AOC Recruitment 2022: ராணுவ ஆயுதப்படையில் 419 பணியிடங்கள்... முழு விவரம் இதோ...
AOC Recruitment 2022: இந்திய ராணுவ ஆயுதப் படையில் பொருள் உதவியாளர் (material assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
AOC Recruitment 2022: இந்திய ராணுவ ஆயுதப் படையில் பொருள் உதவியாளர்(material assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 419 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதி உடையவர்கள் நவம்பர் 11-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி குறித்த கூடுதல் விவரங்கள்:
பதவியின் பெயர்:
ஆயுதப்படையில் பொருள் உதவியாளர் ( material assistant)
காலி இடங்கள் - 417 காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு*
கல்வி தகுதியானது, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அல்லது Diplomo in material management or diplomo in engineering படித்திருக்க வேண்டும். எனவே இந்த பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும். https://drive.google.com/file/d/17A9zZyvxbzdZW0hDj0CXB56MO6A9WFw9/view
விண்ணப்பிக்க கடைசி தேதி:
நவம்பர் 11-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டும். https://www.aocrecruitment.gov.in/index.html#/
வயது:
18 முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும் OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுளும் வயது வரம்பில் தளர்வு உள்ளது. முழு விவரங்களுக்கு விண்ணப்பத்தாரர்கள் இந்த அறிக்கையை பார்த்து தெரிந்து கொள்ளவும். https://drive.google.com/file/d/17A9zZyvxbzdZW0hDj0CXB56MO6A9WFw9/view
வருமானம் - ரூ. 29,200 - 92,300 வரை
தேர்வு செய்யப்படும் முறை
இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு நடைபெறும். எழுதுத் தேர்வில் தகுதியுடையவர்கள் நேர்முகத் தேர்வுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு 150 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம் 50 , திறனறிதல் 50, பொது அறிவு 25, கணிதம் 25 ஆகிய பிரிவுகளில் 150 கேள்விகள் இடம்பெறும்.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- முதலில் | AOC Recruitment 2022 | https://www.aocrecruitment.gov.in/index.html# என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- home page- ல் login என்பதை கிளிக் செய்யவும்.
- முதல் முறை விண்ணப்பம் செய்வோர் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின் பயனாளர் ஐடி உருவாக்கப்படும்
- ஐடி உருவாகியதையடுத்து, லாக் இன் செய்து அப்ளை செய்யவும்.
- புதிதாக தோன்றிய விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும்.
- அடுத்ததாக பணி குறித்தான அறிவிக்கை இருக்கும். அதனை கிளிக் செய்து பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
- விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் கட்டணத்தை செலுத்திவிட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.