Crab Omlette :புரோட்டீன் நிறைந்த நண்டு ஆம்லேட்.... இப்படி செய்தால் சுவை சூப்பரா இருக்கும்...
சுவையான நண்டு ஆம்லேட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சுத்தம் செய்த நண்டு- 3, பெரிய வெங்காயம்- ஒன்று (நறுக்கியது), தட்டிய சின்ன வெங்காயம்- 4, இஞ்சி, பூண்டு விழுது- ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள்- ஒரு டீஸ்பூன், சீரகத்தூள், மல்லித்தூள்- தலா ஒன்றரை டீஸ்பூன், சோம்புத்தூள், மஞ்சள் தூள்- தலா கால் டீஸ்பூன், கொத்தமல்லித்தழை- சிறிதளவு, உப்பு- தேவையான அளவு.
ஆம்லெட் செய்ய தேவையான பொருட்கள்
முட்டை-2, தேங்காய் எண்ணெய்- 2 டீஸ்பூன், உப்பு- தேவையான அளவு.
செய்முறை
சுத்தம் செய்த நண்டு, பெரிய வெங்காயம், தட்டிய சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, மிளகுத்தூள், சீரகத்தூள், மல்லித்தூள், சோம்புத்தூள், மஞ்சள் தூள், கொத்தமல்லித்தழை, உப்பு ஆகியவற்றை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும்.
இந்த கலவை ஆறியபின், நண்டு துண்டுகளின் சதை பகுதியை பிரித்தெடுக்கவும். பின்னர் நண்டு வேகவைத்த தண்ணீரை கிரேவி பதம் வரும்வரை வேக வைக்க வேண்டும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும், தேங்காய் எண்ணெய் விட்டு நண்டு, ஆம்லெட் கலவையை உற்றி இருபுறமும் புரட்டிபோட்டு வேகவைக்கவும். இதே முறையில் மற்ற ஆம்லேட்டுகளையும் செய்து கொள்ளலாம். அவ்வளவுதான் சுவையான நண்டு ஆம்லேட் தயார். இதை எடுத்து சூடாக பரிமாறலாம்.
நண்டின் நன்மைகள்
நண்டில் புரோட்டீன் சத்து நிறைந்துள்ளது. நண்டை குழந்தைகள் சாப்பிட்டால் அவர்களின் வளர்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. உரோமம், நகம், சருமம் போன்றவையும் ஆரோக்கியத்துடன் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
முகத்தில் பருக்கள் இருந்தால் நண்டினை சாப்பிடலாம். நண்டில் இருக்கும் ஜிங்க், எண்ணெய் சுரப்பினை கட்டுப்படுத்தும் என சொல்லப்படுகிறது.
நமது உடலில் உள்ள நரம்பு மற்றும் தசையின் இயக்கத்துக்கு மக்னீசியம் முக்கியம் ஆகும். இந்த மக்னீசியம் நண்டில் அதிகளவு உள்ளது.
நண்டுகளில் இருக்கும் ஒமேகா 3 பெக்டி ஆசிட் காரணமாக, இரத்தத்தில் இருக்கும் கொழுப்புகளின் அளவு குறைக்கப்பட வாய்ப்புதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க
Broccoli Soup : பலகாரங்கள் சாப்பிட்டு வயிறு உப்புசமா? ப்ரொக்கோலி சூப் சாப்பிடுங்க.. இதோ ரெசிப்பி..
Paneer Peas: நாண், சப்பாத்திக்கு பெஸ்ட் காம்போ! பனீர் பட்டாணி கிரேவி செய்முறை இதோ!
Cashew Chutney: முந்திரி சட்னி கேள்விப்பட்டிருக்கீங்களா? இதை தெரிஞ்சுகோங்க மக்களே..