மேலும் அறிய

விமானப் பணி கனவா? தாட்கோ வழங்கும் இலவச பயிற்சி! 3 மாதத்தில் வேலை உறுதி, உடனே விண்ணப்பியுங்கள்!

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் இந்த வகுப்பை சேர்ந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் நலன் சார்ந்து பல்துறைகளின் திறன் பயிற்சி வழங்கப்படுகிறது. விமானப்பணி.

தஞ்சாவூர்: விமான நிறுவனத்தில் பணியாற்ற விருப்பம் இல்லாத வாலிபர்கள் யாராவது இருப்பார்களா? ஆனால் அதற்கு பயிற்சி பெறணும். அதற்கு கட்டணம் அதிகம் அல்லவா என்று யோசிக்கிறீர்களா. கவலையை விடுங்கள். 3 மாத கட்டணமில்லா பயிற்சியுடன் வேலை ஏற்படுத்தி தருகிறது தாட்கோ. முழுமையான விபரங்கள் உங்களுக்காக.

தாட்கோ மூலம் விமான முன்பதிவு ஆளுமை மற்றும் கேபின் குழு பணியாளர் பயிற்சி ஆகியவை 3 மாதத்திற்கு கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் வழியாக உடனே உங்கள் விண்ணப்பத்தை அனுப்பிடுங்கள்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு விமான முன்பதிவு ஆளுகை  மற்றும் கேபின் குழு பணியாளர்  ஆகிய பயிற்சிகள் கட்டணமில்லாமல் வழங்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் தாட்கோவின் இணையதளம் மூலம் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் இந்த வகுப்பை சேர்ந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் நலன் சார்ந்து பல்துறைகளின் திறன் பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும், பயிற்சியை முடிக்கும் இளைஞர்களுக்கு அத்துறைகளில் வேலைவாய்ப்புகளும் நல்ல சம்பளத்தில் ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்த வகையில் சமீபத்தில் பல்வேறு திறன் பயிற்சிகளுக்கு தொடர்ந்து அறிவிப்பு வெளியாகி வருகிறது. அழகுக்கலை பயிற்சி, நவீன தொழில்நுட்ப ஏஐ பயிற்சி, சோலர் பேனல் அமைக்கும் பயிற்சி, ஹோட்டல் நிர்வாக பட்டப்படிப்பு ஆகிய அறிவிப்புகள் சமீபத்தில் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து வாலிபர்கள் மத்தியில் பெரிதும் ஆர்வம் கொண்ட விமான முன்பதிவு ஆளுமை மற்றும் கேபின் குழு பணியாளர் பயிற்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இபயிற்சியில் விமான டிக்கெட் முன்பதிவு முறை, வாடிக்கையாளர்கள் சேவை, தொடர்புத் திறன், ஆளுமை மேம்பாடு, விமான பாதுகாப்பு நடைமுறைகள், கேபின் குழு பணிகள் குறித்து தொழில்முறை பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இப்பயிற்சி மூலம் விமான போக்குவரத்து நிறுவனங்களில் பணியாற்ற தேவையான திறன் மற்றும் அனுபவத்தை வாலிபர்கள் பெற முடியும்.

இப்பயிற்சி திருப்பூர் மாவட்டத்தில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 மாத கால இப்பயிற்சி நேரடி வகுப்புகளாக நடைபெறும். பயிற்சி காலத்தில் வாலிபர்கள் தங்கி பயிலும் வகையில் விடுதி மற்றும் உணவு வசதி தாட்கோ மூலம் ஏற்படுத்தி தரப்படும். மேலும், இதற்கான கட்டணத்தை தாட்கோ ஏற்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இபயிற்சியை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுவதுடன், தகுதியுள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இப்பயிற்சியை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சார்ந்தவராக இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். 18 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விருப்பமும், தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் https://tahdco.com/ என்ற தாட்கோவின் இணையதளம் வழியாக பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க இணைப்பு இடம்பெற்று இருக்கும். அதனை கிளிக் செய்து, தேவையான விவரங்களை அளித்து விண்ணப்பிக்க வேண்டும். வகுப்பு சான்றிதழ், புகைப்படம், 12-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள், வருமான சான்றிதழ் ஆகியவை அவசியமாகும். காலம் தாழ்த்தாமல் உடனடியாக உங்கள் விண்ணப்பத்தை அனுப்பிவிடுங்கள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

