(Source: ECI/ABP News/ABP Majha)
Cholesterol: ருசியாக சாப்பிடனும்; ஆனா, கெட்ட கொழுப்பை குறைக்க வேண்டுமா? இந்த சட்னி ட்ரை பண்ணலாமே!
Cholesterol: கொலஸ்ட்ரால் குறைக்க இதை ட்ரை பண்ணி பாருங்க.
இன்றைய காலங்களில், ஒரே இடத்தில் அமர்ந்து பார்க்கும் பணி சூழல். பரபரப்பான வாழ்க்கை முறை; உணவு பழக்கத்தில் மாற்றம் உள்ளிட்ட எண்ணற்ற காரணிகளால் நம் உடலில் தேவைக்கு அதிகமாக கொலஸ்ட்ரால் சேருகிறது. இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. நமது பிஸியான வாழ்க்கை முறை காரணமாக நாம் நமது ஆரோக்கியத்தில் சிறிதும் அக்கறை செலுத்துவதில்லை. எதெல்லாம் சாப்பிட கூடாது என்பது அறிந்திருந்தும் அதை சரியாக பின்பற்ற முடியாமல் போகும். தவறான வாழ்க்கை முறை தேர்வுகள், ஆரோக்கியமற்ற உணவு முறைகள் மற்றும் உடல் உழைப்பின்மை ஆகியவை உடலில் கொலஸ்ட்ரால் திரட்சியின் பிரச்சனைக்கு வழிவகுக்கிறது. கொழுப்பு நிறைந்த உணவுகள், புகைபிடித்தல் அல்லது மது அருந்துதல் ஆகியவற்றால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பு முதன்மையாக ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கெட்ட கொலஸ்ட்ரால் என்பது மெழுகு போன்ற ஒரு பொருளாகும், இது நரம்புகளில் குவிந்து, இரத்த நாளங்கள் சுருங்கத் தொடங்குகின்றன. இது உடலில் நீண்ட காலம் சேர்வது நாட்பட்ட இதய நோய்க்குக் கூட வழிவகுக்கும். இதனால் பல்வேறு உடல்நல பிரச்னைகள் உண்டாகும். உடலின் சீரான இயக்கத்திற்கு கொலஸ்ட்ரால் முக்கியம்தான். ஆனால், அளவோடுதான் இருக்க வேண்டும். உப்பு, சர்க்கரை உள்ளிட்டவற்றை உணவில் அளவோடு சேர்த்துகொள்ள வேண்டும். பாக்கெட்களில் அடைத்து விற்படும் ஃப்ராசஸ்ட் உணவுகளுக்கு பெரிய நோ சொல்லுங்க.
கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, இரத்த ஓட்டம் பாதிக்கப்படும் மற்றும் இரத்தம் சரியாக இதயத்திற்குச் செல்லாதபோது, ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படலாம்.கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதற்கு மிகப்பெரிய காரணம் எண்ணெய் உணவுகள்தான். இதன் காரணமாக, உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் வேகமாக அதிகரிக்கிறது. ட்ரைகிளிசரைடு எண்ணெய் உணவுகளிலிருந்து உருவாகிறது. இது கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம். ட்ரைகிளிசரைடு துகள்கள் நரம்புகளில் சேர்வதை வெந்நீர் தடுக்கிறது. அதனால் தினமும் வெதுவெதுப்பான நீர் அருந்தப் பரிந்துரைக்கப்படுகிறது.
கூடவே பூண்டை வெந்நீரில் சேர்த்து சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் பிரச்சனை குறைகிறது. வெறும் வயிற்றில் பூண்டை தண்ணீருடன் சேர்த்து சாப்பிட்டால், இதயம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.
அதனால் தினமும் காலையில் அல்லது இரவு உறங்குவதற்கு முன்பு நன்கு காய்ச்சிய வெதுவெதுப்பான நீரை அருந்துவதை வழக்கப் படுத்திக் கொள்வது நல்லது. அதோடு மட்டுமல்லாமல், ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை நீக்க ஊட்டச்சத்து நிபுணர் பரிந்துரைக்கும் மின்ட் சட்னி எப்படி செய்வது என்பது பற்றி பார்க்கலாம்.
ஆரோக்கியமாகவும் இருக்கனும் கூடவே ருசியான உணவாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் எடை குறைப்பு, கொலஸ்ட்ரால் குறைக்கிறது எல்லாம் சாத்தியமாகும்.
கொத்தமல்லி - புதினா சட்னி
தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி - 50கி
புதினா - 20கி
பச்சை மிளகாய் - காரத்திற்கு ஏற்ப தேவையான அளவு சேர்த்து கொள்ளவும்.
பூண்டு - 20கி
ஃப்ளாக்ஸ் சீடு ஆயில் - 15கி
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்
தண்ணீர்- அரைப்பதற்கு தேவையான அளவு
Isabgol-15கி
செய்முறை:
கொத்தமல்லி, புதினா உள்ளிட்ட மேலே குறிப்பிட்ட பொருட்களையெல்லாம் மிக்ஸியில் பேஸ்டாக அரைத்தெடுக்கவும். இதை இட்லி, தோசை என நமக்கு பிடித்த உணவோடு சாப்பிடலாம்.
கொத்தமல்லி மற்றும் புதினாவின் நன்மைகள்
இதில் குளோரோபில் நிறைந்தது. அதிக நார்ச்சத்து கொண்டது. கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. நிறைய மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.
பூண்டு
இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்கிறது.
ஆளி விதைகளின் நன்மைகள்
கொழுப்பைக் குறைக்கும் ஒமேகா-3 கொழுப்புச் சத்து நிறைந்தது. ட்ரைகிளிசரைடுகள் மற்றும் இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்துகிறது.
இதுபோன்றவற்றை உடநல ஆலோசகரின் ஆலோசனைகளை பெற்று பயனடையளாம்.