Apple benefits for skin | ஆப்பிள் தோலிலும் இருக்கு அசத்தலான பலன்கள்.. சரும ஆரோக்கியத்துக்கு இதுதான் பெஸ்ட்!
ஆப்பிளில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்து இருக்கிறது. அதனால் தினம் ஒரு ஆப்பிள் எடுத்து கொள்வதால் ஆரோக்கியம் மேம்படும். உடலுக்கு எந்த நோயும் வராது.
தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் மருத்துவரை சந்திக்க தேவை ஏற்படாது என்ற அர்த்தம் கொண்ட ஒரு ஆங்கில பழமொழி உண்டு. அதாவது ஆப்பிளில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்து இருக்கிறது. அதனால் தினம் ஒரு ஆப்பிள் எடுத்து கொள்வதால் ஆரோக்கியம் மேம்படும். உடலுக்கு எந்த நோயும் வராது. அதனால் மருத்துவமனை செல்லும் வாய்ப்பு இருக்காது. இதை தான் ஆங்கில பழமொழி சொல்கிறது
அனைவர்க்கும் மிகவும் பிடித்தமான பழம், பிறந்த குழந்தை ஆறு மாதத்தில் முதல் முதலாக உணவு பழக்கப்படுத்தும் போது , ஒரு ஆப்பிளை வேக வைத்து பிசைந்து குழந்தைக்கு கொடுப்பார்கள். குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த பழத்தை சாப்பிடலாம்.
ஆப்பிள் குறைந்த கலோரிகள் கொண்ட, வைட்டமின் ஏ, வைட்டமின் கே , கொண்டது. இது ஆண்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்தது. பொட்டாசியம், கால்சியம், மக்னேசியம் சத்துகள் நிறைந்த ஒரு பழம். இதை உணவாக தினம் ஒன்று எடுத்து கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும், தசைகள் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கி வகிக்கிறது..
இதை வெளிப்புறமாக பயன்படுத்தினால் தோல் இயற்கையாகவே புத்துணர்வுடன் இருக்கும்.
தோலில் இருக்கும் அடர் நிறம் மாறுவதற்கு. - சிலருக்கு தோலில் நிறம் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். ஒரு பக்கம் மிகவும் அடர் நிறமாக இருக்கும். இது மாறுவதற்கு ஆப்பிள் தோல் பகுதி மிகவும் உதவியாக இருக்கும்.
ஆப்பிள் தோல் பகுதியை தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். ஒரு டீஸ்பூன் ஓட்ஸ் தூள், ஒரு டீஸ்பூன் தேன் , மற்றும் இரண்டு டீஸ்பூன் ஆப்பிள் தோல் இவை மூன்றையும் ஒன்றாக அரைத்து எடுத்து, பேஸ் மாஸ்க் போடவும்,ஒரு 20 நிமிடங்கள் கழித்து கைகளில் தண்ணீர் எடுத்து முகத்தில் நன்றாக மசாஜ் செய்யவும். இதை செய்வதால், சரும குழிகளில் இருக்கும் கழிவுகள் வெளியேறி தோல் புத்துணர்வுடன் இருக்கும். இதை வாரத்திற்கு 2 -3 முறை செய்வதன் மூலம் முகத்தில் இருக்கும் அடர் நிறம் மாறுதல் அடையும்.
சரும வறட்சி - சிலர்க்கு தோல் என்ன செய்தலும், வறட்சி மாறாமல் இருக்கும். இதற்கு முக்கிய காரணம் போதுமான நீர் சத்து கிடைக்காமல் இருப்பது. இது போன்ற சரும வறட்சி பிரச்சனைக்கு, இந்த ஆப்பிள் தோல் மிகவும் உதவியாக இருக்கும்.
ஒரு டீஸ்பூன் ஆப்பிள் தோல், மற்றும் 2 டீஸ்பூன் பால் மற்றும் தேன் சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளவும். இதை முகம், கழுத்து பகுதிகளில் தடவி 20 நிமிடங்கள் ஊற வைத்து விட்டு அதன் பிறகு கழுவி விடலாம். இதை செய்வதன் மூலம் தோல் வறட்சி மாறும். வாரத்திற்கு 2- 3 முறை இதை செய்யவும். இதை செய்வதன் மூலம், சருமத்திற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்கும்.
இப்படி பல வழிகளில் ஆப்பிள் தோல் பயன்படும்.தினமும் ஒரு ஆப்பிள் தோல் நீக்கி விட்டு சாப்பிட்டு இந்த ஆப்பிள் தோலை கொண்டு அழகை மெருகேற்றுங்கள்