NLC Recruitment: மாசம் 1 லட்சம் ரூபாய் சம்பளம்; என்.எல்.சி.யில் வேலைவாய்ப்பு..! விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!
NLC Recruitment :நெய்வேலி பழுப்பு நிலக்கரி காப்ரேஷனில் உள்ள வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அரசு நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி காப்பரேஷன் (Neyveli lignite corporation) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவசாகம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மொத்த பணியிடங்கள் 213. தமிழ்நாட்டில் மட்டும் 192 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க மறந்துடாதீங்க.
என்.எல்.சி.
இதற்கு விண்ணப்பிக்க கடந்தாண்டு டிசம்பர் மாதமே கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்திய அரசிற்கு சொந்தமான பழுப்பு நிலக்கரி சுரங்கம் தமிழ்நாட்டில் நெய்வேலியில் அமைந்துள்ளது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட், ) ஆண்டிற்கு 30.6 மில்லியன் டன் பழுப்பு எரிபொருள்கள் இங்கு உற்பத்தியாகிறது. இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம் நவரத்தின மதிப்பைப் பெற்றதாகும். junior Overman (Trainee) , Junior Surveyor (Trainee) , Sirdar (Selection Grade-I) ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தகுதிகள் என்னவென்று காணலாம்.
பணி விவரம்:
junior Overman (Trainee) - 46
Junior Surveyor (Trainee) - 13
Sirdar (Selection Grade-I) -133
.
பணியிடம்:
இந்தப் பணிகளுக்கு நெய்வேலியின் இராஸ்தான், தமிழ்நாடு, ஒடிசா ஆகிய மாநிலங்களில் உள்ள அலுவலகங்களில் நியமிக்கப்படுவர்.
கல்வி தகுதி:
- Junior Overman (Trainee) பணிக்கு மைனிங், பொறியியல் துறையில் டிப்ளமோ, Overman சான்றிதழ் மற்றும் முதலுதவி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- Junior Surveyor (Trainee) பணிக்கு மைனிங், பொறியியல், Mine Surveying, சிவில் பிரிவு பொறியியல், ஆகிய துறைகளில் டிப்ளமோ அல்லது Civil Engineering பாடத்தில் டிகிரி பெற்றிருக்க வேண்டும் மற்றும் என்.டி.சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- Sirdar (Selection Grade-I) பணிக்கு விண்ணப்ப்பிக மைனிங் பொறியியல் துறையில் டிப்ளமோ அல்லது டிகிரி பெற்றிருக்க வேண்டும். Mining Sirdar மற்றும் முதலுதவி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இதற்கு கிரேட் -1 பணிக்கு 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிகளுக்குத் தகுதியானவர்களை எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனை நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு www.nlcindia.in என்ற இணையத்தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது:
https://www.nlcindia.in/new_website/index.htm என்ற இணையதளத்தில் ’Careeers’ பிரிவில் விண்ணப்பிக்கலாம்.
https://www.nlcindia.in/new_website/careers/advt/12-2022.pdf - என்ற இணைப்பை கிளிக் செய்து அறிவிப்பின் முழு விவரத்தை காணலாம்.
விண்ணப்பிக்கக் கடைசி தேதி : 11.03.2023
மேலும் வாசிக்க..
MRB Recruitment 2023: மாசம் ரூ 1.12 லட்சம் சம்பளம்..! 93 பணியிடங்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?