(Source: ECI/ABP News/ABP Majha)
Potato Milk Curry :அசத்தல் சுவையில் உருளைக்கிழங்கு பால் கறி ரெசிபி: செய்முறை இதோ...
சுவையான உருளைக்கிழங்கு பால் கறி எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க.
உருளைக்கிழங்கு செய்யும் அனைத்து டிஷ்களுமே சுவையாகத்தான் இருக்கும். இதனால் உருளைக்கிழங்கு பிரியர்கள் ஏராளமானோர் உள்ளனர். உருளைக்கிழங்கில், மசாலா, ஃப்ரை, குருமா உள்ளிட்டை வகைகளையே தொடர்ந்து செய்து அலுத்துப் போனவர்கள் வித்தியாசமான முறையில் உருளைக்கிழங்கு பால் கறி சமைக்கலாம். இதை சாதத்துடன் சைடிஷ்சாக வைத்து சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும். வாங்க உருளைக்கிழங்கு பால் கறி எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 2
தேங்காய் துருவல் - 1/2 கப்
சிறிய வெங்காயம் - 1 கப்
தக்காளி - 1
சீரகம் - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணைய் -தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
உளுத்தம்பருப்பு - சிறிதளவு
செய்முறை:
ஒரு குக்கரில் உருளைக்கிழங்கை சேர்த்து அதில் தண்ணீர் விட்டு 3 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். விசில் அடங்கிய பின் குக்கரை திறந்து உருளைக்கிழங்கின் தோலினை உறித்து விட்டு நன்றாக மசித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். தக்காளியையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு மிக்சி ஜாரில் துருவிய தேங்காய் ,சீரகம் ,சோம்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை சேர்த்து சில நிமிடங்கள் வதக்கி விட்டு, பின் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
அடுத்தாக அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி விட வேண்டும். பின் தக்காளியை சேர்த்து வதக்கி விட வேண்டும்.
தக்காளி நன்றாக வதங்கிய பிறகு, அதில் உருளைக்கிழங்கு மற்றும் உப்பு சேர்த்து வதக்கி விட வேண்டும். இப்போது அரைத்து வைத்துள்ள மசாலாவை ஊற்றி வேக வைக்க வேண்டும். கடைசியாக மல்லித்தழையை தூவி இறக்கி விடலாம். அவ்வளவுதான் சுவையான உருளைக்கிழங்கு பால் கறி தயாராகி விட்டது. இதை சாதம் சாம்பாருடன் சைடிஷ்சாக வைத்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
மேலும் படிக்க
Gutka: சென்னையில் குட்கா விற்பனைக்கு துணைபோன 15 காவல் ஆய்வாளர்கள் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்