மேலும் அறிய
Food Items: இந்த உணவுகள் ஒருபோதும் கெட்டுப்போகாது.. எப்படி தெரியுமா?
உலகில் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு பொருட்களும் ஒருநாள் காலாவதியாகி விடும் என்பது எழுதப்படாத நியதியாகும். அதேசமயம் காலாவதி ஆகாமல் நம்மால் சில உணவுப்பொருட்களை பதப்படுத்தி வைக்க முடியும் என சொல்லப்படுகிறது.

உணவுப் பொருட்கள்
Source : X
அன்றாட வாழ்க்கையில் நாம் பலவிதமான உணவுப் பொருட்களை பயன்படுத்தி வருகிறோம். ஒவ்வொரு உணவுப் பொருட்களுக்கும் உற்பத்தி தேதி, காலாவதி தேதி, எங்கு தயாரிக்கப்பட்டது என்பது கண்டிப்பாக அதன் பேக்கிங்கில் இடம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் இந்த உலகில் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு பொருட்களும் ஒருநாள் காலாவதியாகி விடும் என்பது எழுதப்படாத நியதியாகும். அதேசமயம் காலாவதி ஆகாமல் நம்மால் சில உணவுப்பொருட்களை பதப்படுத்தி வைக்க முடியும் என சொல்லப்படுகிறது. அதனைப் பற்றிக் காணலாம்.
- தேன் - இது திரவ தங்கம் என்று அழைக்கப்படுகிறது. இதில் மிகக் குறைந்த அளவு நீர்ச்சத்து உள்ளது. அதனால் இதில் எந்த பாக்டீரியாவும் வளர முடியாது. நீண்ட காலம் புளிக்காமல் இருக்கும். தேன் முற்றிலும் தூய்மையாவும், எந்த கலப்படமும் இல்லாமலும் இருந்தால் அது பல ஆண்டுகளாக அப்படியே இருக்கும். பண்டைய எகிப்திய கல்லறைகளிலும் விஞ்ஞானிகள் உண்ணக்கூடிய தேனைக் கண்டறிந்துள்ளனர் என்பது முக்கியமான விஷயமாகும்.
- உப்பு - சமையலறையில் தவிர்க்க முடியாத ஒன்றான உப்பு ஒரு இயற்கையான பாதுகாப்புப் பொருளாகும். எனவே, அது ஒருபோதும் கெட்டுப்போவதில்லை. அயோடின் அல்லது கேக்கிங் எதிர்ப்புப் பொருட்கள் போன்ற சேர்க்கைகள் உப்பில் சேர்க்கப்படாவிட்டால், அது எப்போதும் பாதுகாப்பானதாக இருக்கும். கடலில் இருந்து எடுக்கப்படும் தூய உப்பு அதன் அசல் சுவையை பல ஆண்டுகளாகத் தக்க வைத்துக் கொள்ளும்.
- சர்க்கரை - இனிப்பு உணவுப் பொருட்களில் முதன்மையானதான சர்க்கரையும் உப்பைப் போல கெட்டுப்போவதில்லை. ஈரப்பதம் இல்லாத பட்சத்தில் டப்பாவில் அடைக்கப்பட்ட சர்க்கரை காலப்போக்கில் கெட்டியாகிவிடும். ஆனால் சூடாக்குவதன் மூலம் அதை மீண்டும் பயன்படுத்தலாம். எனினும் சர்க்கரையை ஈரப்பதம் மற்றும் பூச்சிகள் வராமல் பாதுகாக்க வேண்டும்.
- அரிசி - காற்று புகாத கொள்கலனில் வெள்ளை அரிசியை குளிர்ந்த, உலர்ந்த இடத்தில் சேமித்து வைத்தால், அது 25 முதல் 30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பாதுகாப்பாக இருக்குமாம். ஏனெனில் அரிசியில் எண்ணெய் வித்துக்கள் இல்லை. எனவே அது விரைவாக கெட்டுப்போவதில்லை என சொல்லப்படுகிறது.
- சோள மாவு - ஈரப்பதம் இல்லாத காற்று புகாத கொள்கலனில் வைத்திருந்தால் சோள மாவும் கெட்டுப்போகாது.
- வினிகர் - அதேபோல வெள்ளை வினிகர் மிகவும் வலுவான அமிலம் என்பதால் அதன் சுவை மற்றும் தரம் பல ஆண்டுகளாக அப்படியே இருக்கும். ஈரப்பதம் இல்லாத உலர்ந்த பீன்ஸ் பல வருடங்கள் கழித்தும் சாப்பிட முடியும் என சொல்லப்படுகிறது.
- காபி தூள் - இன்ஸ்டன்ட் காபி தூள் தயாரிக்கப்படும்போது, அதிலிருந்து அனைத்து தண்ணீரும் அகற்றப்படும். சரியாக பேக் செய்யப்பட்டால், காலாவதி தேதிக்குப் பிறகும் அதை நாம் பயன்படுத்தலாம்.
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















