மேலும் அறிய

சென்னையில் இலவச ஸ்கூபா டைவிங் பயிற்சி! கடல்சார் வேலைவாய்ப்பு கனவா? உடனே விண்ணப்பிக்கவும்

ஸ்கூபா டைவிங் என்பது உரிய உபகரணங்களுடன் கடலுக்கு அடியில் செல்வது ஆகும். கடலுக்கு அடியில் சென்று நீண்ட நேரம் இருப்பது முதன்மை திறனாக உள்ளது. இலவச பயிற்சி.

தஞ்சாவூர்: தமிழ்நாடு அரசு சார்பில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் சென்னையில் கட்டணமில்லாமல் ஸ்கூபா டைவிங் பயிற்சி வகுப்பை நடத்துக்கிறது. இந்த பயிற்சி 6 நாட்கள் நடக்கிறது. விருப்பம் உள்ளவர்கள் உடன் உங்களின் விண்ணப்பத்தை அனுப்பிவிடுங்கள்.

தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் ஸ்கூபா டைவிங் வகுப்பு கட்டணமில்லாமல் வழங்கப்படவுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் பதிவு செய்து கலந்துகொள்ளலாம். அருமையான வாய்ப்பு மிஸ் பண்ணீடாதீங்க.

கடல்சார் சுற்றுச்சூழலில் அல்லது நீர் சார்ந்த வேலைவாய்ப்புகளில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்? இத்துறை சார்ந்த வேலைவாய்ப்பை இளைஞர்கள் பெறும் வகையில் தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் சென்னையில் ஸ்கூபா டைவிங் வகுப்பு நடைபெறவுள்ளது. மொத்தம் 6 நாட்களுக்கு இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. இது முழுமையாக கட்டணம் இல்லாத பயிற்சி வகுப்பு என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

ஸ்கூபா டைவிங் என்பது உரிய உபகரணங்களுடன் கடலுக்கு அடியில் செல்வது ஆகும். கடலுக்கு அடியில் சென்று நீண்ட நேரம் இருப்பது முதன்மை திறனாக உள்ளது. கடல் என்பது இயற்கை சூழ்நிலைக்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களை கொண்டது. அதற்கு உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பயணிக்கும் முறையான ஸ்கூபா டைவிங் திறன், ஒரு பொழுதுபோக்காக மட்டுமின்றி, கடல் சார்ந்த தொழிலுக்கு முதன்மை திறனாகவும் உள்ளது. அந்த வகையில், இதற்கான உரிய பயிற்சி பெற வேண்டியது அவசியமாகும்.

இதனைக் கருத்தில் கொண்டு தற்போது தமிழ்நாடு அரசு ஸ்கூபா டைவிங் பயிற்சி வழங்கும் தனியார் பயிற்சி மையத்துடன் இணைந்து, இளைஞர்களுக்கு இப்பயிற்சியை கட்டணமில்லாமல் வழங்குகிறது.

வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் பல்துறைகளில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்து தரும் திறன் பயிற்சி கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது. மேலும், தகுதியுள்ளவர்களுக்கு பயிற்சி காலத்தில் உதவித்தொகையும் வழங்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு தனியார்த்துறையில் வேலைவாய்ப்புகளும் ஏற்படுத்தி தரப்படுகிறது.

இப்பயிற்சியை பெறுவது மூலம் கடல் சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்புகளை பெறலாம். குறிப்பாக, கடல் சார்ந்த ஆய்விற்கு தேவையான தரவுகளை சேகரிக்க ஆழ்கடலுக்கு செல்ல உதவியாக இருக்கலாம். ஆழ்கடல் தூய்மை மற்றும் பராமரிப்பு திட்டங்களில் உதவியாளராகவும், ஆதரவாளராகவும் பணியாற்றலாம்.

கப்பல் மற்றும் துறைமுகங்களில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளில் வாய்ப்பை பெறலாம். அக்குவாரியங்களில் பணி வாய்ப்பை பெறலாம். மேலும், கடல்சார் சாகச சுற்றுலா துறையில் பயிற்சியாளராகவும், உதவியாளராகவும் பணி வாய்ப்பை பெறலாம். இவ்வாறு ஏராளமான வேலைவாய்ப்புகளை பெற வாய்ப்புகள் உள்ளது. எனவே இந்த வாய்ப்பை மிஸ் பண்ணீடாதீங்க.

சென்னையில் இப்பயிற்சி 6 நாட்களுக்கு நேரடியாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வகுப்பு கடந்த மார்ச் 5-ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியை பெற 8-ம் வகுப்பு அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம். 200 மீட்டர் வரை நீச்சல் அடிக்க தெரிந்திருக்க வேண்டும்.

இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/5799 என்ற இணைப்பின் மூலம் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள இளைஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நீச்சல் தெரியும். கடல் சார்ந்த வேலைவாய்ப்பை எதிர்பார்த்து உள்ளவர்களுக்கு இந்த பயிற்சி மிகவும் உதவிகரமாக இருக்கும். எனவே மிஸ் பண்ணீடாதீங்க. உடனே உங்கள் விண்ணப்பத்தை அனுப்பி பயன்பெறுங்கள்.

தலைப்பு செய்திகள்

வெயிலா... மேகமா... மழையா? “குடை எடுத்துச் செல்வோமா... வேண்டாமா?” தஞ்சை மக்கள் குழம்பும் இன்றைய வானிலை
வெயிலா... மேகமா... மழையா? “குடை எடுத்துச் செல்வோமா... வேண்டாமா?” தஞ்சை மக்கள் குழம்பும் இன்றைய வானிலை
ரயில் வரும் போது தண்டவாளத்தில் நின்றவரை காப்பாற்றும் முயற்சி… கேட்கீப்பரும் ரயில் மோதி பலியான சோகம்
ரயில் வரும் போது தண்டவாளத்தில் நின்றவரை காப்பாற்றும் முயற்சி… கேட்கீப்பரும் ரயில் மோதி பலியான சோகம்
சுதந்திர தினத்தை வரவேற்கும் ராஜராஜ சோழனின் கம்பீர சின்னம்... கோபுரம் முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!
சுதந்திர தினத்தை வரவேற்கும் ராஜராஜ சோழனின் கம்பீர சின்னம்... கோபுரம் முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!
ஆன்லைன் மது விற்பனைக்கு எதிர்ப்பு; பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ஆன்லைன் மது விற்பனைக்கு எதிர்ப்பு; பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
Embed widget