நீங்கதான் தஞ்சாவூர் எம்.எல்.ஏ., முதியவர்கள் ஆசி, அன்பு மழையில் நனையும் திமுக வேட்பாளர் சண்.ராமநாதன்
நீங்கதான் தஞ்சாவூர் எம்.எல்.ஏ., முதியவர்கள் ஆசி, அன்பு மழையில் நனையும் திமுக வேட்பாளர் சண்.ராமநாதன்
வல்லத்தில் பழமையான சிமெண்ட் குழாய்களை அகற்றி டிஐ பைப்பாக மாற்ற ரூ.2.09 லட்சம் நிதி ஒதுக்கீடு
வல்லத்தில் பழமையான சிமெண்ட் குழாய்களை அகற்றி டிஐ பைப்பாக மாற்ற ரூ.2.09 லட்சம் நிதி ஒதுக்கீடு
தேர்தல் ஆணையமா? கைப்பாவையா? தஞ்சையில் கடுமையாக விமர்சித்தது யார்?
தேர்தல் ஆணையமா? கைப்பாவையா? தஞ்சையில் கடுமையாக விமர்சித்தது யார்?
மயங்கி விழுந்த அதிமுக வேட்பாளர்... நேரில் சென்று சந்தித்த திமுக வேட்பாளர்: இது எங்கு தெரியுங்களா?
மயங்கி விழுந்த அதிமுக வேட்பாளர்... நேரில் சென்று சந்தித்த திமுக வேட்பாளர்: இது எங்கு தெரியுங்களா?
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83%% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03%% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38%% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN 10th 12th Exam 2026: இனி சென்டம் கஷ்டம்தானா? 10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் விடைத்தாளை ஆய்வுசெய்ய உத்தரவு- சாதகமா பாதகமா?
TN 10th 12th Exam 2026: இனி சென்டம் கஷ்டம்தானா? 10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் விடைத்தாளை ஆய்வுசெய்ய உத்தரவு- சாதகமா பாதகமா?
LIK Twitter Review: லவ் இன்சூரன்ஸ் கம்பெனி எக்ஸ்பைரி ஆயிடுச்சா? பிரதிப் ரங்கநாதனின் முதல் ஃப்ளாப்பா? படம் எப்படி இருக்கு?
LIK Twitter Review: லவ் இன்சூரன்ஸ் கம்பெனி எக்ஸ்பைரி ஆயிடுச்சா? பிரதிப் ரங்கநாதனின் முதல் ஃப்ளாப்பா? படம் எப்படி இருக்கு?
கருணாநிதி மறைந்தபோது மெரினாவில் இடம் கொடுக்காதது ஏன்.? இது தான் காரணம்- இபிஎஸ் சொன்ன ரகசியம்
கருணாநிதி மறைந்தபோது மெரினாவில் இடம் கொடுக்காதது ஏன்.? இது தான் காரணம்- இபிஎஸ் சொன்ன ரகசியம்
Chennai Candidates: ஸ்டாலின் Vs விஜய் Vs உதயநிதி - சென்னையில் மட்டும் 419 வேட்பாளர்கள்? யாருக்கு எதிராக எத்தனை பேர் போட்டி?
Chennai Candidates: ஸ்டாலின் Vs விஜய் Vs உதயநிதி - சென்னையில் மட்டும் 419 வேட்பாளர்கள்? யாருக்கு எதிராக எத்தனை பேர் போட்டி?
மெட்ரோ ரயிலில் பயணித்த ஸ்டாலின்.! போட்டி போட்டு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த பயணிகள்
மெட்ரோ ரயிலில் பயணித்த ஸ்டாலின்.! போட்டி போட்டு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த பயணிகள்
Mukul Choudhary: குட்டிப்பயா யாருடா நீ? ”பிறப்பதற்கு முன்பே கிரிக்கெட்டராக சபதம்” தோனியின் சிஷ்யன் முகுல் சவுத்ரி
Mukul Choudhary: குட்டிப்பயா யாருடா நீ? ”பிறப்பதற்கு முன்பே கிரிக்கெட்டராக சபதம்” தோனியின் சிஷ்யன் முகுல் சவுத்ரி
Top 10 News Headlines: மும்மொழிக்கொள்கைக்கு அரசு கெடு, சென்னையில் 419 வேட்பாளர்கள், நாசா அப்டேட் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: மும்மொழிக்கொள்கைக்கு அரசு கெடு, சென்னையில் 419 வேட்பாளர்கள், நாசா அப்டேட் - 11 மணி வரை இன்று
EPS election campaign : அதிமுக ஆட்சி வந்ததும் மூன்றே மாதத்தில் கஞ்சா முழுவதுமாக ஒழிக்கப்படும்.! அடித்து சொன்ன எடப்பாடி பழனிசாமி
அதிமுக ஆட்சி வந்ததும் மூன்றே மாதத்தில் கஞ்சா முழுவதுமாக ஒழிக்கப்படும்.! அடித்து சொன்ன எடப்பாடி பழனிசாமி
Embed widget