மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

Chennai Jobs: நகர்ப்புற சுகாதார மையங்களில் 560 பணியிடங்கள்; விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி! முழு விவரம்!

Chennai Jobs: சென்னை நகர்ப்புற சுகாதார இயக்கத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு இது.

தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்தின் (National Urban Health Mission) கீழ் சென்னை நகர்ப்புற சுகாதார இயக்கம் (Chennai city Urban Health Mission) சார்பில் சென்னை பெருநகர மாநகராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் மருத்துவ மையங்களில் பணிபுரிய காலியாக உள்ள மருத்துவ பணியாளர்களுக்கான ஒப்பந்தம் அடிப்படையிலான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. 

இந்த வேலைவாய்ப்பின் மூலம் 560 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இது ஒப்பந்தம் அடிப்படையான வேலை மட்டுமே என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பணி விவரம்:

  • மருத்துவ அலுவலர் (Medical Officer) -140
  • ஸ்டாஃப் நர்ஸ் (Staff Nurse) - 140
  • MPHW / MultiPurpose Health Worker (Health Inspector - Grade II) - Male -140 
  • உதவியாளர் - 140

மொத்தப் பணியிடங்கள் - 560

பணியிடம்: சென்னை

கல்வித் தகுதி:

  • Medical Officer பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் மருத்துவப் படிப்பில் (M.B.B.S.)தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தில் பதிவு செய்தவராக இருக்க வேண்டும். 
  • Staff Nurse பணிக்கு 10+2 என்பதன் அடிப்படையில் உயர்க்கல்வி படித்திருக்க வேண்டும். நான்கு ஆண்டுகால பி.எஸ்.சி. நர்ஸிங் படித்திருக்க வேண்டும்.  மூன்று ஆண்டு காலம் General Nursing மற்றும்  Midwife துறையில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். இந்தப் படிப்புகள் நர்ஸிங் ஆணையத்தால் அங்கீகாரம் பெற்றதாக இருக்க வேண்டும். 
  • MPHW / MultiPurpose Health Worker பணியிடத்திற்கு +2 படிப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும். பத்தாம் வகுப்பில் தமிழ் மொழியை பாடமாக கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • மேலும், 'Multipurpose Health worker (male) / Health Inspector / Sanitary Inspector course training’ படிப்பு முடித்திருக்க வேண்டும். 
  • உதவி அலுவலர் பணிக்கு எட்டம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

  • மருத்துவ அலுவலர் (Medical Officer) -ரூ. 60,000/-
  • ஸ்டாஃப் நர்ஸ் (Staff Nurse) - ரூ.18,000/-
  • MPHW / MultiPurpose Health Worker (Health Inspector - Grade II) - Male - ரூ.14,000/-
  • உதவியாளர் - ரூ.8,500/-

எப்படி விண்ணப்பிப்பது? 

சுய விவர குறிப்புடன், தேவையான அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரில் சென்று சமர்ப்பிக்கலாம் அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம். 

கவனிக்க:

இந்தப் பணி 11 மாத கால ஒப்பந்தம் அடிப்படையிலானது. நிரந்தர பணி வாய்ப்பு அல்ல. 

பணி தேர்ந்தெடுக்கப்படுவோர் சென்னை நகர்ப்புற சுகாதார இயக்கத்தின் ஒப்பந்ததில் கையெழுத்திட வேண்டும். 

தேர்தெடுக்கப்படுவர்கள் சென்னையில் செயல்படும் சுகாதார மையங்களில் பணியமர்த்தப்படுவர்.

ஒரு மாதத்திற்கு (one month notice) முன்பே அறிவிப்புடன் ஒப்பந்தம் முடித்துக்கொள்ளப்படும். 

எக்காரணமும் இன்றி ஒப்பந்தந்தை முடித்துக்கொள்ள சென்னை பெருநகர மாநகராட்சிக்கு அதிகாரம் உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்கள்: 

சுய விவர குறிப்பு
கல்விச் சான்றிதழ்கள்
அனுபவ சான்றிதழ்
Consent Letter

விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.03.2023 மாலை 5 மணி வரை 

தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு நேர்காணல் குறித்து தகவல் அளிக்கப்படும். நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்களுக்கு அதற்கான போக்குவரத்து செலவு அதாவது Traveling Allowance மற்றும் Dearness Allowance வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அறிவிப்பின் முழு விவரத்திற்கு https://chennaicorporation.gov.in/gcc/CCUHM1/Notification.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
 
முகவரி :

