Triphala Powder : ஏகப்பட்ட மருத்துவ நன்மைகள் கொண்ட திரிபலா பொடி ! பக்கவிளைவுகளையும் தெரிஞ்சுக்கங்க!
ஆனால் இதை முன்னெச்சரிக்கையுடன் எடுத்துக் கொள்ளாவிட்டால், சில பக்க விளைவுகளும் ஏற்படலாம். அவற்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம்
திரிபலா பொடி :
அது என்ன திருபலா பொடி என்பதுதான் பலருக்கும் எழும் முதல் கேள்வி. திரிபலா என்பது நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய மூன்று மூலிகைகள் சேர்ந்த கூட்டுக்கலவை திரிபலா பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேத மற்றும் மூலிகை தீர்வாகப் பயன்படுத்தப்படுகிறது. இதில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் இருக்கின்றன. அதிகமாக இரவில் உறங்குவதற்கு முன்னதாக இந்த பொடியை எடுத்துக்கொள்கின்றனர். அனைத்து விதமான நாட்டி மருந்து கடைகளிலும் கிடைக்கிறது.ஆயுர்வேதத்தின்படி திரிபலா சாப்பிட்டால் கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் குணமாகும். இந்த பொடியில் பல நன்மைகள் உள்ளன ஆனால் இதை முன்னெச்சரிக்கையுடன் எடுத்துக் கொள்ளாவிட்டால், சில பக்க விளைவுகளும் ஏற்படலாம். அவற்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம்
சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும் :
திரிபலா சாப்பிடும் முன், அதை எந்த அளவில் உட்கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்வது அவசியம். ஒரு நபர் ஒரு நாளில் 500 மி.கி முதல் 1 கிராம் வரை திரிபலாவை மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும் :
திரிபலா நீரிழிவு நோயை எதிர்த்துப் போராடும் பண்புகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. நீரிழிவு மருந்துகளை உட்கொள்ளும் நோயாளிகள் திரிபலா சாப்பிடுவதன் மூலம் இரத்தத்தின் சர்க்கரை அளவு குறைய வாய்ப்பிருக்கிறது.நீரிழிவு நோயாளிகள் திரிபலாவை எடுத்துக்கொள்வதற்கு முன் மருத்துவரை அணுக வேண்டும். திரிபலா பொடியில் உள்ள சர்பிடால் மற்றும் மெந்தோலின் அளவுகள் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க முக்கிய காரணிகளாக இருக்கிறது.
View this post on Instagram
மருந்து பொருட்களின் வீரியத்தை குறைக்கும் :
திரிபலா கல்லீரலை சேதப்படுத்தும் என கூறப்படுகிறது.சைட்டோக்ரோம் பி450 எனப்படும் முக்கியமான கல்லீரல் நொதியின் சரியான செயல்பாட்டில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. மேலும் ஏதேனும் ஒரு நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான அல்லோபதி மருத்துவத்தை நீங்கள் எடுத்துக்கொண்டால் அதன் வீரியத்தை குறைக்கும் தன்மை திரிபலா பொடிக்கு உண்டு.திரிபலா பொடியை சாப்பிடும் முன் மேற்கண்ட விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்