சுவையான சீஸி பனீர் சிகார் ரோல் : பசியை போக்கும் ஒரு நிறைவான சிற்றுண்டி...
சுவையான சீஸி பனீர் சிகார் ரோல் செய்முறை பார்க்கலாம்.
சீஸி பனீர் சிகார் ரோல் மிகவும் சுவையானது. இது பெரும்பாலும் விருந்தில் பரிமாறப்படும். மேலும் இது ஒரு சிறந்த சிற்றுண்டி ஆகும். இதை சாப்பிட்டால் பசி தீர்ந்த ஒரு நிறைவான உணர்வை தரும்.
தேவையான பொருட்கள்
1 கப் பனீர், 1/2 கப் சீஸ்-துருவியது, 1/2 கப் கேப்சிகம்-துருவியது, 1/2 கப் ஸ்பிரிங் வெங்காயம்-பொடியாக நறுக்கியது, 2 தேக்கரண்டி புதிய கொத்தமல்லி இலைகள்-பொடியாக நறுக்கியது, உப்பு- சுவைக்கேற்ப, 1 தேக்கரண்டி பூண்டு- துருவியது,1 தேக்கரண்டி கருப்பு மிளகு.
செய்முறை
1.முதலில், ஒரு கிண்ணம் மாவை எடுத்து, தண்ணீரில் மென்மையாக பிசைந்து, அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
2.இதற்கிடையில், ஒரு பாத்திரத்தில் பனீர், சீஸ், குடைமிளகாய், பச்சை வெங்காயம், பூண்டு, உப்பு மற்றும் கருப்பு மிளகு சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக கலந்து பூரணம் தயார் செய்ய வேண்டும்.
3.இப்போது மாவை எடுத்து மீண்டும் நன்றாகப் பிசைந்து அதிலிருந்து சிறு உருண்டைகளை உருவாக்கவும். இந்த உருண்டைகளை கொண்டு சிறிய ரொட்டி துண்டுகளை உருவாக்கவும்.
4.ரொட்டியை மிகவும் மெல்லியதாக உருட்ட வேண்டும். இப்போது ஒரு ரொட்டியை உருட்டிய பிறகு, அதன் மீது லேசாக எண்ணெய் தடவி, காய்ந்த மாவைத் தூவி, இரண்டாவது ரொட்டியை அதன் மீது வைத்து மீண்டும் மெல்லியதாக உருட்டவும்.
5 இதே முறையில் அனைத்து ரொட்டிகளையும் உருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். கடாயை அடுப்பில் வைத்து, அனைத்து ரொட்டிகளையும் லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். சுட்ட பிறகு, இரண்டு ரொட்டிகளும் எளிதில் பிரிந்து விடும்.
6. கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடாக்க வேண்டும். இதற்கிடையில் ரோல்களை தயார் செய்யவும். ஒரு பாத்திரத்தில் சிறிது மாவு எடுத்து பேஸ்ட் பக்குவத்தில் குழைத்துக் கொள்ள வேண்டும்.
7.ஒரு ரொட்டியை எடுத்து அதன் மீது தயார் செய்து வைத்துள்ள மாவு பேஸ்ட்டை தடவவும். இப்போது தயார் செய்த பூரணத்தை நடுவில் வைத்து விளிம்புகளை உள்நோக்கி மடித்து ரோல் செய்ய வேண்டும். இதே முறையில் அனைத்து ரொட்டிகளையும் ரோல் செய்து கொள்ள வேண்டும்.
8.இப்போது தயாரிக்கப்பட்ட அனைத்து ரோல்களையும் சிறிது எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் மிருதுவாக பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். சில்லி பூண்டு டிப் உடன் சூடான ரோல்களை பரிமாறவும்.
மேலும் படிக்க
ODI WC SA vs BAN: தென்னாப்பிரிக்காவை தாங்குமா வங்கதேசம்! மும்பையில் ஆதிக்கம் செலுத்தப்போவது யார்?