மேலும் அறிய
Advertisement
Kerala Style Mutton Curry: அசைவ பிரியர்களே! கேரளா ஸ்டைல் மட்டன் கறி எப்படி செய்வது?
சுவையான கேரளா ஸ்டைல் மட்டன் கறி எப்படி செய்வதென்று கீழே விரிவாக பார்க்கலாம்.
கேரளா உணவு என்றாலே ஸ்பெஷல் தான். தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் கொண்டு சமைக்கப்படும் கேரள உணவுகள் ஒரு நல்ல சுவையுடன் இருக்கும். இந்த ரெசிபியை குறைந்த நேரத்தில் சமைத்து விட முடியும். மட்டன் அசைவ பிரியர்களுக்கு அதிகம் பிடிக்கும்.
இப்போது சுவையான கேரளா ஸ்டைல் மட்டன் கறி எப்படி செய்வது? என்று தான் பார்க்க போகின்றோம். இந்த கறி தேங்காய் எண்ணெயில் சமைக்கப்படுவதுடன் இதில் தேங்காயும் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் மற்றும் மசாலாக்கள் சேர்ந்த இந்த மட்டன் கறியின் சுவை மிகவும் நன்றாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
- ஆட்டிறைச்சிக்கு:
- 350 கிராம் ஆட்டிறைச்சி
- 1 டீஸ்பூன் இஞ்சி, நறுக்கியது
- 1 தேக்கரண்டி பூண்டு, நறுக்கியது
- 1/2 தேக்கரண்டி மஞள் தூள்
- 1 பச்சை மிளகாய், நறுக்கியது
- 1/4 கப் வெங்காயம்
- 8-10 கறிவேப்பிலை
- தண்ணீர், தேவைக்கேற்ப
- உப்பு, சுவைக்கேற்ப
- கறிக்கு
- 2-3 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்
- ¾ கப் நறுக்கிய வெங்காயம்
- 1 டீஸ்பூன் துருவிய இஞ்சி
- 3-4 பூண்டு பற்கள், நறுக்கியது
- 8-10 கறிவேப்பிலை
- ¼ கப் தக்காளி
- 1 டீஸ்பூன் புதிய தேங்காய், வெட்டப்பட்டது.
செய்முறை
1. முதலில் நாம் ஆட்டிறைச்சியை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர், மஞ்சள் தூள், கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து பிரஷர் குக்கரில் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். இதை 15-20 நிமிடங்கள் அல்லது விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். .
2.இப்போது ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை மிதமான தீயில் சூடாக்க வேண்டும். சூடானதும், கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடங்கள் வதக்கி, பின்னர் இஞ்சி மற்றும் பூண்டு சேர்க்க வேண்டும்.
3. அடுத்து, சமைத்த ஆட்டிறைச்சியுடன் தேங்காய், தக்காளி மற்றும் சிவப்பு மிளகாய் தூள் சேர்க்கவும். அதனுடன் தண்ணீரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
4.தீயைக் குறைத்து, ஒரு மூடியால் மூடி, 20-25 நிமிடங்கள் மிதமான அல்லது லேசாசன தீயில் வேக வைக்க வேண்டும். இதை அவ்வப்போது கிளறி விட வேண்டும்
5.அவ்வளவுதான் கேரளா ஸ்டைல் மட்டன் கறி சுவைக்க தயாராகி விட்டது. இதை சூடாக பரிமாறலாம்.
மேலும் படிக்க
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
திரை விமர்சனம்
அரசியல்
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion