மேலும் அறிய

Scorpio N Vs Harrier EMI Plan: ஸ்கார்பியோ N, ஹரியர் ரெண்டுல எத வாங்கலாம்னு யோசிக்குறீங்களா.? EMI பிளான தெரிஞ்சுட்டு முடிவெடுங்க

ஸ்கார்பியோ N, ஹரியர் கார்களில் எதை வாங்குவது என்று உங்களுக்கு குழப்பமாக இருந்தால், இரண்டிற்குமான நிதித் திட்டங்களை அறிந்து கொள்வது அவசியம். அவற்றின் EMI திட்டங்களை இப்போது பார்க்கலாம்.

டாடா ஹாரியர் மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ N ஆகியவை நாட்டில் பிரபலமான SUV-க்களாக கருதப்படுகின்றன. இந்த வாகனங்கள், சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலும் பிரபலமாக உள்ளன. மஹிந்திரா ஸ்கார்பியோ N பெட்ரோல் மற்றும் டீசல் பவர்டிரெய்ன்களுடன் கிடைக்கிறது. இந்த வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலை 13.49 லட்சம் ரூபாயில் தொடங்குகிறது.

டாடா ஹாரியரின் எக்ஸ்-ஷோரூம் விலை 12.89 லட்சம் ரூபாயில் தொடங்கி 25.25 லட்சம் வரை செல்கிறது. இந்த இரண்டு வாகனங்களையும் வாங்குவது குறித்து உங்களுக்கு சந்தேகம் இருந்தால், முழு கட்டணத்தையும் செலுத்துவதற்கு பதிலாக, லோனில் வாங்குவதை விரும்பினால், எந்த வாகனம் உங்களுக்கு மலிவான EMI-க்களை வழங்கும் என்பதை நீங்கள் அறிய விரும்புவீர்கள். இதோ விவரங்கள்..

டாடா ஹாரியர் நிதித் திட்டங்கள்

டாடா ஹாரியர் பெட்ரோல் மலிவான மாடலின் ஆன்-ரோடு விலை 16.05 லட்சம் ரூபாய். இந்த வாகனத்தை வாங்க 11.60 லட்சம் ரூபாய் கடன் பெறலாம். இந்தக் கடன் எக்ஸ்-ஷோரூம் விலையை அடிப்படையாகக் கொண்டது. எனவே, நீங்கள் 9 சதவீத வட்டி விகிதத்தில், நான்கு ஆண்டுகளுக்கு கடன் வாங்கினால், மாதத்திற்கு 28,869 ரூபாய் EMI செலுத்த வேண்டும். மேலும், நீங்கள் 9 சதவீத வட்டி விகிதத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு கடன் வாங்கினால், உங்கள் மாதாந்திர EMI தோராயமாக ₹24,081 ரூபாயாக இருக்கும்.

இந்த திட்டத்தில் கடன் பெறுவதற்கு, முன்பணமாக நீங்கள் 4,45,271 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த திட்டத்தில் நீங்கள் செலுத்தும் வட்டி  2,25,612 ரூபாய் வரும். மொத்தத்தில் லோனில் இந்த வாகனத்தை வாங்கும் போது, நீங்கள் 13,85,712 ரூபாய் திருப்பிச் செலுத்துவீர்கள்.

மஹிந்திரா ஸ்கார்பியோ N EMI திட்டம்

மறுபுறம், நீங்கள் மஹிந்திரா ஸ்கார்பியோ N-ன் Z2 பெட்ரோல் வகையை வாங்கினால், உங்களுக்கு 12,14,100 ரூபாய் கடன் கிடைக்கும். நீங்கள் 3,49,784 ரூபாய் முன்பணமாக செலுத்தினால், 9.8% வட்டி விகிதத்தில் நான்கு ஆண்டுகளுக்கு மாதத்திற்கு தோராயமாக ₹34,084 செலுத்த வேண்டும்.

நீங்கள் 4 லட்சம் ரூபாய் முன்பணம் செலுத்தி, 9.8% வட்டியில் 4 வருட கார் கடனை வாங்கினால், மாதத்திற்கு 32,815 ரூபாய் இஎம்ஐ செலுத்த வேண்டும். மேலும், 9.8% வட்டியில் 5 வருட கடனை வாங்கினால், மாதத்திற்கு 27,467 ரூபாய் இஎம்ஐ செலுத்த வேண்டும்.

இந்த வாகனத்தை நீங்கள் லோனில் வாங்கும்போது, லோன் தொகை 12,98,784 ரூபாயாக இருக்கும். இதற்கு 4 ஆண்டுகளில் நீங்கள் செலுத்தும் வட்டி 2,76,336 ரூபாயாகவும், வட்டியுடன் நீங்கள் திருப்பிச் செலுத்தும் மொத்த தொகை 15,75,120 ரூபாயாகவும் இருக்கும்.

இவை இரண்டில், முன்பணம், மாத இஎம்ஐ ஆகியவற்றுடன், கார்களின் அம்சங்களையும் ஒப்பிட்டு, உங்களுக்கு எந்த வாகனம் வாங்குவது சரியாகத் தோன்றுகிறதோ, அதை நீங்கள் தேர்வு செய்யலாம்.

 

 

தலைப்பு செய்திகள்

Mahindra BE 6 New Upgrades: 3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
டேங்கரை நிரப்பினால் 264 கி.மீட்டர் மைலேஜ்... ஹீரோ போல போக Hero Xoom 125 ஸ்கூட்டர்!
டேங்கரை நிரப்பினால் 264 கி.மீட்டர் மைலேஜ்... ஹீரோ போல போக Hero Xoom 125 ஸ்கூட்டர்!
Maruti Suzuki Victoris on EMI: நாட்டின் மிகவும் மலிவான ஹைப்ரிட் கார் விக்டோரிஸ் வாங்க ஆசையா.? அதுக்கு மாசம் EMI எவ்ளோ தெரியுமா.?
நாட்டின் மிகவும் மலிவான ஹைப்ரிட் கார் விக்டோரிஸ் வாங்க ஆசையா.? அதுக்கு மாசம் EMI எவ்ளோ தெரியுமா.?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
Mahindra BE 6 New Upgrades: 3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Embed widget