உடலுக்கு வலிமையையும், பொலிவையும் தரும் நாட்டு சர்க்கரை - எவ்வாறு உணவில் சேர்த்துக் கொள்வது?
நாட்டுச்சர்க்கரையில் கலோரிகள் குறைவாகவும், நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் உள்ளதால் உடல் எடை குறைப்பிற்கு உதவுகிறது.
உப்பும்,சர்க்கரையும் நமது இரண்டு கண்கள் என்று கூறும் அளவிற்கு, நாள் முழுவதிலும், இந்த இரண்டு பொருட்கள் அடங்கிய உணவுகளையே அதிகம் உண்கிறோம்.
நாட்டுச் சர்க்கரை:
அதிலும் காலையில் எழுந்தவுடன் காபி அல்லது டீ யில் ஆரம்பித்து, வீட்டில் நடக்கும் விசேஷங்கள், தெய்வங்களுக்கு படைப்பதற்கு இனிப்புகள் மற்றும் நண்பர்கள் அல்லது உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும்போது வாங்கிச் செல்லுவது என இனிப்பு நம்முடைய வாழ்வில் இரண்டற கலந்து விட்டது.
இதில் வெள்ளை சர்க்கரை காபி, டீ மற்றும் இனிப்புகள் செய்ய பயன்படுத்தப்படுகிறது. இதில் கலோரிகள் அதிகம். மறுபுறம் வெள்ளை நிறத்தை கொண்டு வருவதற்கு ஏகப்பட்ட படிநிலைகளை தாண்டி வருகிறது. ஆகவே வெள்ளை சர்க்கரையில் செயற்கையான வேதிப்பொருட்கள் நிறைய இருப்பதாக சொல்லப்படுகிறது. அதேநேரம் ஒரு பொருளை அளவுக்கு அதிகமாக பிராசசிங் செய்யும்போது, அதில் இருக்கும் உயிர் சத்துக்கள், நீங்கி விடுகின்றன. உதாரணத்திற்கு காய்கறி மற்றும் கீரைகளை அளவுக்கு அதிகமாக வேக வைக்க கூடாது. இதைப் போலவே வெள்ளை சர்க்கரையும் நிறைய படிநிலைகளை கடந்து வருவதால் அதில் இருக்கும் உயிர்ச்சத்துக்கள் நீங்கி விடுகிறது. ஆகையால் தற்சமயம் மக்கள் நாட்டுச் சர்க்கரை அல்லது பிரவுன் சுகர் எனப்படும் இனிப்பை பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள்.
உடல் எடை குறைப்பு:
இந்த நாட்டுச் சர்க்கரையை விவசாய பண்ணைகளிலேயே காய்ச்சி எடுக்கிறார்கள். வெள்ளைக்கரும்பை நன்றாக காய்ச்சி,பாகுபதத்தில் வந்தவுடன்,அது கட்டியாகாமல், உதிரியாக, எந்த விதமான வேதிப்பொருட்களும் சேர்க்காமல், செய்யப்படுவதே இதன் தனித்தன்மையாகும்.
இப்படி இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் நாட்டுச்சர்க்கரையில் கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், தாமிரம், பாஸ்பரஸ்,வைட்டமின் பி6, நியாசின்,பாந்தோத்தேனிக் அமிலம் மற்றும் பிற தாதுக்கள் போன்ற நுண்ணூட்டச்சத்துக்கள் இருக்கிறது.இதில் கலோரிகள் குறைவாகவும், பலவிதமான தாதுக்களும் உள்ளதால் உடல் எடை குறைப்பிற்கு உதவுகிறது.
நாட்டு சர்க்கரையை பயன்படுத்துவதால், உடலின் ஆற்றல் அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியையும் வலுவூட்டுகிறது. புற்றுநோய் பாதிப்புகள் மற்றும் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. நாட்டுச் சர்க்கரையை நாம் உண்ணும் உணவுகளில் அதிகம் பயன்படுத்துவதால் ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீக்கி ரத்தம் சுத்தமாகிறது.நாட்டுச் சர்க்கரையில் வாதம் மற்றும் செரிமான நோய்களைக் குணப்படுத்தும் தன்மை உள்ளது.
உடல் எடை குறைப்பிற்கு பயன்படும் நாட்டுச் சர்க்கரை:
நாட்டு சர்க்கரையில் கலோரிகள் குறைவாக உள்ளதால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு சர்க்கரைக்கு பதிலான சிறந்த மாற்றாக இது இருக்கிறது. மேலும் உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு சிறப்பான உணவுப் பொருளாக நாட்டுச் சர்க்கரை இருக்கிறது.
சருமத்தை பளபளப்பாக மாற்றுச் சர்க்கரை:
வைட்டமின் பி -6, நியாசின், பாந்தோத்தேனிக் அமிலம்,இதர தாது உப்புக்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் நாட்டுச் சர்க்கரையில் உள்ளது. இது சருமத்தை பளபளப்பாக்கவும் சரும பாதுகாப்பிற்கும் உதவி செய்கிறது.
தசை பிடிப்பை சரி செய்யும் நாட்டுச் சர்க்கரை:
நாட்டு சர்க்கரையில் பொட்டாசியம் நிறைந்து காணப்படுவதால் தசை பிடிப்பிற்கு சிறப்பான பலனை தருகிறது சிலருக்கு திடீரென்று கைகள் கால் அல்லது இடுப்பு பகுதிகளில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு விடும் பொட்டாசியம் குறைவாக இருப்பதே இந்த தசை பிடிப்பிற்கு முக்கிய காரணமாகும். நாட்டுச் சர்க்கரை தொடர்ச்சியாக பயன்படுத்துவதால் இந்த பொட்டாசியம் குறைபாட்டை சரி செய்து தசை பிடிப்புகளில் இருந்து நிவாரணம் பெற முடியும்.
செரிமான பிரச்சனைகள்,மாதவிடாய் பிரச்சனைகள் மற்றும் ஆஸ்துமா சம்பந்தப்பட்ட மூச்சு பிரச்சினைகள் என,உடல் சார்ந்த நிறைய நோய்களுக்கு, நாட்டுச் சர்க்கரை சிறந்த மருந்தாக,நம் சித்த வைத்தியத்தில் தொன்று தொட்டு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
சிறப்பான பயன்களை நாட்டு சக்கரை கொண்டுள்ளதால் மெல்ல மெல்ல நாட்டுச் சர்க்கரையை நம் உணவு சங்கிலியில் கொண்டு வருவோம்.