News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

Suja Varunee Swag | சுஜா வருணி கொடுத்த ஆந்திரா சிக்கன் பச்சடி.. இதோ ரெசிபி டிப்ஸ் உங்களுக்காக!

யூடியூப் சேனலில் பிஸியாக இருப்பதோடு, சமையல் வீடியோவையும் அவ்வப்போது வெளியிடுவார் சுஜா. தற்போது பிக்பாஸ் அல்டிமேட்டிலும் ஒரு போட்டியாளராகப் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US: 
Share:

சிக்கன், மிளகாய் தூள், உப்பு சேர்த்து மிகவும் எளிமையான முறையில் ஆந்திரா சிக்கன் பச்சடி ரெசியை வெறும் 30 நிமிடங்களில் செய்து ருசிக்கலாம்.

ஆந்திரா சமையல் என்றாலே காரத்திற்கும், சுவைக்கும் பஞ்சமே இருக்காது. இந்த காரத்திற்கே பலர் அடிமையாக இருப்பார்கள். அப்படி ஒரு டிஷ்தான் இன்றைக்கு நாம் பார்க்க விருக்கிறோம். அதுவும் பிக்பாஸ் புகழ் சுஜா வருண் செய்த ஆந்திரா சிக்கன் பச்சடி தான். தயிர் பச்சடி, வெங்காய பச்சடி என்று தான் நமக்கு தெரிந்திருக்கும். இது என்ன சிக்கன் பச்சடி என்ற கேள்வி மக்கள் மனதில் அதிகளவில் எழுகிறதா? அந்த சந்தேகத்தை இந்த ரெசிபி டிப்ஸ் மூலம் இங்கே அறிந்துக்கொள்வோம். அதுவும் பிக் பாஸ் புகழ் சுஜா எப்படி ஆந்திரா சிக்கன் பச்சடியை எப்படி செய்வது என தனது யூடியூப் சேனல் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.

ஆந்திரா சிக்கன் பச்சடி செய்யும் முறை:

தேவையான பொருட்கள்:

சிக்கன்

எண்ணெய்

மஞ்சள் தூள்

மிளகாய் தூள்

மிளகு தூள்

இஞ்சி பூண்டு விழுது

எலுமிச்சை சாறு

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

சிக்கன் பச்சடி செய்வதற்கு முதலில் சிக்கனை சுத்தம் செய்துக்கொள்ள வேண்டும். பின்னர் சிக்கனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஊற வைக்க வேண்டும்.

இதனையடுத்து அடுப்பில் வைத்துள்ள தவா சூடானதும், அதில் ஏற்கனவே ஊறவைத்துள்ள சிக்கனை சேர்த்து வறுக்க வேண்டும். சிக்கனில் இருக்கும் தண்ணீர் வடியும் வரை மிதமான சூட்டில் வறுத்தெடுக்க வேண்டும்.

பின்னர் தவாயில் எண்ணெய் ஊற்றி, வறுத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து பொரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதனையடுத்து தவாயில் மீதமுள்ள எண்ணெய்யில் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும். இதனுடன் ஏற்கனவே பொரித்து வைத்துள்ள சிக்கன், மிளகு தூள் சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும். எண்ணெய் தனியாக பிரிந்து வந்தவுடன், சிக்கனில் வெறும் மிளகாய் தூள் சேர்த்து கொதிக்க வேண்டும்.

தவாயில் சிக்கன் நன்றாக கொதித்த பின்பாக அதனை ஆற வைக்க வேண்டும். இதனுடன் சிக்கன் பச்சடிக்கு அதிகளவில் ருசியை சேர்ப்பதற்காக எலுமிச்சை சாறை அதனுடன் ஊற்ற வேண்டும். இப்போது சுவையான சிக்கன் பச்சடி ரெடியாகிவிட்டது.

இதனை ஒரு வாரத்திற்கு கூட வைத்து சாப்பிடலாம் எனக்கூறப்படுகிறது.  எனவே இந்த சிம்பிள் ஆந்திர சிக்கள் பச்சடி ரெசிபியை நீங்களும் வீட்டில் டிரை பண்ணிப்பார்க்க மறந்துவிடாதீர்கள்!

பிக்பாஸ் முதல் சீசனில் சுஜா வருணி வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே சென்றவர் தான் சுஜா. சீசனில் முதல் வாரத்திலே ரசிகர்களின் கவனத்தைப்பெற்றது மட்டுமில்லாமல், அனைத்து டாஸ்கிலும் மற்ற போட்டியாளர்களுடன் சண்டைப்போட்டு கெத்துக்காட்டினார். இதனையடுத்து காதலனை கரம்பிடித்த இவர் , திருமணத்திற்கு பிறகு எதிலும் பங்கேற்காமல் இருந்துவந்தார். இருந்தப்போதும் தன்னுடைய யூடியூப் சேனலில் பிஸியாக இருப்பதோடு, சிக்கன் வீடியோவையும் அவ்வப்போது வெளியிடுவார். தற்போது பிக்பாஸ் அல்டிமேட்டிலும் ஒரு போட்டியாளராகப் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published at : 09 Feb 2022 10:00 PM (IST) Tags: andra chicken pachadi chicken pachadi receipe big boss suja

தொடர்புடைய செய்திகள்

அச்சச்சோ! செட்டிநாடு சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்! மதுரையில் சோகம்

அச்சச்சோ! செட்டிநாடு சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்! மதுரையில் சோகம்

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

டாப் நியூஸ்

Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!

Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!

PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!

PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!

Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?

Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?

Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?

Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?