NIWE Recruitment 2022: காற்றாலை நிறுவனத்தில் வேலை வேண்டுமா..? உடனே அப்ளை பண்ணுங்க..!
NIWE Recruitment 2022: தேசிய காற்றாலை நிறுவனத்தில் 16 காலிப் பணியடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
NIWE Recruitment 2022: தேசிய காற்றாலை நிறுவனத்தில் 16 காலிப் பணியடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி குறித்த கூடுதல் விவரங்கள்:
பதவியின் பெயர்:
திட்ட ஒருங்கிணைப்பாளர் (Program Coordinator), திட்ட உதவியாளர் (Project Assistant ), திட்ட பொறியாளர் (Project Engineer) பதவிகள்
காலி இடங்கள் - 16 காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு
கல்வி தகுதியானது பதவிக்கு ஏற்ப மாறுபடுகிறது. எனவே இந்த பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் https://niwe.res.in/assets/Docu/recruitment/Advt%20No.03-2002_25.10.2022.pdf
விண்ணப்பிக்க கடைசி தேதி:
நவம்பர் 11-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டும். https://niwe.res.in/index.php
வயது:
25 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும் OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுளும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உள்ளது. முழு விவரங்களுக்கு விண்ணப்பத்தாரர்கள் இந்த அறிக்கையை பார்த்து தெரிந்து கொள்ளவும். http://www.igcar.gov.in/recruit/JRF_Adv01_2022.pdf
வருமானம் - ரூ. 20,000 - 40,000 வரை
தேர்வு செய்யப்படும் முறை
இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு நடைபெறும். எழுதுத் தேர்வில் தகுதியுடையவர்கள் நேர்முகத் தேர்வுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- முதலில் | NIWE Recruitment 2022 | https://niwe.res.in/careers.php என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- home page- ல் apply here என்பதை கிளிக் செய்யவும்.
- முதல் முறை விண்ணப்பம் செய்வோர் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின் பயனாளர் ஐடி உருவாக்கப்படும்
- ஐடி உருவாகியதையடுத்து, லாக் இன் செய்து அப்ளை செய்யவும்.
- புதிதாக தோன்றிய விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும்.
- அடுத்ததாக பணி குறித்தான அறிவிக்கை இருக்கும். அதனை கிளிக் செய்து பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
- விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் கட்டணத்தை செலுத்திவிட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
- மேலும் விவரங்களுக்கு https://niwe.res.in/assets/Docu/recruitment/Advt%20No.03-2002_25.10.2022.pdf என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
மேலும் படிக்க
AOC Recruitment 2022: ராணுவ ஆயுதப்படையில் 419 பணியிடங்கள்... முழு விவரம் இதோ...