மேலும் அறிய
Advertisement
Paneer Paratha: பரோட்டா பிரியரா நீங்க! இந்த பனீர் பரோட்டாவை ட்ரை பண்ணுங்க - செம டேஸ்ட்டா இருக்கும்!
பனீர் பரோட்டா எப்படி செய்வதென்று பார்க்கலாம். வீட்டிலே செய்து அசத்துங்கள்.
பரோட்டா பிரியர்கள் ஏராளமானோர் உண்டு. ஆனால் அவர்கள் பெரும்பாலும் ஹோட்டலுக்குச் சென்று தான் பரோட்டா சாப்பிடுகின்றனர். பொரித்த பரோட்டா, சாதாரண பரோட்டா இவை இரண்டை தான் நீங்கள் பெரும்பாலும் சுவைத்திருப்பீர்கள். நாம் இப்போது சுவையான பனீர் பரோட்டா எப்படி செய்வது என்று தான் பார்க்க போகின்றோம். இதில் ஸ்டஃப் செய்து பரோட்டா சுடுவதால் இது மேலும் சுவையாக இருக்கும். இந்த ரெசிபியை ஒருமுறை ட்ரை பண்ணா நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்
- மாவுக்கு:
- 2 கப் கோதுமை மாவு
- 2/3 கப் தண்ணீர்
- 1 டீஸ்பூன் நெய்
- நிரப்புவதற்கு (stuff):
- 200 கிராம் பனீர்
- 2 டீஸ்பூன் வெங்காயம், பொடியாக நறுக்கியது
- 2 டீஸ்பூன் கொத்தமல்லி, பொடியாக நறுக்கியது
- 1 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது
- 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்
- 1/2 தேக்கரண்டி உப்பு
- வறுக்க நெய் அல்லது எண்ணெய்
செய்முறை
1. கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி பிசைய வேண்டும். மாவை நன்கு மென்மையாக பிசைந்து 20 நிமிடங்கள் அப்படியே வைத்து விட வேண்டும்.
2. பனீரை சிறிய துகள்களாக அரைத்து ஸ்டஃபிங் தயார் செய்ய வேண்டும். இதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, வெங்காயம் மற்றும் மசாலா சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக கலந்து தனியாக வைத்து விட வேண்டும்.
3.மாவின் ஒரு சிறிய பகுதியை எடுத்து சப்பாத்தி போன்று உருட்டிக் கொள்ளவும். ஒரு ஸ்பூன் பனீரை மையத்தில் வைத்து, பனீர் உள்பக்கம் இருக்குமாறு மடித்து தட்டையாக்கி மீண்டும் உருட்டவும். உருட்டும் போது ப்ரோட்ட ஒட்டாமல் வர உலர்ந்த மாவை பயன்படுத்தலாம். இதே முறையில் அனைத்து பரோட்டாக்களையும் உருட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
4. இப்போது தவாவை சூடாக்கவும். பரோட்டாக்கள் ஒவ்வொன்றாக தவாவின் மீது போட்டு ஒரு பக்கத்தில் வேக விடவும். இதற்கிடையில், மேற்புறத்தில் நெய் அல்லது எண்ணெய் தடவ வேண்டும்.
5. பரத்தாவை திருப்பி விட்டு மறுபுறம் வேக வைக்க வேண்டும். பரோட்டாவை ஒரு மரக்கரண்டியால் மெதுவாக அழுத்தி விட வேண்டும். இப்போது இந்த பக்கத்திலும் லேசாக நெய் தடவி வேகவிட்டு, வெந்ததும் பரோட்டாவை எடுத்து விட வேண்டும்.
6. அவ்வளவுதான் சுவையான பரோட்டா தயார். இதை தயிர், சட்னி உடன் வைத்து சாப்பிடலாம்.
மேலும் படிக்க
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion