மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
Paneer Peas: நாண், சப்பாத்திக்கு பெஸ்ட் காம்போ! பனீர் பட்டாணி கிரேவி செய்முறை இதோ!
சுவையான பனீர் பட்டாணி கிரேவி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
சப்பாத்தி, நாண் போன்றவற்றுடன் வைத்து சாப்பிட விதவிதமான கிரேவியை முயற்சிக்க நம்மில் பலரும் விரும்புவர். இப்போது நாம் பனீர் பட்டாணி கிரேவி எப்படி செய்வதென்று பார்க்க போகின்றோம்.
தேவையான பொருள்கள்
பச்சை பட்டாணி – 1 கப்
பன்னீர் – 100 கிராம்
வெங்காயம் – 2
பூண்டு – 6 பல்
இஞ்சி – சிறிய துண்டு
பச்சை மிளகாய் – 1
மல்லி தூள் – 2 ஸ்பூன்
கிராம்பு – 2
சீரகம் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
கரம் மசாலா – 2 ஸ்பூன்
தக்காளி – 4
கொத்தமல்லி – சிறிது
எண்ணெய் -4 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
பன்னீரை துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
தக்காளி வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், நறுக்கிய பன்னீரை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதே கடாயில் கிராம்பு, சீரகம் சேர்த்து தாளித்து, இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிய பின்னர் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
அடுத்து அதில் மல்லி தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்து, அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் கிளறி விட வேண்டும்.
அனைத்தும் நன்கு வதங்கியதும், அதில் பச்சை பட்டாணியை சேர்த்து, தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
பட்டாணியானது நன்கு வெந்ததும், அதில் பன்னீரை சேர்த்து கிளறி, 5 நிமிடம் மூடி வைத்து இறக்கும் போது கொத்தமல்லி சேர்த்து இறக்கவும். சுவையான பட்டாணி பன்னீர் கிரேவி ரெடி.
மேலும் படிக்க
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
கிரிக்கெட்
வணிகம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion