Facial | எலுமிச்சை, தேன், தேங்காய் எண்ணெய்.. எதுக்கு Bridal Facial.. இத ட்ரை பண்ணுங்க..!
ஸ்பெஷல் நாட்களுக்காக ரொம்ப வெயிட் பண்ணி இருப்பீங்க. அழகா தெரியறதுக்கு ஒரு வாரம் முன்னாடி பார்லர் போனா மட்டும் பத்தாது..!
ஒவ்வொருவரும், அவுங்க கல்யாண நாள் மிகப்பெரிய நாளாகவும், நண்பர்கள், குடும்பத்தினர் கூடிய கொண்டாட்டமான நாளாக இருக்கும் இந்த நாள் பிடிச்ச மாதிரி டிரஸ் எடுக்குறதுல இருந்து, நகை தேடி தேடி தேர்ந்தெடுக்குறதுல இருந்து, போட்டோகிராபி, மாலை, இப்படி ஒவ்வொன்னும் தேடி தேடி கண்டுபுடிக்குறதுதான் வேலையா இருக்கும். இதுல முகத்தை அழகாக காட்டுறதுக்கு நிறைய செலவு பண்ணி மேக்கப் போடுறதுக்கு, பார்லர் தேடித்தேடி போறதுக்கு, முன்னாடி வீட்ல இருந்து என்ன செய்யலாம்னு இயற்கை சரும நிபுணர்கள் பரிந்துரைக்கும் விஷயங்கள் இது..
கல்யாண பேச்சு ஆரம்பிச்சதுல இருந்து , பல டென்ஷன் வந்து போய், கடைசியா தேதி குறிச்சு ஒரு நாள் வரும். அந்த நாளுக்காக ரொம்ப வெயிட் பண்ணி இருப்பீங்க. அந்த நாள் அழகா தெரியறதுக்கு ஒரு வாரம் முன்னாடி பார்லர் போனா மட்டும் பத்தாது. தேதி குறிச்சதுல இருந்து வீட்ல என்னல்லாம் செய்யலாம். அதுக்காக சில அழகு குறிப்புக்கள் இங்கே..
- கல்யாணத்திற்கு 2/3 மாதங்கள் முன்னதாக சருமத்தைப் பராமரிப்பதில் கவனம் செலுத்தவேண்டும். அப்போது தான் எதிர்பார்க்கும் அழகு முழுமையாக வரும். ஒரு வாரம் முன்பு செய்வது எல்லாம் முழுமையாக இருக்காது. கல்யாண பொண்ணு களை முகத்தில் தெரிய ஆரம்பிச்சதுல இருந்து அழகுபடுத்தவும் ஆரம்பிக்கணும்.
- டயட் - என்ன சாப்பிடறோமோ அது தான் முகத்துல பிரதிபலிக்கும். தினம் பழங்கள், காய்கள், கீரைகள் உணவில் எடுத்துக்கொள்வது, முகத்தை பளபளப்பாக வைக்க உதவும்.தேவையான ஊட்டச்சத்துகள் உணவில் இருந்து கிடைப்பதால், முகம் பொலிவாகவும் தெரியும். இயற்கை உணவுகள் உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றும். கழிவுகள் வெளியேறினால், உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும். இதனுடன், தினம் 2 -3 லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும். இது இரத்த சீராக வைக்க உதவும்.
- முகத்தை பொலிவாக வைக்க ஒவ்வொரு சருமத்தின் தன்மையை பொருத்தும் , பேஸ் மாஸ்க் வேறுபடுகிறது.
சாதரணமான தோல் - முல்தானி மட்டி + எலுமிச்சை இவை இரண்டையும், கலந்து முகத்தில் பூசி, 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
வறண்ட சருமத்துக்கு என்ன செய்யணும்?
தேன் + ரோஸ் வாட்டர் + தயிர் : மூன்றையும் சம அளவு கலந்து முகத்தில் தடவி, 20 நிமிடங்கள் கழித்து கழுவணும்.
பொதுவாகவே சில முக பராமரிப்பு பரிந்துரைகள் - கற்றாழை (1 டீஸ்பூன்) + தக்காளி ( 1 டீஸ்பூன்) + எலுமிச்சை (1/2டீஸ்பூன்) இதை மூன்றையும் கலந்து முகத்தில் தடவவும்.
- உடலை பளபளப்பாக வைக்க - வாரம் இரண்டு முறை பாதாம் எண்ணெய் , ஆலிவ் எண்ணெய் , நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கவும். மஞ்சள் மற்றும் வேப்பிலை குளிப்பதற்கு பயன்படுத்துவது நல்லது.