The Member Secretary,
Chennai City Urban Health Mission, 
Public Health Department, Rippon Buildings, 
Chennai - 600 003

கூடுதல் விவரங்களுக்கு 044 - 25619330 என்ற எண்ணில் வேலை நேரங்களில் தொடர்பு கொள்ளலாம்.

https://chennaicorporation.gov.in/gcc/ -என்ற இணையதள முகவரியிலும் தகவல்களை பெறலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK BJP: ”ஏமாற்றிய பாஜக” - திருப்பி கொடுக்க தயாரான திமுக, அசைன்மென்ட் போட்டு கொடுத்த ஸ்டாலின்
DMK BJP: ”ஏமாற்றிய பாஜக” - திருப்பி கொடுக்க தயாரான திமுக, அசைன்மென்ட் போட்டு கொடுத்த ஸ்டாலின்
மக்களே! இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் - Voter IDயில் ஏதும் மாத்தனுமா?
மக்களே! இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் - Voter IDயில் ஏதும் மாத்தனுமா?
IND vs AUS: ஆல் ஏரியாவுலயும் பும்ரா கில்லிடா! சென்னை மருமகனின் செய்கை அப்படி!
IND vs AUS: ஆல் ஏரியாவுலயும் பும்ரா கில்லிடா! சென்னை மருமகனின் செய்கை அப்படி!
Assembly Election Results 2024 LIVE: மகாராஷ்ட்ரா, ஜார்க்கண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. கூட்டணி முன்னிலை
Assembly Election Results 2024 LIVE: மகாராஷ்ட்ரா, ஜார்க்கண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. கூட்டணி முன்னிலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்கடுப்பேற்றிய நிர்வாகிகள்! கிளம்பிய தமிழிசை,வானதி! ஆபரேஷன் அதிமுகSathyaraj About TVK : ”தவெக - வில் பதவி கொடுங்க” ரூட் மாறும் சத்யராஜ்! கடுப்பில் திமுக?Amaran Issue News : ”எனக்கு 1.1 கோடி கொடுங்க” டார்ச்சர் கொடுக்கும் மாணவன் தினுசான சிக்கலில் அமரன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK BJP: ”ஏமாற்றிய பாஜக” - திருப்பி கொடுக்க தயாரான திமுக, அசைன்மென்ட் போட்டு கொடுத்த ஸ்டாலின்
DMK BJP: ”ஏமாற்றிய பாஜக” - திருப்பி கொடுக்க தயாரான திமுக, அசைன்மென்ட் போட்டு கொடுத்த ஸ்டாலின்
மக்களே! இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் - Voter IDயில் ஏதும் மாத்தனுமா?
மக்களே! இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் - Voter IDயில் ஏதும் மாத்தனுமா?
IND vs AUS: ஆல் ஏரியாவுலயும் பும்ரா கில்லிடா! சென்னை மருமகனின் செய்கை அப்படி!
IND vs AUS: ஆல் ஏரியாவுலயும் பும்ரா கில்லிடா! சென்னை மருமகனின் செய்கை அப்படி!
Assembly Election Results 2024 LIVE: மகாராஷ்ட்ரா, ஜார்க்கண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. கூட்டணி முன்னிலை
Assembly Election Results 2024 LIVE: மகாராஷ்ட்ரா, ஜார்க்கண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. கூட்டணி முன்னிலை
Tamilnadu RoundUp: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்தது இதுதான்!
Tamilnadu RoundUp: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்தது இதுதான்!
பயங்கரம்! பெண் போலீசை சரமாரியாக வெட்டிக் கொன்ற கணவன் - தடுக்க வந்த மாமனாருக்கும் வெட்டு
பயங்கரம்! பெண் போலீசை சரமாரியாக வெட்டிக் கொன்ற கணவன் - தடுக்க வந்த மாமனாருக்கும் வெட்டு
Elections 2024: இன்று வெளியாகிறது மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் - பாஜக Vs காங்கிரஸ்+, வெற்றி யாருக்கு?
Elections 2024: இன்று வெளியாகிறது மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் - பாஜக Vs காங்கிரஸ்+, வெற்றி யாருக்கு?
Royal Enfield Scram 440: வந்தாச்சு ராயல் என்ஃபீல்டின் ஸ்க்ராம் 440 - பழசுக்கு புதுசு, என்னவெல்லாம் கொடுத்து இருக்காங்க?
Royal Enfield Scram 440: வந்தாச்சு ராயல் என்ஃபீல்டின் ஸ்க்ராம் 440 - பழசுக்கு புதுசு, என்னவெல்லாம் கொடுத்து இருக்காங்க?
Embed widget