Broccoli Soup : பலகாரங்கள் சாப்பிட்டு வயிறு உப்புசமா? ப்ரொக்கோலி சூப் சாப்பிடுங்க.. இதோ ரெசிப்பி..
சுவையான ப்ரக்கொலி சூப் எப்படி தயாரிப்பது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
செய்முறை
முதலில் வெங்காயம் மற்றும் மல்லித் தழையை மிக பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.
அடுத்து ப்ரோக்கோலியின் தண்டு பகுதியை நீக்கிவிட்டு,சிறு துண்டுகளாக நறுக்கி அதை சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு கிண்ணத்தில் சோள மாவு மற்றும் தண்ணீர் சேர்த்து கரைத்துக்கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது வெண்ணெய் சேர்த்து உருகியதும் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு, அதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து மீண்டும் வதக்கி விட வேண்டும்.
இப்போது கடாயில் 4 கப் தண்ணீர் சேர்க்க வேண்டும். பின் அதனுடன் சோள மாவு கரைசலை சேர்த்து கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
நறுக்கி வைத்துள்ள ப்ரக்கோலியை இதில் சேர்த்து வேகவைக்க வேண்டும்.
ப்ரக்கோலி வெந்ததும்,அதனை தண்ணீர் இல்லாமல் எடுத்து, ஆற வைத்து, மிக்ஸி ஜாரில் சேர்த்து 1 சுற்று சுற்றி, அதனை மீண்டும் கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கொதித்து கொஞ்சம் கெட்டியானவுடன் கையளவு துருவிய சீஸ், மிளகுத்தூள் சேர்த்து ஒரு கப்பில் ஊற்றி அதன் மேல் மல்லித்தழையை தூவினால் சுவையான ப்ரோக்கோலி சூப் தயார்.
ப்ரக்கோலியின் நன்மைகள்
முதுமையை நெருங்கும் பெரும்பாலானவர்களுக்கு கண்களில் இருக்கும் மேகுலார் திசுக்களின் வளர்ச்சி குறைகிறது. ப்ரோக்கோலியை அடிக்கடி சமைத்து சாப்பிடுபவர்களுக்கு ப்ரோக்கோலியில் இருக்கும் சல்போரபேன் சத்துக்கள் கண்களில் அழுத்தம் ஏற்படுவதை தடுக்கும் என கூறப்படுகிறது. மேலும் எதிர்காலங்களில்எதிர்காலத்தில், கண் பார்வை மங்குதல், கண் புரை போன்ற நோய்கள் ஏற்படாமல் கண்களை பாதுகாக்கவும் ப்ரக்கோலி உதவும் என கூறப்படுகிறது.
இளமை தோற்றத்தோடு இருக்கவேண்டும் என்பது பலருக்கும் இருக்கும் ஆசை. ப்ரோக்கோலியில் அதிகம் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. ப்ரோக்கோலியை வாரத்தில் குறைந்தது இரண்டு முறையாவது சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் ஏற்படும் ஃப்ரீ ராடிக்கல்கள் செல்களின் அழிவினை தடுத்து, உடலுக்கு புத்துணர்ச்சி தந்து தோல் சுருக்கங்கள் ஏற்படுவதை தாமதப்படுத்தி தோல் இளமையாக இருக்க உதவும் என சொல்லப்படுகிறது.
மேலும் படிக்க
Tomato Kurma: தக்காளி குருமா ஸ்பெஷலா செய்யணுமா? சுவை அசத்தலா இருக்கும்.. இதுதான் ரெசிப்பி..
Munthiri Kothu: புரோட்டீன் நிறைந்த முந்திரி ஸ்நாக் ரெசிபி! முந்திரி கொத்து செய்வது இப்படித்தான்!