றியும் கீழே பார்க்கலாம்.
நமது உடலின் ஆரோக்கியத்திற்கு ஏராளமான வைட்டமின்ளும், புரதங்களும் தேவைப்படுகிறது. குறிப்பாக, வைட்டமின் டி மிகவும் முக்கியமானது ஆகும்.
வைட்டமின் D
வைட்டமின் D நம் உடலிற்கு பல வகைகளில் முக்கியமானது. உடலில் ஆரோக்கியமான செல்களுக்கு வைட்டமின் D முக்கியமானது. அதே நேரத்தில் நமது எலும்புகள் வலிமையாக இருக்க வேண்டுமென்றால் கால்சியம் மிக அவசியமானது. நமது உடலில் இயல்பாக கால்சியமை எடுத்துக்கொள்ளும் திறன் இருப்பதில்லை. இந்த கால்சியமை எடுத்துக்கொள்ள நமக்கு வைட்டமின் டி பயன்படுகிறது. எனவே, வைட்டமின் டி பல வகையான நமது எலும்புகளை வலுவாக்குவதுடன் பல வகையான எலும்பு தொடர்பான நோய்களில் இருந்தும் நம்மை பாதுகாக்கக் கூடியது.
குழந்தைகளுக்கு வரும் ஆஸ்டியோபோரோசிஸ் என்கிற ஒருவகையான நோயினில் இருந்து நம்மை பாதுகாக்கக் கூடியது. வைட்டமின் அதிகமுள்ள உணவு வகைகளை தினசரி எடுத்துக்கொள்வது உங்களுக்கு பயனளிக்கக் கூடியது. எந்த உணவுகளில் இந்த வைட்டமின் அதிகம் கிடைக்கக் கூடியது என்பதை பார்க்கலாம். இவற்றில் பல உணவுப் பொருட்கள் நமது வீட்டில் அன்றாடம் பயன்படுத்தக் கூடிய பொருட்கள் என்பதால் நாம் அனைவரும் பயணடையலாம்.
சூரிய ஒளி
எல்லாவற்றிற்கும் முன்னதாக நீங்கள் செய்ய வேண்டியது போதுமான சூரிய ஒளியில் சென்று நிற்பது, அதுவும் குறிப்பாக அதிகாலை சூரிய ஒளி. வைட்டமின் டி க்கான மூலாதாரம் சூரிய ஒளிதான்.
காளான்கள்
காளான்கள் மிகப் பரவலாகக் கிடைக்கக் கூடியவை. பெரும்பாலான காளான்களில் இந்த வைட்டமின் இயல்பாக காணப்படுவதில்லை. ஆனால் நன்றாக வெயிலில் உலர்ந்த காளான்களில் வைட்டமின் D அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
சால்மல் மீன்
சால்மன் மீன் வைட்டமின் D அதிகம் உள்ள ஒரு உணவு. இந்த மீன் உங்களது ஒரு நாளைக்கான மொத்த வைட்டமின் தேவையையும் பூர்த்தி செய்யக் கூடியது.
காட் லீவர் எண்ணெய்
காட் லீவர் எண்ணெய் மாத்திரைகள் பொதுவாகவே வைட்டமின் D குறைப்பாட்டிற்கு பயன்படுத்தபட்டு வருகிறது. அதே நேரத்தில் காட் லீவர் எண்ணெய்கள் சொரியோசிஸ், ட்யூபர்க்ளோசிஸ் போன்ற நோய்களில் இருந்து குணமடையவும் பயன்படுத்தப்படுகிறது. உடல் வீக்கத்தைக் குறைப்பதற்கு இந்த எண்ணெய் உதவக்கூடியது.
முட்டையின் மஞ்சள் கரு
பெரும்பாலான வீடுகளில் காலை உண்வாக இருப்பது முட்டை.முட்டையின் மஞ்சள் கருவில் அதிகப்படியான வைட்டமின் D இருக்கிறது. ஆனால் தினமும் முட்டையை எடுத்துக்கொள்வது ஆரோக்கியமானது இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
சோயாவிலிருந்து தயாரிக்கப்படும் பால்
சோயா பீன்களில் இருந்து தயாரிக்கப்படுவது சோயா பால்.பசும்பாலின் அடதே குணாம்சங்களை இது கொண்டிருந்தாலும் இதில் அதிகளவிலான வைட்டமின் சி மற்றும் டி கிடக்கின்றன. தினமும் இவற்றில் ஏதோ ஒன்றை உங்களது உணவில் சேர்த்துக்கொள்வது உஙகளது ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உணர்வீர்கள்.