(Source: ECI/ABP News/ABP Majha)
Vegetable Stew: கேரளா ஸ்டைலில் வெஜிடபிள் ஸ்டூவ்.. இடியாப்பத்திற்கு சூப்பர் காம்போ - செய்முறை இதோ!
கேரளா ஸ்டைல் வெஜிடபிள் ஸ்டீவ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
நாம் பொதுவாகவே இட்லி, தோசை, சப்பாத்தியுடன் வைத்து சாப்பிட பல்வேறு வகையான சட்னி மற்றும் கிரேவிகளை செய்வோம். ஆனால் இடியாப்பத்திற்கு குருமா உள்ளிட்ட ஒர் சில குறிப்பிட்ட கிரேவிகளை தவிர நாம் மற்ற கிரேவிகளை செய்வதில்லை. இப்போது நாம் இடியாப்பத்துடன் வைத்து சப்பிட கேரளா ஸ்டைலில் சுவையான காய்கறி ஸ்டீவ் எப்படி செய்வது என்று தான் பார்க்க போகின்றோம். இந்த ரெசிபியை குறைவான பொருட்களை வைத்து, மிக குறைந்த நேரத்தில் மிக எளிமையாக சுவையாக செய்து விட முடியும். வாங்க இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்
கிராம்பு - 2
ஏலக்காய் -2
பட்டை - சிறிய துண்டு
வெங்காயம் -1
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
பீன்ஸ் -8
உருளைக்கிழங்கு -1
கேரட் -1
பச்சைப்பட்டாணி - 5 ஸ்பூன்
காலி ஃபிளவர் - கால் கப்
தேங்காய் பால்- இரண்டே முக்கால் கப்
உப்பு - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - 1 துண்டு
தேவையான பொருட்கள்
ஒரு நான் ஸ்டிக் பேனில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும், இரண்டு கிராம்பு சேர்க்கவும்.பட்டை சிறிய துண்டு, இரண்டு ஏலக்காய் சேர்க்கவும். இதை நில நொடிகள் வதக்கி விட்டு ஒரு நறுக்கிய வெங்கயம் சேர்த்துவ் வதக்கி விடவும். பின் ஒரு நறுக்கிய மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு, ஒரு நறுக்கிய கேரட், 8 நறுக்கிய பீன்ஸ், பச்சை பட்டாணி 5 டேபிள் ஸ்பூன், காலி ஃபிளவர் கால் கப், நீளவாக்கில் வெட்டிய இஞ்சி ஒரு துண்டு, 5 கீறிய பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்க்கவும். இதை ஒரு நிமிடம் நன்றாக வதக்கி விட்டு பின் ஒரு கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு, சிறிது கறிவேப்பிலை சேர்க்கவும். இதை மூடி விட்டு 5 நிமிடம் வேக வைக்கவும். பின் மூடியை திறந்து இரண்டரை கப் தேங்காய் பாலை சேர்த்து 8 நிமிடம் வேக விடவும். இப்போது மூடியை திறந்து இரண்டு ஸ்பூன் திக்கான தேங்காய் பால், ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சிறிது கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கிளறி விட்டு இறக்கவும். அவ்வளவு தான் சுவையான காய்கறி ஸ்டீவ் தயார். இது இடியாப்பத்துடன் வைத்து சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.
மேலும் படிக்க
Milk Cake: பால் கேக் செய்யுறது இவ்வளவு ஈசியா? நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க!
உடலுக்கு வலிமையையும், பொலிவையும் தரும் நாட்டு சர்க்கரை - எவ்வாறு உணவில் சேர்த்துக் கொள்வது?