Moong Dal Fry: மொறு மொறு பாசி பருப்பு ஸ்நாக்ஸ்! இப்படி செய்து அசத்துங்க!
மொறு மொறு மூங் தால் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
உடைத்த பாசி பருப்பு - 2 கப்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு -தேவையான அளவு
மிளகாய் தூள் தேவையான அளவு
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
செய்முறை
உங்களுக்கு தேவையான அளவு அல்லது இரண்டு கப் பாசி பருப்பு எடுத்து அதை தண்ணீரில் மூன்று முறை நன்றாக கழுவி விட்டு ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பின் இதிலுள்ள தண்ணீரை வடித்து விட்டு, ஃபேனுக்கு அடியில் ஒரு காட்டன் துணியை போட்டு அதன் மீது வடிகட்டி வைத்துள்ள பாசி பருப்பை பரப்பி விட வேண்டும். பருப்பில் உள்ள ஈரம் நன்றாக உலர வேண்டும். கையில் தொட்டு பார்த்தால் கையில் கொஞ்சம் கூட ஈரம் ஒட்டாமல் இருக்க வேண்டும். அந்த அளவுக்கு பாசி பருப்பு உலர வேண்டும்.
பின் கடாயில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து, எண்ணெய் சூடானதும் சற்று பெரிய அளவிலான் ஸ்டீல் வடிகட்டியை சேர்த்து வடிகட்டியுடன் கடாயில் சூடாக இருக்கும் எண்ணெயில் விட்டு, கரண்டியால் கலந்து விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இதை டைரக்டாக எண்ணெயில் போட்டு வறுத்தெடுத்தால் சீக்கிரம் கருகி போக வாய்ப்புள்ளது.
அதனால் தான் ஸ்டீல் வடிகட்டியை பயன்படுத்தி பொரித்து எடுக்கின்றோம். பருப்பு பொன்னிறமாக பொரிந்ததும். ஒரு தட்டில் ஒரு டிஷ்யூ பேப்பர் போட்டு அதில் பொரித்து எடுத்த பாசி பருப்பை சேர்க்கவும். பருப்பை ஒரே வழியாக சேர்த்து பொரித்து எடுத்தால் சரியாக பொரிந்து வராது எனவே ஒரு ஒரு கைப்பிடி அளவை ஸ்டீல் வடிகட்டியில் சேர்த்து பொரித்து எடுக்க வேண்டும். அதிகமாக கருக விட்டு விட கூடாது. மொத்த பருப்பையும் பொரித்து எடுத்ததும், இதில் தேவையான அளவு மிளகாய் தூள், உப்பு , ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து விட வேண்டும். அவ்வளவு தான் சுவையான் மொறு மொறு மூங் தால் தயார்.
மேலும் படிக்க