மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: இதுவரை உங்களை சுற்றி நடந்த மிக முக்கிய நிகழ்வுகள்..காலை 7 மணி தலைப்புச் செய்திகளாக இதோ..!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சலுக்கான அறிகுறி - மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தல்
- அரசுப்பேருந்தில் தொங்கிய படி சென்ற மாணவர்களை அடித்து கீழே இறக்கிய நடிகை ரஞ்சனா நாச்சியார் கைது - 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
- தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
- நெருங்கும் தீபாவளி பண்டிகை - புத்தாடைகள் வாங்க கடைவீதிகளில் மக்கள் குவிந்ததால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல்
- சேலத்தில் நடைபெறும் திமுக இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு - 23 குழுக்கள் அமைப்பு
- தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்த புதுமணத் தம்பதியினர் வெட்டிக்கொலை - பெண்ணின் தந்தை உட்பட 4 பேர் கைது
- இனிப்பு பலகாரங்களில் செயற்கை நிறமூட்டிகள் சேர்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
- பிரதமர் குறித்து அவதூறாக பேசியதாக காஞ்சிபுரம் எம்.எல்.ஏ., எழிலரசன் வீட்டை முற்றுகையிட முயன்ற பாஜகவினர் கைது
- சிப்காட் தொழில் பூங்கா அமைக்க விளைநிலம் கையகப்படுத்தப்படாது என தமிழ்நாடு அரசு கொள்கை அறிவிப்பாக வெளியிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
- திமுக ஆட்சியில் தமிழ்நாடு சாதிய கொடுமைகள் அரங்கேறும் வன்முறை கூடாரம் ஆகிவிட்டது என நா.த.க., ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசம்
- தமிழ்நாட்டின் கல்வி முறையில் அரசியல் தலையீடு அதிகம் இருப்பதாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் குற்றச்சாட்டு
- தமிழ்நாட்டின் மருத்துவ மாணவர் மதன் மர்ம மரணம் - உரிய விசாரணை நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சருக்கு கடிதம்
- தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
இந்தியா:
- நவம்பர் 19 ஆம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் சீக்கியர்கள் பயணிக்க வேண்டாம் எனவும், உயிருக்கு ஆபத்து எனவும் காலிஸ்தான் அமைப்பின் தலைவர் பன்னுன் எச்சரிக்கை
- நேபாளத்தில் நவம்பர் 3 ஆம் தேதி இரவு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - 128 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததால் சோகம்
- சபரிமலை கோயில் நடை வரும் நவம்பர் 17 ஆம் தேதி திறப்பு - பக்தர்களின் வாகனங்களுக்கு பாஸ்டேக் மூலம் கட்டணம் வசூலிக்க முடிவு
- கொச்சியில் கடற்படை ஹெலிகாப்டர் பயிற்சியின் போது விபத்து - ஒருவர் உயிரிழப்பு
- திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசிக்கு சொர்க்க வாசல் வழியாக தரிசனம் - ரூ.300க்கான டிக்கெட்டுகள் நவம்பர் 10 ஆம் தேதி முதல் விநியோகம்
- முகேஷ் அம்பானிக்கு இமெயில் மூலம் தொடர் கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது
- சத்தீஸ்கரில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி
உலகம்:
- இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து அழிக்கும் என அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஹேலண்ட் சபதம்
- ஹமாஸ் பிடியில் 241 பணய கைதிகள் இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
- ஈரானில் போதைப் பொருள் மையத்தில் தீ விபத்து 32 பேர் பலியான பரிதாபம்
- அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் பரபரப்பு
விளையாட்டு:
- உலகக்கோப்பை போட்டியில் கொல்கத்தாவில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதல்
- உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் மழை குறுக்கீடு - டக் வொர்த் லூவிஸ் விதி அடிப்படையில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதாக அறிவிப்பு
- உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா அணியிடம் 33 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி தோல்வி - முதல் அணியாக உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
சென்னை
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion