முட்டை நம் அன்றாட வாழ்வில் சேர்க்கக்கூடிய மிக முக்கியமான உணவுப் பொருளாகும். இதில் உயர்தர புரதம் அடங்கியுள்ளது.
Image Source: Pixabay
தினமும் நாம் முட்டை சேர்ப்பதால் உடல் வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி, சரும ஆரோக்கியம் போன்ற பல நன்மைகள் கிடைக்கிறது.
Image Source: Pixabay
இந்த முட்டைகளை உள்ளூர் தொடங்கி உலக நாடுகள் வரை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் பெருகிவிட்டனர். அதில் எக்கோஸ் (eggoz) நிறுவனம் குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்
இந்த நிறுவனத்தில் உருவாகும் முட்டைகளில் நைட்ரோஃபுரான் சேர்மங்கள் இருப்பதாகவும், தடைசெய்யப்பட்ட வகை ஜெனோடாக்ஸிக் ரசாயனங்கள் கண்டறியப்பட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
Image Source: Pixabay
இந்த வேதியியல் பொருட்கள் பல நாடுகளில் நீண்ட காலமாக தடைசெய்யப்பட்டுள்ளது. இது உடல்நலத்தில் மிகுந்த தீங்கை ஏற்படுத்தக்கூடியது.
Image Source: Pixabay
ஆனால் தங்களுடைய முட்டைகள் பாதுகாப்பானவை என்று எக்கோஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. எனினும் இந்த சர்ச்சை இந்திய மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Image Source: Pixabay
நைட்ரோஃபுரான் சேர்மங்கள் பாக்டீரியாக்களை கொல்லும் என்றாலும் அதனை குறிப்பிட அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது உணவு பாதுகாப்பு விதியில் உள்ளது. இதனை எக்கோஸ் நிறுவனம் மீறியுள்ளது.
Image Source: Pixabay
அந்நிறுவனம் கோழி வளர்ப்பில் இந்த ரசாயனங்களை பயன்படுத்தியதாக மருத்துவரும் சுகாதாரக் கல்வியாளருமான டாக்டர் வோரா சமூக ஊடகங்களில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
எனினும் இந்தியாவில் இந்த நிறுவன (eggoz) முட்டைகள் தர நிர்ணய சட்டங்களை மீறவில்லை என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.