மேலும் அறிய

Cervical Cancer: கர்ப்பவாய் புற்றுநோயின் அறிகுறிகள் என்னென்ன? தடுப்பது எப்படி? விவரம்!

Cervical Cancer: கர்ப்பவாய் புற்றுநோய் அறிகுறிகள், தடுப்பது எப்படி உள்ளிட்டவை பற்றிய விவரங்களை காணலாம்.

உலகெங்கிலும் பெண்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோய்களில் ஒன்றாக இருக்கிறது கர்ப்பவாய் புற்றுநோய். இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் சிகிச்சை பெறலாம் என்று பரவலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 2023ஆம் ஆண்டில் நாட்டில் 3.4 லட்சம் பேர் கர்ப்பவாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தரவுகளை வெளியிட்டிருந்தது. கர்ப்பவாய் புற்றுநோயினால் Cervical Cancer பெண்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் நோக்கில் 2024-ம் ஆண்டு மத்திய இடைக்கால பட்ஜெட்டில்  9-14 வயதுக்குட்பட்டவர்கள் HPV தடுப்பூசி செலுத்துவது ஊக்குவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். 

கர்ப்பவாய் புற்றுநோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அது பற்றிய விழிப்புணர்வு முக்கியம். கர்ப்பவாய் புற்றுநோயின் 99% நிகழ்வுகளுக்கு ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் அல்லது HPV (Human papillomavirus infection) காரணமாகும். இது தொண்டை, பிறப்புறுப்பு மற்றும் தோல் ஆகியவற்றை பாதிக்கும். இது பொதுவாக உடலுறவு மூலம் பரவும் தொற்று ஆகும். உடலுறவில் சுறுசுறுப்பான நபர்களில் பெரும்பாலானோர் தங்கள் வாழ்வின் ஒரு கட்டத்தில், அறிகுறிகளே இல்லாமல் இந்த நோய்த்தொற்றுக்கு ஆளாக நேரிடும் என உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. அதோடு, இதை ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படுது குணப்பதாலும் என்றும் சொல்லப்படுகிறது. இதன் அறிகுறிகள், பாதுகாப்பாக இருப்பது எப்படி என காணலாம்.

பொதுவான அறிகுறிகள்

  • மாதவிடாய் காலம், மாதவிடாய் முற்றிலுமாக நின்ற பிறகு அசாதாரணமாக உதிரப்போக்கு ஏற்படுதல்
  • அசாதாரணமான முறையில் வெள்ளைப்படுதல்
  • வெள்ளைப்படுதல் அதிகமாக இருப்பது, துர்நாற்றம், அடர்த்தியாக வெள்ளைப்படுதல் 
  • பிறப்புறுப்பில் வலி ஏற்படுதல்
  • உடலுறவின்போது வலி 
  • உடலுறவிற்கு பிறகு உதிரப்போக்கு
  • சிறுநீர் கழிக்கும்போது வலி ஏற்படுதல்
  • தலை சுற்றல், உடல் எடை குறைதல்
  • முதுகு, கால் வலி ஏற்படுதல்
  • கால்களில் வீக்கம்
  • பசியின்மை
  • இரத்த சோகை 

16-18 வயது வரை Human papillomavirus (HPV) வைரஸ் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. நோய் எதிப்பு மண்டலம் கடுமையாக பாதிப்பு, குறைந்த வயதில் உடலுறவு கொள்தல், புகைப்பிடிக்கும் பழக்கம், தொடர்ச்சியாக கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்துவது, மரபணு ரீதியிலாக உள்ளிட்ட பல காரணங்களினால் இந்த வகை புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது.

தடுப்பது என்ன?

  • HPV தடுப்பூசி தவறாமல் போட்டுக்கொள்வது நல்லது. 
  • 9-14 வயதுக்குட்பட்டவர்களுக்கும் 30 வயதுக்குள்ளாகவும் இந்த தடுப்பூசியை எடுத்துகொண்டால் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 90% குறைவு என்று சொல்லப்படுகிறது. 
  • பாதுகாப்பான முறையில் (condom பயன்படுத்துவது) உடலுறவு இந்த வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும்.
  • ’Pap smears’ பரிசோதனை செய்துகொள்வது நல்லது. அவ்வபோது பிறப்புறுப்பு அதனை சுற்றியுள்ள பகுதிகள் பற்றி பரிசோதனை செய்வதன் மூலம் அதில் ஏதும் மாற்றம், அசாதாரணமாக ஏதும் இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ளலாம்.
  • புகைப்பழக்கத்தை கைவிடுவது நல்லது.
  • பிறப்புறுப்பு பகுதிகளை சுத்தமாக பராமரிப்பது பரிந்துரைக்கப்படுகிறது.
  • குறிப்பிட்ட கால இடைவெளியில் உடல்நலன் பரிசோதனை செய்வது உடல் பற்றிய விழிப்புணர்வுடன் இருக்க உதவும்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sasikala:
Sasikala: "என்னுடைய என்ட்ரி ஆரம்பம்" பட்டிதொட்டியெங்கும் சென்று மக்களை சந்திப்பேன் - சசிகலா ஆவேசம்
TN 12th Hall Ticket: பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
Breaking News LIVE: அதிமுகவில் சாதி; என்னுடைய எண்ட்ரி ஆரம்பம் - சசிகலா பரபரப்பு பேட்டி
Breaking News LIVE: அதிமுகவில் சாதி; என்னுடைய எண்ட்ரி ஆரம்பம் - சசிகலா பரபரப்பு பேட்டி
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடிVikravandi PMK Candidate | விக்கிரவாண்டியில் அன்புமணி போட்டி!பரபரக்கும் தேர்தல் களம்Modi Meloni | மீண்டும் #MELODI! மெலோனியுடன் மோடி! வைரல் PHOTOS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sasikala:
Sasikala: "என்னுடைய என்ட்ரி ஆரம்பம்" பட்டிதொட்டியெங்கும் சென்று மக்களை சந்திப்பேன் - சசிகலா ஆவேசம்
TN 12th Hall Ticket: பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
Breaking News LIVE: அதிமுகவில் சாதி; என்னுடைய எண்ட்ரி ஆரம்பம் - சசிகலா பரபரப்பு பேட்டி
Breaking News LIVE: அதிமுகவில் சாதி; என்னுடைய எண்ட்ரி ஆரம்பம் - சசிகலா பரபரப்பு பேட்டி
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
Embed widget